9
March, 2026

A News 365Times Venture

9
Monday
March, 2026

A News 365Times Venture

“பாம் வைப்பதும் அவரே.. எடுப்பதும் அவரே…'' -எடப்பாடியை விமர்சித்த அமைச்சர் ரகுபதி

Date:

எதிர்கட்சி தலைவர் எடப்பாடியை விமர்சித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிவு ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், “ சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் வளையமாதேவியில் டாஸ்மாக் பாரில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வீடியோ ஒன்று வெளியானது. அதனை எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு ‘அய்யகோ, திமுகவை பாருங்கள்’ என்று எழுதியிருந்தார். இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்தால் வீடியோவை வெளியிட்டது அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க வட்ட செயலாளராக இருந்த ராஜாவின் உறவினரான ரவி என்பவர் என்பதும் அவருக்கு கள்ள சாராயம் வாங்கி வந்து கொடுத்ததே அதிமுகவின் ராஜா தான் என்பதும் விசாரணையில் தெரியவந்து அந்த அதிமுக பிரமுகர் ராஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

எடப்பாடி பழனிசாமி

கடந்த சில நாள்களாக எடப்பாடி முன்வைத்த குற்றச்சாட்டுகளான அண்ணாநகர் பாலியல் வழக்கு, காரில் திமுக கொடிகட்டிய ரவுடிகள்  தொடங்கி நேற்றைய கள்ளச்சாராய வீடியோ வரை குற்றச்சாட்டுகள் அனைத்திலும் அடுத்த நாளே அவர்கள் அதிமுகவினர் எனத் தெரிய வருகிறது; கைது செய்யப்படுகிறார்கள்.

பாம் வைப்பதும் நானே எடுப்பதும் நானே என்ற கணக்கில் அவசர அவசரமாக எடப்பாடி ட்வீட் செய்வதும், அதனை அதிமுகவினர் பரப்புவதும் உண்மை வெளியானவுடன் அமைதி காப்பதும் என ஒரே ‘பேட்டர்ன்’தான். ஒரு அஜெண்டாவுடனேயே செயல்பட்டு வருகிறார். 

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

எதிர்க்கட்சித் தலைவர் என்பது அரசியலில் முக்கியமான பொறுப்பு. ஆனால் சொந்த கட்சியினர் ஒரு குற்றத்தில் ஈடுபட்டது தெரிய வந்தால் உடனே அரசை குறை கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டு அந்த சம்பவத்தையே திசை மாற்றி மக்களை குழப்பம் பணியைத்தான் எடப்பாடி செய்து வருகிறார். ஒருவேளை ‘செட்டிங்’ செய்கிறார்களோ என்றும் சந்தேகம் வருகிறது. இப்படிப்பட்ட மலிவான அரசியல் செய்வதை விடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆக்கப்பூர்வமான எதிர்கட்சித் தலைவராக செயல்படுவாரா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

പ്രതിരോധം മാത്രം, സംഘര്‍ഷത്തിലേക്ക് രാജ്യത്തെ വലിച്ചിഴക്കില്ല; ഇറാനെ ആക്രമിച്ചെന്ന ഇസ്രഈല്‍ വാദം തള്ളി യു.എ.ഇ

അബുദാബി: ഇറാനില്‍ നിന്നുള്ള തുടര്‍ച്ചയായ വ്യോമാക്രമണത്തിന് മറുപടിയായി യു.എ.ഇ ഇറാനിലെ ജലശുദ്ധീകരണ...

ஈரோட்டில் 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' பயணம்; இபிஎஸ் ஆவேசப் பேச்சு | Photo Album

மிரட்டும் பா.ஜ.க, முரண்டு பிடிக்கும் எடப்பாடி - தொகுதிப் பங்கீட்டில் யார்...

Aishwarya Rai-Abhishek: పెళ్లిలో డ్యాన్స్‌తో ఇరగదీసిన ఐశ్వర్య-అభిషేక్ జంట.. వీడియో వైరల్

ముంబైలో జరిగిన ఓ పెళ్లి వేడుకలో ఐశ్వర్యరాయ్-అభిషేక్ బచ్చన్ దంపతులు సందడి...

ഒസ്മാന്‍ ഹാദിയുടെ കൊലപാതകം; രണ്ട് പേരെ അറസ്റ്റ് ചെയ്ത് ബംഗാള്‍ പൊലീസ്

ധാക്ക: ബംഗ്ലാദേശിലെ വിദ്യാര്‍ത്ഥി നേതാവ് ഷെരീഫ് ഒസ്മാന്‍ ഹാദിയുടെ കൊലപാതകവുമായി ബന്ധമുണ്ടെന്ന്...