1
April, 2026

A News 365Times Venture

1
Wednesday
April, 2026

A News 365Times Venture

"ஊழலின் பேரரசு திமுக ஆட்சி; மத்திய அரசு கொடுத்த ஒரு‌ பைசாக் கூட.!" – பியூஷ் கோயல் குற்றச்சாட்டு

Date:

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. இதையொட்டி இன்று கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது…

“இன்று நான் இங்கு 8 கோடி தமிழ் சகோதர, சகோதரிகளின் வலியையும் துயரத்தையும் பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன்.

ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் ஊழல் மற்றும் பொறுப்பற்ற தமிழ்நாடு அரசுக்கு எதிராக இன்று இந்தக் குற்றப்பத்திரிகையை வெளியிடுகிறோம்.

இந்த குற்றப்பத்திரிகையில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் திமுக மறுக்க முடியாதபடி ஆதாரபூர்வமாக உள்ளன. இதை காங்கிரஸும் மறுக்க முடியாது.

உதயநிதி, ஸ்டாலின்

இந்தத் தந்தை – மகன் தமிழ் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் எதிராகக் குற்றங்கள் செய்துள்ளனர்.

அவர்கள் பெண்களுக்கு எதிராகக் குற்றங்கள் செய்துள்ளனர். குழந்தைகளுக்கு எதிராகக் குற்றங்கள் செய்துள்ளனர். தலித்துகளுக்கு எதிராகக் குற்றங்கள் செய்துள்ளனர். இந்துக்களுக்கு எதிராகக் குற்றங்கள் செய்துள்ளனர். இளைஞர்களையும் விவசாயிகளையும் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை.

ஐந்து ஆண்டுக்கால திமுக ஆட்சி ‘ஊழல், கொள்ளையின் சரித்திரம்’. அவர்கள் ஊழல் பேரரசைக் கட்டமைத்துள்ளனர். குறிப்பாக, மணல் கொள்ளையில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 4,700 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இது தவிர, கனிம வளக் கொள்ளை மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் மோசடி ஆகியவை உள்ளூர் வாழ்வாதாரங்களை நாசப்படுத்தியுள்ளதுடன், மாநிலத்திற்கு முக்கிய முதலீடுகள் வருவதையும் தடுத்துள்ளன.

இது எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது – ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான TASMAC ஊழல்.

தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோத மதுபானங்களை ஊக்குவித்ததன் மூலம், பொதுமக்களின் உடல்நலத்திற்குக் கேடு ஏற்படுத்தி உள்ளது.

மாநிலப் பொருளாதாரத்தை கடன் சுமையிலும் தள்ளியுள்ளது.

அரசு வேலைகளைப் பெற பணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இடமாற்றத்திலும் மோசடி நடக்கிறது.

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை

மாநிலம் மீண்டும் தேர்தலை நோக்கிச் செல்லும் வேளையில், இந்தத் தொழிலாளர்கள் மீது திடீரென அக்கறை காட்டுவது ‘போலி’ நாடகம் போடுகிறது திமுக. ஆனால், துன்பப்பட்ட மக்களின் நம்பிக்கையை மீட்க இது உதவாது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

2022-ம் ஆண்டு 4,968 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை 2024-ம் ஆண்டு 6,969 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இந்தக் குற்றங்களுக்கு எதிராக அப்பா – மகன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் 8,900 கொலைகள் நடந்துள்ளன. 32 கஸ்டடி மரணங்கள் விசாரிக்கப்படவில்லை.

நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.

போதையால் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை ஒரு ஆண்டில் 51 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

505 வாக்குறுதிகளில் 70 சதவிகிதம் நிறைவேற்றப்படவில்லை.

இந்தியாவில் அதிக கடன் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தமிழ்நாட்டின் கடன் 10 லட்சத்து 71 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.

மு. க ஸ்டாலின்
மு. க ஸ்டாலின்

மத்திய அரசு ஜி.எஸ்.டி தொகையாக தமிழ்நாடு அரசுக்கு ரூ.50,700 கோடி கொடுத்தது. அதில் ஒரு பைசா கூட உள்ளாட்சிகளுக்கு செல்லவில்லை.

2021-2023 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்முறைகள் 1,377-ல் இருந்து 1,921 ஆக உயர்ந்துள்ளன. ஆனால், இதை எல்லாம் ஸ்டாலின் அரசு குறைக்கவில்லை.

ஆணவக் கொலைகள், தண்ணீர் தொட்டியில் மலம் கலப்பது போன்றவை நடந்துள்ளன.

ஆனால், எதையும் ஸ்டாலின் அரசு தட்டிக் கேட்கவில்லை… தடுக்கவில்லை… கட்டுப்படுத்தவில்லை”.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಸೆಸ್ಕ್ ವ್ಯವಸ್ಥಾಪಕ ನಿರ್ದೇಶಕ ಕೆ.ಎಂ. ಮುನಿಗೋಪಾಲ್ ರಾಜು ನಿವೃತ್ತಿ: ಆತ್ಮೀಯ ಬೀಳ್ಕೊಡುಗೆ

ಮೈಸೂರು, ಮಾರ್ಚ್, 31,2026 (www.justkannada.in):  ಚಾಮುಂಡೇಶ್ವರಿ ವಿದ್ಯುತ್ ಸರಬರಾಜು ನಿಗಮ...

യുവനടിയുടെ ലൈംഗികാതിക്രമ പരാതി; സംവിധായകന്‍ രഞ്ജിത്ത് അറസ്റ്റില്‍

  കൊച്ചി:യുവനടിയുടെ ലൈംഗികാതിക്രമ പരാതിയില്‍ സംവിധായകനും ചലച്ചിത്ര അക്കാദമി മുന്‍ ചെയര്‍മാനുമായ...

PBKS vs GT : గుజరాత్‌పై పంజాబ్ కింగ్స్ ఘనవిజయం.. అరంగేట్రంలోనే అదరగొట్టిన కూపర్ కానోలీ.!

పంజాబ్ కింగ్స్ తమ ఐపీఎల్ 2026 క్యాంపెయిన్‌ను విక్టరీతో ప్రారంభించింది. ఆస్ట్రేలియా...

ಮಿಡಿದ ಮಾನವೀಯ ಸ್ಪಂದನೆ:  ಮತ್ತಿಗೋಡು ಶಿಬಿರಕ್ಕೆ “ಗಜೇಂದ್ರ “ ಸ್ಥಳಾಂತರ

  ಬೆಂಗಳೂರು, ಮಾ.31: ಒಂಟಿತನದಲ್ಲಿ ಕಳೆಯುತ್ತಿದ್ದ ವೃದ್ಧ ಗಜೇಂದ್ರನಿಗೆ ಇಂದು ಹೊಸ...