12
April, 2026

A News 365Times Venture

12
Sunday
April, 2026

A News 365Times Venture

கடுமையான காயங்கள்; காலை இழந்த மொஜ்தபா காமேனி? – வெளியான அதிர்ச்சி தகவல்!

Date:

அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

அலி காமேனி மறைவிற்கு பிறகு அவரது மகன் மொஜ்தபா காமேனி ஈரானின் உச்ச தலைவராக பொறுபேற்றார்.

மொஜ்தபா காமேனி

புதிய உச்ச தலைவராக யாரை நியமித்தாலும் கொல்லுவோம் என அமெரிக்கா கூறியிருந்த நிலையில் மார்ச் 9 ஆம் தேதி இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் மொஜ்தபா காமேனி காயமடைந்திருப்பதாக ஈரான் தெரிவித்திருந்தது.

ஆனால் தற்போது மொஜ்தபா காமேனி முகம் சிதைக்கப்பட்டு, அடையாளம் காண முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

மேலும் இந்தத் தாக்குதலின் விளைவாக அவரது ஒரு கால் அகற்றப்பட்டுள்ளதாகவும், கல்லீரல் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மொஜ்தபா காமேனி
மொஜ்தபா காமேனி

இதன் காரணமாகவே அவர் பொதுவெளியில் தோன்றாமல் ரகசிய இடத்தில் இருந்தே பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. உடல்ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர் மனதளவில் தெளிவாக இருப்பதாகவும், தொலைபேசி வாயிலாக நாட்டை வழிநடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் ஈரான் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக அவரின் உடல்நிலை குறித்த எந்த தகவலும் இல்லை.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

KPCC ಅಲ್ಪಸಂಖ್ಯಾತ ಘಟಕದ ಅಧ್ಯಕ್ಷ ಸ್ಥಾನಕ್ಕೆ ಅಬ್ದುಲ್ ಜಬ್ಬಾರ್ ರಾಜೀನಾಮೆ: ಪರಿಶೀಲಿಸುತ್ತೇನೆಂದ ಡಿಕೆಶಿ

ಬೆಂಗಳೂರು,ಏಪ್ರಿಲ್,11,2026 (www.justkannada.in): ದಾವಣಗೆರೆ ದಕ್ಷಿಣ ವಿಧಾನಸಭಾ ಉಪಚುನಾವಣೆಯಲ್ಲಿ ಕಾಂಗ್ರೆಸ್ ಪಕ್ಷದಲ್ಲಿ...

കൊവിഡിനെ അതിജീവിച്ചതുപോലെ പശ്ചിമേഷ്യന്‍ പ്രതിസന്ധികളെയും ഇന്ത്യയ്ക്ക് നേരിടാനാകും: രാജ്‌നാഥ് സിങ്

ലഖ്നൗ: ലോകം നേരിടുന്ന ഏത് അടിയന്തര സാഹചര്യങ്ങളെയും നേരിടാന്‍ രാജ്യം പൂര്‍ണ...

Story Board: మమత మరోసారి సీఎం అవుతారా..? బీజేపీ గెలుపు ఉట్టి కొడుతుందా?

బెంగాల్ ఎన్నికలు దేశం దృష్టిని ఆకర్షిస్తున్నాయి. నాలుగోసారి అధికారం కోసం మమత...

ಸಂಪುಟ ವಿಸ್ತರಣೆ  ಸಿಎಂ, ವರಿಷ್ಠರಿಗೆ ಬಿಟ್ಟಿದ್ದು : ಒತ್ತಾಯ ಮಾಡೋರು ಮಾಡ್ಲಿ- ಸಚಿವ ಶಿವಾನಂದ ಪಾಟೀಲ್

ಹಾವೇರಿ,ಏಪ್ರಿಲ್,11,2026 (www.justkannada.in):  ಸಚಿವ ಸಂಪುಟ ವಿಸ್ತರಣೆ ವಿಚಾರ ಸಿಎಂ ಮತ್ತು...