16
March, 2026

A News 365Times Venture

16
Monday
March, 2026

A News 365Times Venture

Seeman: "எனக்கு நியாயம் கிடைக்கவில்லை; இதுதான் என் கடைசி வீடியோ" – சீமான் விவகாரத்தில் விஜயலட்சுமி

Date:

“இனிமேல் போராட்டம் செய்துகொண்டும், புகார் கொடுத்துக்கொண்டும் இருக்கப் போவதில்லை. இதுதான் எனது கடைசி வீடியோ” என்று சீமான் விவகாரம் குறித்து விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், “எனக்கு நடந்தவற்றை மீடியா மூலம் வெளியுலகிற்குச் சொல்ல வேண்டும் என நினைத்தேன். உச்ச நீதிமன்ற தீர்ப்பில் செட்டில்மென்ட் என்று சொல்லி இருக்காங்க. இதனைப் பார்த்ததும் பலர் சீமான் எனக்கு ரூ.10 கோடி இரவோடு இரவாக கொடுத்துவிட்டார். ஈழத்தமிழர்கள் காசை விஜயலட்சுமிக்குக் கொடுத்துட்டார் என சிலர் அபாண்டமாகப் பழி போட்டுவிடுவார்கள். அதனைத் தவிர்க்கவே தற்போது இந்த வீடியோ போடுகிறேன். நேற்று உச்ச நீதிமன்றத்தில் சீமான் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

சீமான்

அதில் சென்னையில் பதியப்பட்ட FIR மீது காவல்துறை விசாரணை மேற்கொள்ளக் கூடாது என வழக்கு தொடர்ந்து இருந்தார். காவல்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் எனக்காக வாதிட்டனர். உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு கொடுத்தார். அதன் பெயரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால், உச்ச நீதிமன்றத்தில் என் சார்பாக யாரும் பேசவில்லை. சீமான் கோரிக்கை மட்டுமே கேட்டு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உயர் நீதிமன்றத்தில் எனக்காக வாதிட்டவர்கள் ஏன் நேற்று உச்ச நீதிமன்றத்தில் யாருமே போய் கேட்கவில்லை? இனி எனக்கு எந்த நீதியும் நியாயமும் கிடைக்காது எனத் தெரிந்து கொண்டேன்.

விஜயலட்சுமி

இனி நான் போராடப்போவதில்லை. இதுவரை மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. இப்போது கூட நான் இந்த வீடியோ ஏன் பதிவிடுகின்றேன் என்றால், எனக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை என்பதை தெரியப்படுத்த தான். இதுதான் எனது கடைசி வீடியோ” என நடிகை விஜயலட்சுமி தெரிவித்திருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Oscars 2026 : ఆస్కార్ బెస్ట్ యాక్టర్ గా నల్లజాతీయుడి అరుదైన రికార్డు

లాస్ ఏంజిల్స్: ప్రపంచ చలనచిత్ర రంగంలో అత్యున్నత పురస్కారాలైన 98వ అకాడమీ...

2026 നിയമസഭാ തെരഞ്ഞെടുപ്പ് നിര്‍ണായകം; കേരളത്തില്‍ എല്‍.ഡി.എഫ് വീണ്ടും അധികാരത്തില്‍ വരും: ഡി. രാജ

ചെന്നൈ: കേരളത്തില്‍ മൂന്നാം തവണയും എല്‍.ഡി.എഫ് അധികാരത്തില്‍ വരുമെന്ന് സി.പി.ഐ ജനറല്‍...

"உயிருடன் இருந்தால் விடமாட்டோம்" – நெதன்யாகுவுக்கு ஈரான் இராணுவம் நேரடி கொலை மிரட்டல்!

கடந்த பிப்ரவரி 28 அன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான்...

Netanyahu: ‘అవును నేను చనిపోయాను’.. మరో వీడియో విడుదల చేసిన ఇజ్రాయెల్ ప్రధాని నెతన్యాహు..

ఇరాన్ దాడిలో ఇజ్రాయెల్ ప్రధాని బెంజమిన్ నెతన్యాహు చనిపోయారని సోషల్ మీడియాలో...