4
April, 2026

A News 365Times Venture

4
Saturday
April, 2026

A News 365Times Venture

"ஜனநாயகன் படத்தை வெளியிட விடாம கூட்டு சூழ்ச்சி பண்ணிட்டாங்க.!" – திருச்சியில் விஜய்

Date:

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

அந்தவகையில் மார்ச் 30 ஆம் தேதி பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து திருச்சியில் பிரசாரம் செய்த விஜய், “கேஸ் பிரச்னை எல்லாம் சரி ஆகிடுச்சா? டீ, கடை, ஹோட்டல்கள் எல்லாம் மூடிட்டாங்க. கேஸ் தட்டுபாட்டுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம்.

தவெக தலைவர் விஜய்

ஸ்டாலின் சார் வீட்டில பிரச்னைன்னா டெல்லி போய்விட்டு வருவாரு. கேஸ் பிரச்னைக்காக டெல்லி போய்விட்டு வரலாம்-ல.

நீட் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகள் என்ன ஆச்சு. எதையெல்லாம் செய்ய முடியாதோ?

அதை தான் ஸ்டாலின் வாக்குறுதியா கொடுப்பாரு. அவரை மாதிரி பொய் வாக்குறுதி கொடுக்காமல் மக்களோட தேவைகளை அறிந்து செயல்படுவோம்.

அடிப்படை வசதிகளை செய்யாத தீய சக்தி திமுகவை தூக்கி வீசிறிடலாமா? இளைஞர்களோட வேலைவாய்ப்பை பறிச்சது திமுக தான்.

நகராட்சியில தகுதியானவர்களுக்கு வேலை கிடைக்காமல் லஞ்சம் பெற்ற அமைச்சர் திருச்சியில இருக்கார்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

கரூர் சம்பவம் ஒரு சூழ்ச்சினு நிறைய பேர் சொல்றாங்க… அது மாதிரி ஜனநாயகன் படத்தை வெளியிடாமல் இருப்பது கூட்டு சூழ்ச்சி. இந்தத் தேர்தல்ல ஜனநாயகன் படம் மிகப்பெரிய ஆயுதமாக மாறிவிடுமோ என பயந்து சூழ்ச்சி பண்ணிட்டாங்க. திமுகவையும் நம்பாதீங்க, பாஜகவையும் நம்பாதீங்க. யூஸ்லெஸ் அரசு இது. ஒரே ஒரு வாய்ப்பு எனக்கு கொடுங்க.” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಸಿದ್ದರಾಮಯ್ಯ ಅಧಿಕಾರದ ರುಚಿ ನೋಡಿದ್ಮೇಲೆ ‘ಪರ್ಮನೆಂಟ್ ಸಿಎಂ’ ಅಂತಿದಾರೆ- ಕೇಂದ್ರ ಸಚಿವ HDK ವ್ಯಂಗ್ಯ

ಮಂಡ್ಯ,ಏಪ್ರಿಲ್,3,2026 (www.justkannada.in): ಸಿದ್ದರಾಮಯ್ಯ 2013ರಲ್ಲಿ ಇದೇ ನನ್ನ ಕೊನೇ ಚುನಾವಣೆ...

എസ്.ഡി.പി.ഐയുമായുള്ള ബന്ധത്തിന്റെ അപകടം മുസ്‌ലിം ലീഗ് തമിഴ്‌നാട് നേതൃത്വത്തെ ബോധ്യപ്പെടുത്തും; മുനവ്വറലി ശിഹാബ് തങ്ങള്‍

മലപ്പുറം: എസ്.ഡി.പി.ഐയുമായുള്ള സഖ്യത്തിന്റെ അപകടത്തെക്കുറിച്ച് തമിഴ്‌നാട് മുസ്‌ലിം ലീഗ് നേതൃത്വത്തിന്റെ ശ്രദ്ധയില്‍പ്പെടുത്തുമെന്ന്...

சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானங்கள் – விமானியைத் தேடும் பணி தீவிரம்!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கப்...

Kamal Haasan: ఎన్నికల వేళ కమల్‌హాసన్‌కు చేదు అనుభవం

తమిళనాడు ఎన్నికల వేళ నటుడు, ఎంఎన్‌ఎం పార్టీ అధ్యక్షుడు కమల్‌హాసన్‌కు చేదు...