8
April, 2026

A News 365Times Venture

8
Wednesday
April, 2026

A News 365Times Venture

"நீண்ட நாள்களுக்கு முன்பே கட்சித் தலைமைக்குச் சொல்லிவிட்டேன்" – ஊகங்களுக்கு விளக்கமளித்த அண்ணாமலை

Date:

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பா.ஜ.க வேட்பாளரின் பட்டியல் நேற்று வெளியானது. அதில் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.

கோவை சிங்காநல்லூரில் போட்டியிடலாமா என்பது குறித்து அண்ணாமலை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்ததாகவும், ஆனால் அந்தத் தொகுதி அதிமுகவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த அண்ணாமலை பியூஷ் கோயிலைச் சந்தித்து, `நான் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை’ எனத் தெரிவித்திருந்ததாகவும் கூறப்பட்டது.

செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை

இந்த நிலையில், இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “புதுச்சேரி பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய பிரதமர் மோடி, இன்று கொச்சின் செல்வதற்கு முன்பாக தமிழக பா.ஜ.க நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். இது ஒரு வழக்கமான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைக் கூட்டமே தவிர, இதில் சிறப்புத் திட்டங்கள் ஏதுமில்லை.

சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் நான் போட்டியிடுவது குறித்துப் பல்வேறு யூகங்கள் எழுப்பப்படுகின்றன. ஆனால் உண்மையில் நான் இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. இதை நீண்ட நாள்களுக்கு முன்பே கட்சித் தலைமைக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துவிட்டேன். பி.எல். சந்தோஷ், நிதின் நவீன் மற்றும் பி.எஸ். கோயல் போன்ற மேலிடத் தலைவர்களிடம் எனது விருப்பத்தை ஒரு வாரத்திற்கு முன்பே தெளிவுபடுத்திவிட்டேன்.

நான் ஒரு தொகுதியில் மட்டும் நின்று போட்டியிடுவதை விட, தமிழகம் முழுவதும் உள்ள 27 பா.ஜ.க வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக தீவிரப் பிரச்சாரம் செய்வதையே கடமையாகக் கருதுகிறேன்.

அண்ணாமலை
அண்ணாமலை

2024 நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிட்டபோது, மற்ற வேட்பாளர்களுக்காக முழுமையாகப் பிரசாரம் செய்ய முடியவில்லையே என்ற ஒரு மனக்குறை எனக்கு இருந்தது. அதை இம்முறை சரிசெய்ய விரும்புகிறேன். தொண்டர்களின் ஏமாற்றத்தைப் புரிந்து கொள்கிறேன்.

அதேநேரம், எல்லாப் போர்களையும் ஒரே நேரத்தில் தொடுக்க முடியாது. 2026 தேர்தலைப் பொறுத்தவரை தி.மு.க-வின் தவறுகளை மக்கள் முன் கொண்டு செல்வதே எனது தற்போதைய பணி. ஏப்ரல் 21-ம் தேதி வரை முழு கவனமும் பிரச்சாரத்தில் மட்டுமே இருக்கும். அதன் பிறகு மற்ற விஷயங்களைப் பேசலாம்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

MYSORE: ನೀರಿನ ದರ ಏರಿಕೆ ವಿವಾದ – “ಅರ್ಧ ಪೈಸೆಗೆ ರಾಜಕೀಯ ಬೇಡ” ಎಂದು ಎಂ. ಲಕ್ಷ್ಮಣ್ ಕಿಡಿ

  ಮೈಸೂರು, April.08,2026: ನಗರ ಪಾಲಿಕೆ ನೀರಿನ ದರ ಏರಿಕೆ ವಿಚಾರದಲ್ಲಿ...

ട്രക്കിങ്ങിനിടെ കാണാതായ ശരണ്യയുടെ അതിജീവന കഥ വ്യാജം; പരാതിയുമായി ബി.ജെ.പി, അന്വേഷണം വേണമെന്നുമാവശ്യം

  കുടക്: തടിയന്‍ഡമോളില്‍ ട്രക്കിങ്ങിനിടെ കാണാതായ മലയാളി യുവതി ജി.എസ്. ശരണ്യയ്‌ക്കെതിരെ...

'காத்திருந்து எலெக்சனுக்கு 30 நாளுக்கு முன்னாடி அவதூறு பரப்புறாங்க – நெல்லையில் விஜய் ஆவேசம்!

தவெக தலைவர் விஜய் இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்....

YS Jagan: అమరావతి అవినీతి గని.. MAVIGUN ప్రణాళికే బెస్ట్‌..!

YS Jagan: కూటమి ప్రభుత్వంపై తీవ్రస్థాయిలో విమర్శలు గుప్పించారు ఆంధ్రప్రదేశ్‌ మాజీ...