26
September, 2026

A News 365Times Venture

26
Saturday
September, 2026

A News 365Times Venture

NEP: “ஏன் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்..?'' – அமைச்சர் பொன்முடி விளக்கம்

Date:

அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 1969 முதல் 2000 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார். அப்போது, “எல்லோரும் படிக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சி. தற்போது, மத்திய அரசு மூன்றுமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த முயற்சி செய்து வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இருந்தபோதிலும், இந்தியை கட்டாயமாக படிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு எதிராக தமிழக அரசு உறுதியாக நிற்கிறது.

அமைச்சர் பொன்முடி

நாம் ஏன் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம் என்பதை நீங்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். மூன்றாவது, ஐந்தாவது, எட்டாவது வகுப்புகளில் நுழைவுத் தேர்வு கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புகளை தடுக்கக்கூடிய ஒன்று. விழுப்புரம் கல்லூரியில் BA சேர வேண்டுமென்றாலும், ஒரு நுழைவுத் தேர்வு எழுதிப் பாஸ் செய்தால்தான் அனுமதி கிடைக்கும். இதனால் பணாம்பட்டு, கோலினூர் போன்ற கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு குறைந்து விடும்.

தமிழ் மீடியம், ஆங்கில மீடியம் இரண்டே போதும், மூன்றாவது மொழியாக இந்தி எதற்கு?. ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழி, அதில் நாம் திறமையாக இருப்பதே முக்கியம். இந்திமீது எங்களுக்கு வெறுப்பு இல்லை, விருப்பமானவர்கள் அதைப் படிக்கலாம். ஆனால், அதை கட்டாயமாக்க முடியாது. நாங்கள் இருமொழிக் கொள்கையை மட்டும் ஏற்கிறோம், மும்மொழிக் கொள்கையை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. நீங்கள் அனைவரும் இருமொழிக் கொள்கையை ஆதரிக்கிறீர்களா… மும்மொழிக் கொள்கை நம்மீது திணிக்கப்பட வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எல்லா நாடுகளுக்கும் உடனடி தேவை 'இது' தான்… "7 நாள்களில் ஹார்முஸ்.!" குட் நியூஸ் சொல்கிறதா ஈரான்?

ஹார்முஸ் நீர்ச்சந்தி விரைவில் திறக்கப்படுகிறது போலும். அதற்கான அனைத்து பாசிட்டிவ் சிக்னல்களும்...

Cyclone Arnab: ‘సైక్లోన్ అర్నబ్’ పేరుతో వైరల్.. ఐఎండీ ఏం చెప్పిందంటే..!

ప్రస్తుతం దేశంలో పలు రాష్ట్రాల్లో భారీ నుంచి అతి భారీ వర్షాలు...

ದಸರಾ ಸಂಭ್ರಮ: ಟ್ರಾಫಿಕ್ ನಿರ್ವಹಣೆಗೆ ಡಿಜಿಟಲ್ ತಂತ್ರಜ್ಞಾನ, ಸುಗಮ ಸಂಚಾರಕ್ಕೆ ಹೊಸ App.

  ಮೈಸೂರು, ಸೆ.25, 2026: ವಿಶ್ವವಿಖ್ಯಾತ ಮೈಸೂರು ದಸರಾ ಮಹೋತ್ಸವಕ್ಕೆ ದಿನಗಣನೆ...

ഗ്യാനേഷ് കുമാറിന് കുറഞ്ഞത് പത്മഭൂഷണെങ്കിലും നല്‍കണമെന്ന് ബി.ജെ.പി നേതാവ്

ന്യൂദല്‍ഹി: രാജ്യത്തെ മുഖ്യ തെരഞ്ഞെടുപ്പ് കമ്മീഷണര്‍ ഗ്യാനേഷ് കുമാര്‍ കുറഞ്ഞത് ഒരു...