14
May, 2026

A News 365Times Venture

14
Thursday
May, 2026

A News 365Times Venture

“நாளையும் என்னால் ஆஜராக முடியாது… உங்களால் என்ன செய்ய முடியும்?" – சீமான் ஆவேசம்

Date:

நடிகை விஜயலட்சுமியின் புகாரின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை 12 வார காலங்களுக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. இது தொடர்பாக சீமான் இன்று ஆஜராக வேண்டிய நிலையில், அவரின் வழக்கறிஞர்கள் காவல்நிலையத்தில் ஆஜராகி விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனக் கடிதம் கொட்த்தனர். இதற்கிடையில், காவல்துறை, சீமான் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது. அதை அகற்றிய சீமானின் வீட்டு உதவியாளர், காவலாளிக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் காவலாளி கைது செய்யப்பட்டார்.

சீமான்

இது தொடர்பாக கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சீமான், “என் தொடர்பான வழக்கில் காட்டப்படும் இந்த அவசரம் பொள்ளாச்சி வழக்கிலோ, அண்ணா பல்கலைக் கழக வழக்கிலோ காண்பிக்கவே இல்லையே. இது எந்தமாதிரியான அரசு என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள். எப்போதெல்லாம் தேர்தல் நெருங்குகிறதோ, எப்போதெல்லாம் என்னை சமாளிக்க முடியாமல் இந்த அரசு திணறுகிறதோ அப்போதெல்லாம் அந்தப் பெண்ணை தூண்டிவிட்டு வழக்கு, விசாரணை எனக் கூறுவார்கள். நான் இங்கேதானே இருக்கிறேன்.

வளசரவாக்கம் காவல்நிலையமும் அங்கே தானே இருக்கிறது. இப்போது உடனே வரவேண்டிய அவசரம் என்ன? இப்போது கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். நாளையும் என்னால் ஆஜராக முடியாது… என்னை என்ன செய்ய முடியும்… இதற்கு முன்பே ஒருமுறை இதே புகாரின் அடிப்படையில் காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரிக்கப்பட்டேன். இப்போதும் அதே விசாரணை தானே. இதற்கு ஏன் இவ்வளவு அவசரம். நாளை வேறு ஒரு இடத்தில் கட்சிப் பணி இருக்கிறது. அதனால் நாளையும் ஆஜராக முடியாது” என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

അച്ചടക്കം പാലിച്ചിട്ടും അവഗണന; മന്ത്രിസഭയില്‍ ചേരില്ല: അതൃപ്തി പ്രകടിപ്പിച്ച് ചെന്നിത്തല

തിരുവനന്തപുരം: വി.ഡി സതീശനെ മുഖ്യമന്ത്രിയായി പ്രഖ്യാപിച്ചതില്‍ കോണ്‍ഗ്രസ് നേതാവ് രമേശ് ചെന്നിത്തലയ്ക്ക്...

TVK: சேலத்தில் நடைமுறைக்கு வந்தது சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை; பணிகள் என்ன?

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பதவி ஏற்றிருக்கும் ஜோசப் விஜய், பெண்கள் பாதுகாப்பை...

MLA Ramakrishna Reddy: ప్రతి పౌరుడు పొదుపు చర్యలు పాటించాలి!

దేశ ఆర్థిక పరిస్థితులను దృష్టిలో పెట్టుకుని ప్రధానమంత్రి నరేంద్ర మోడీ ఇచ్చిన...

ಬಿಜೆಪಿ ಹಿಜಾಬ್ ವಿರೋಧಿ ಅಲ್ಲ, ಆದರೆ ಶಾಲೆಯಲ್ಲಿ ಸಮವಸ್ತ್ರ ಇರಲಿ- MLC ಸಿ.ಟಿ ರವಿ

ಬೆಂಗಳೂರು,ಮೇ,14,2026 (www.justkannada.in):  ಶಾಲಾ ಕಾಲೇಜುಗಳಲ್ಲಿ ಹಿಜಾಬ್ ಗೆ ಅವಕಾಶ ವಿಚಾರ...