28
March, 2026

A News 365Times Venture

28
Saturday
March, 2026

A News 365Times Venture

`விற்பனை அணுகுமுறையோடு வேட்பாளர் தேர்வு; காங்கிரஸை யாராலும் காப்பாற்ற முடியாது' – ஜோதிமணி ஆதங்கம்

Date:

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 28 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் நாளை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்,” காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை.

வெளிப்படைத்தன்மையோடும்,விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதி தேர்வு செய்யப்படவேண்டும் என்ற எங்கள் கருத்தை பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் நலன் முழுக்கவும் சமரசம் செய்யப்பட்டுவிட்டது. நம் போன்ற உண்மையான காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் ஆண்டாண்டு கால உழைப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக ஒரு சிறு துறும்பைக் கூட கிள்ளிப்போட்டிராத சிலர் விற்றுத்திண்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது.

கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி
கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி

இந்த மோசமான சூழலைக் கேள்வி கேட்காமல் மௌனமாக இருக்க முடியாது. பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர் மட்டும் கட்சியல்ல. லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வும்,உழைப்புமே கட்சி.

பட்டியல் வெளியானதும் விரிவாகப் பேசலாம். இதே விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது” என்று தனது அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಯುಪಿಎಸ್ ಪರೀಕ್ಷೆಗೆ ಕಠಿಣ ಪರಿಶ್ರಮ, ಸ್ಥಿರತೆ ಮತ್ತು ಸ್ಮಾರ್ಟ್ ಓದು ಅಗತ್ಯ- ಕಿರಣ್ ಕಾಮ್ಟೆ

ಮೈಸೂರು,ಮಾರ್ಚ್,27,2026 (www.justkannada.in):  ಯುಪಿಎಸ್ ಪರೀಕ್ಷೆ ಭೇದಿಸುವುದು ಸುಲಭವಲ್ಲ. ಅದಕ್ಕೆ ಕಠಿಣ...

ഇറാനെതിരെ നെതന്യാഹുവിന് വിജയിക്കാനാകില്ല: ഇസ്രഈല്‍ മുന്‍പ്രധാനമന്ത്രി

ടെല്‍ അവീവ്: സൈനികക്ഷാമം നേരിടുന്ന ഇസ്രഈലിന് ഇറാനെതിരെ വിജയിക്കാനാകില്ലെന്ന മുന്നറിയിപ്പുമായി മുന്‍...

Telangana: కీలక అలర్ట్.. ఆ జిల్లాలో మార్చి 28న బంద్.. కారణం ఇదే..

నిర్మల్ పట్టణంలో ప్రముఖ శిశువైద్యుడు డాక్టర్ సంతోష్ రాజ్ పై జరిగిన...

ಅತಿವೃಷ್ಠಿ, ಹುಲಿ ದಾಳಿಯಾದ ಕುಟುಂಬಕ್ಕೆ ಪರಿಹಾರ ನೀಡಲಿಲ್ಲ, ಅದೇ ಕೇರಳಕ್ಕೆ 10 ಕೋಟಿ ಪರಿಹಾರ-ನಿಖಿಲ್ ಕುಮಾರಸ್ವಾಮಿ ಕಿಡಿ

ಮೈಸೂರು,ಮಾರ್ಚ್,27,2026 (www.justkannada.in): ರಾಜ್ಯದಲ್ಲಿ ಅತಿವೃಷ್ಠಿಯಾದಾಗ ಪರಿಹಾರ ನೀಡಲಿಲ್ಲ,  ಹುಲಿ ದಾಳಿಯಾದ...