18
March, 2026

A News 365Times Venture

18
Wednesday
March, 2026

A News 365Times Venture

MDMK: "மாநிலங்களவை உறுப்பினர் சீட் தராதது வருத்தம்தான்; ஆனால்…" – துரை வைகோ சொல்வது என்ன?

Date:

மாநிலங்களவை உறுப்பினர் சீட் தராதது வருத்தமாகத்தான் இருக்கிறது என்று ம.தி.மு.க முதன்மை பொதுச்செயலாளர் துரை வைகோ பேசியிருக்கிறார்.

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், ம.தி.மு.க. முதன்மைச் செயலாளருமான துரை வைகோ இன்று (மே 30) திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

வைகோ

அப்போது பேசிய அவர், “மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 1978-ம் ஆண்டு தனது 34-வது வயதில் நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் சிறப்பாகப் பணியாற்றினார். பொன்குடம் உடைந்தாலும் அது பொன்குடம்தான். பாராளுமன்ற புலி வைகோ தான்.

வைகோவிற்குப் பதவி ஒரு பொருட்டல்ல. அவரது மக்கள் பணி எப்போதும் தொடரும். கடந்த ஆண்டு தேர்தல் நேரத்திலேயே மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டோம். பிறகுப் பார்த்துக் கொள்ளலாம் என தி.மு.க-வின் முக்கிய உறுப்பினர்கள் சொல்லி இருந்தார்கள்.

துரை வைகோ
துரை வைகோ

மாநிலங்களவை கிடைக்கும் என நம்பினோம். ஆனால் இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் எங்களுக்கு வருத்தம் இருக்கிறது.

தமிழகத்தின் நலன் கருதி நாங்கள் அதைக் கடந்து செல்வோம். கூட்டணியில் தொடருவோம். தமிழகத்தின் நலனுக்காக கூட்டணியில் இணைந்து பணியாற்றுவோம்” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ರಾಹುಲ್ ಗಾಂಧಿ ಭೇಟಿಯಾಗಬೇಕಿತ್ತು, ಆದ್ರೆ ಆಗಲಿಲ್ಲ- ಮಾಜಿ ಸಚಿವ ಕೆ.ಎನ್ ರಾಜಣ್ಣ

ನವದೆಹಲಿ,ಮಾರ್ಚ್,18,2026 (www.justkannada.in):  ಕಾಂಗ್ರೆಸ್ ನಾಯಕ ರಾಹುಲ್ ಗಾಂಧಿ ಅವರನ್ನ ಭೇಟಿಯಾಗಬೇಕಿತ್ತು...

ഇറാന്‍ ഇന്റലിജന്‍സ് മന്ത്രി എസ്മായില്‍ ഖത്തീബിനെ കൊലപ്പെടുത്തിയെന്ന് ഇസ്രഈല്‍

ടെല്‍ അവീവ്: ഇറാന്റെ ഇന്റലിജന്‍സ് മന്ത്രി എസ്മായില്‍ ഖത്തീബിനെ വധിച്ചതായി ഇസ്രഈല്‍...

“ராகுல் காந்தியைப் பார்க்கும்போது அசௌகரியமாக இருக்கிறது" – கங்கனா ரனாவத்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. எரிவாயு தட்டுப்பாடு முதல் ஈரான்...

Pinnelli Ramakrishna Reddy: పిన్నెల్లి రామకృష్ణారెడ్డికి భారీ ఊరట.. బెయిల్ మంజూరు

Pinnelli Ramakrishna Reddy: వైఎస్‌ఆర్‌ కాంగ్రెస్‌ పార్టీ సీనియర్‌ నేత, మాజీ...