5
April, 2026

A News 365Times Venture

5
Sunday
April, 2026

A News 365Times Venture

''என்னுடைய நிலைப்பாட்டைத் தள்ளி வைக்கிறேன்; காட்டுமன்னார்கோவில் தொகுதியில் ஜோதிமணி போட்டி!': திருமா!

Date:

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போகும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன். திமுக கூட்டணியிலிருந்து விசிக-விற்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

திருமா

அதில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுவதாக அறிவிப்பு வந்திருந்தது.

கடந்த சில நாட்களாக, இப்படியான முடிவை எடுத்ததற்காக திருமாவளவனுக்கு கூட்டணி தலைமையிலிருந்து பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக பேசப்பட்டன.

அப்படியான பேச்சுகள் மேலோங்கி இருக்கும் நேரத்தில் சட்டமன்ற தேர்தல் போட்டியிலிருந்து பின் வாங்குவதாக இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசியிருக்கிறார் திருமா.

அதில் அவர், “2026-க்குப் பிறகு அரசியல் சூழல் மாறும். அதனால் நான் சட்டமன்றத்தில் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.

ஆனால், திருமாவளவன் துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார் என வதந்திகளை கிளப்பிவிட்டனர். கூட்டணியே பாதிக்கப்படும் அளவிற்கு கருத்து பரப்பப்படும் சூழலில் அதனை கவனிக்க வேண்டியிருக்கிறது. எந்தவொரு யுத்தகளத்தில் முன்நோக்கி போவது போல பின்நோக்கி வருவதும் முக்கியமானது.

மக்களவையில் SIR குறித்து திருமா பேச்சு
மக்களவையில் திருமா

பதவிக்காக நான் போட்டியிடவில்லை. தொங்கு சட்டமன்றம் வரும், அதனால் நான் போட்டியிடுகிறேன் என பேசுகிறார்கள். என்னுடைய நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன். உத்தியை மாற்றி வைக்கிறேன்.

எனவே, நான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதியில் மறைந்த தலைவர் இளையபெருமாளின் இளைய மகன் ஜோதிமணி வேட்பாளராக போட்டியிடுவார்.” எனத் தெரிவித்திருக்கிறார்.

ஜோதிமணி

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಗ್ಯಾಸ್ ಅಭಾವ: ಕೇಂದ್ರ ಸರ್ಕಾರವೇ ಸರಿಪಡಿಸಬೇಕು- ಮಲ್ಲಿಕಾರ್ಜುನ ಖರ್ಗೆ

ಬೆಂಗಳೂರು,ಏಪ್ರಿಲ್,4,2026 (www.justkannada.in):  ಮಧ್ಯಪ್ರಾಚ್ಯದಲ್ಲಿ ಯುದ್ದ ಹಿನ್ನೆಲೆಯಲ್ಲಿ ದೇಶದಲ್ಲಿ ಎಲ್ ಪಿಜಿ...

വിദേശനയം തിരുത്തണം, മറ്റുരാജ്യങ്ങളിൽ നിന്നും എൽ.പി.ജി ഇറക്കുമതി ചെയ്യണം: ഖാർഗെ

ന്യൂദൽഹി: പാചകവാതക പ്രതിസന്ധി അടിയന്തരമായി പരിഹരിക്കണമെന്ന് എ.ഐ.സി.സി അധ്യക്ഷനും രാജ്യസഭയിലെ പ്രതിപക്ഷ...

"அன்புமணியும், எடப்பாடியும் இதோட இரண்டு பேரும் நிறுத்திகோங்க.!"- பிரேமலதா விஜயகாந்த் எச்சரிகை

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாமக தலைவர் அன்புமணியும் அநாகரிக...

RC17 : దేవిశ్రీ లేకుండా సుకుమార్ సినిమా.. రేసులో ఇద్దరు స్టార్ మ్యూజిక్ డైరెక్టర్స్

మెగా పవర్ స్టార్ రామ్ చరణ్ మరియు లెక్కల మాస్టర్ సుకుమార్...