24
March, 2026

A News 365Times Venture

24
Tuesday
March, 2026

A News 365Times Venture

கமேனி இறப்புக்கு 48 மணிநேரத்திற்கு முன்.! ட்ரம்ப், நெதன்யாகு போன்கால் – என்ன நடந்தது?

Date:

ஈரான் போர் (பிப்ரவரி 28) தொடங்கிய 48 மணிநேரத்திற்கு முன்பு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போன்கால் பேசியுள்ளனர்.

அந்தப் போன்காலில் ஈரான் குறித்த பல முக்கிய விஷயங்கள் பேசப்பட்டதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ட்ரம்ப் – நெதன்யாகு

அந்தத் தகவல்கள்…

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி டெஹ்ரானில் முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு தெரிய வந்துள்ளது.

முன்பு, பிப்ரவரி 28-ம் தேதி இரவு இந்தச் சந்திப்பு நடக்கவிருந்திருக்கிறது. ஆனால், பின்னர் அது காலை நேரமாக மாற்றப்பட்டுள்ளது. இது குறித்தும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு நன்கு தெரிந்திருக்கிறது.

அதனால், இந்தச் சமயத்தில் தான் கமேனியைக் கொல்ல முடியும் என்று ட்ரம்பை சம்மதிக்க வைத்துள்ளார் நெதன்யாகு.

வரலாறு படைப்போம்!

ஏற்கெனவே ஈரானை தாக்க அமெரிக்க ராணுவத்திற்கு ஒப்புதல் அளித்திருந்திருக்கிறார் ட்ரம்ப். ஆனால், எப்போது, எப்படி என்பது மட்டும் முடிவு செய்யாமல் இருந்திருக்கிறது.

ஆக, இந்தச் சமயத்தில் நேரம் கூடி வரவே, இரு நாடுகளும் தாக்குதல் நடத்த பிளான் செய்திருக்கிறது.

‘இதை விட்டால் கமேனியைக் கொல்ல நல்ல நேரம் கிடைக்காது’ என்று நெதன்யாகு அழுத்தமாக ட்ரம்பிடம் பதிய வைத்துள்ளார். மேலும், இந்த விஷயத்தை ட்ரம்ப் செய்தால், வரலாற்றை உருவாக்குவோம் என்றும் சம்மதிக்க வைத்துள்ளார்.

காமேனி
காமேனி

கமேனி உயிரிழப்பிற்குப் பின், ஈரான் மக்களே வீதிக்கு வந்து போராடி, அந்த ஆட்சியை அகற்றுவார்கள் என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஆக, நெதன்யாகு தான் ட்ரம்பை ஈரான் போரை தொடங்க வைத்ததற்கு முக்கிய காரணம் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

ஆனால், நெதன்யாகு ஆரம்பத்தில் இருந்து, ட்ரம்பை தான் இந்தப் போருக்கு அழைக்கவில்லை என்று கூறி வருகிறார்.

ட்ரம்புமே ‘நான் தான்’ ஈரான் போர் குறித்து முடிவு செய்தேன் என்று கூறுகிறார். இந்த நிலையில் தான், இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ವಿಧಾನಮಂಡಲ ಅಧಿವೇಶನ ಒಂದು ದಿನ ಮೊಟಕು

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,24,2026 (www.justkannada.in):  ವಿಧಾನಮಂಡಲ ಅಧಿವೇಶನವನ್ನ ಒಂದು ದಿನ ಮೊಟಕುಗೊಳಿಸಲಾಗಿದೆ. ಮಾರ್ಚ್ 27ರವರೆಗೆ...

ടെക്‌സസിലെ ഓയില്‍ റിഫൈനറിയില്‍ വന്‍ സ്‌ഫോടനം; താമസക്കാരെ ഒഴിപ്പിച്ചു

ടെക്‌സസ്: യു.എസിലെ ടെക്‌സസിലെ ഓയില്‍ റിഫൈനറിയില്‍ വന്‍ സ്‌ഫോടനം. വലേറോ റിഫൈനറിയുടെ...

8th Pay Commission: గుడ్ న్యూస్.. 8వ పే కమిషన్‌లో జీతాలు రెట్టింపు అయ్యే అవకాశం.. బకాయిలు రూ.15 లక్షలు

కేంద్ర ప్రభుత్వ ఉద్యోగులు, పెన్షనర్లకు గుడ్ న్యూస్. 7వ వేతన సంఘం...

ಬೆಲೆ ಏರಿಕೆಯೇ ಸರ್ಕಾರದ ಸಾಧನೆ: ಎರಡು ಕ್ಷೇತ್ರದಲ್ಲಿ ಬಿಜೆಪಿ ಗೆಲುವು ನಿಶ್ಚಿತ-ಶ್ರೀರಾಮುಲು

ರಾಯಚೂರು,ಮಾರ್ಚ್,23,2026 (www.justkannada.in):   ಎರಡು ವರ್ಷಗಳಲ್ಲಿ ಹಲವು ವಸ್ತುಗಳ ಬೆಲೆ ಏರಿಕೆ...