23
March, 2026

A News 365Times Venture

23
Monday
March, 2026

A News 365Times Venture

"திமுக கூட்டணியிலிருந்து அதிகாரபூர்வமாக விலகுகிறோம்"- த.வா.க தலைவர் வேல்முருகன் அதிரடி

Date:

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி அதிருப்தியில் இருந்தது.

அந்த கட்சியின் 10 அம்ச கோரிக்கையை ஏற்காதது மற்றும் கூடுதல் சீட் ஒதுக்க திமுக மறுப்பது தான் இந்த அதிருப்திக்கு காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி தலைவர் வேல்முருகன் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.

வேல்முருகன்

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ” சட்டமன்றத்தில் ஒற்றை ஆளாய் போராடி இருக்கிறேன். நாங்கள் முன்வைத்த எங்கள் கோரிக்கைகளை திமுக அரசு பொருட்படுத்தவில்லை.

திமுக எங்களை புறகணித்துவிட்டது. திமுக கூட்டணியில் இருந்து என்னை வெளியேற்ற அரசு அதிகாரிகளே திமுகவிடம் கூறியிருக்கின்றனர்.

அமைச்சர்களின் ஆட்சி இங்கு நடக்கவில்லை. அதிகாரிகளின் ஆட்சி தான் திமுகவில் நடக்கிறது.

சமூக நீதிக்கு எதிரான தீய சக்திகளை திமுக உடன் வைத்திருக்கிறது.

கூட்டணி பேச்சின்போது பெரியண்ணன் பாணியில் எங்களை திமுக நடத்துவதை ஏற்க முடியாது.

முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஒரு இடத்தை மட்டுமே ஒதுக்க முடியும் என்று திமுக தரப்பில் கூறப்பட்டது.

வேல்முருகன்
வேல்முருகன்

இந்நிலையில் நாங்கள் திமுக கூட்டணியில் இருந்து அதிகாரப்பூரவமாக விலகுகிறோம்.

மண்டியிடாமல் மானத்தோடு செயல்படுவேன். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிகளுடன் தான் கூட்டணி வைப்போம்.

அதிமுக 3 இடங்கள் தருவதால் அந்தக் கூட்டணிக்கு நாங்கள் செல்வதாக வெளியாகும் செய்தி தவறானது.

பாஜக கூட்டணியுடன் செல்லமாட்டேன். கூட்டணியில் இருந்து விலக வேண்டாம் என்று பேசிய வைகோ, திருமாவளவன், வீரபாண்டியன், சண்முகம் உள்ளிட்டோருக்கு நன்றி.

அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்று வேல்முருகன் தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

പത്ത് വര്‍ഷമായി നരകത്തില്‍, ലീഗില്‍ അംഗത്വമെടുത്തപ്പോള്‍ സ്വര്‍ഗത്തിലേക്ക് അടുത്തു; തിരിച്ചുവരവില്‍ കാരാട്ട് റസാഖ്

കോഴിക്കോട്: ഇടതുപാളയം വിട്ട് വീണ്ട് മുസ്‌ലിം ലീഗിലേക്ക് ചേക്കേറിയതിന് പിന്നാലെ സി.പി.ഐ.എമ്മിനെതിരെ...

Iran War : అణుముప్పు అంచున మధ్యప్రాచ్యం.. ప్రపంచ ఆరోగ్య సంస్థ తీవ్ర ఆందోళన.!

మధ్యప్రాచ్యంలో యుద్ధం అత్యంత భయంకరమైన , ప్రమాదకరమైన దశకు చేరుకుందని ప్రపంచ...

സാദിഖലി തങ്ങള്‍ക്കെതിരായ ആരോപണം; പരാതി നല്‍കി ലീഗ്, വ്യാജപ്രചാരണങ്ങളില്‍ വഞ്ചിതരാകരുതെന്ന് കുഞ്ഞാലിക്കുട്ടി

കോഴിക്കോട്: മുസ്‌ലിം ലീഗ് അധ്യക്ഷന്‍ സാദിഖലി ശിഹാബ് തങ്ങള്‍ക്കെതിരെ ഉയര്‍ന്ന ആരോപണത്തില്‍...

'என்னுடைய பொறுமைக்கும் எல்லை உண்டு.!' – பாஜகவுக்கு கெடு விதித்த சரத்குமார்

இரண்டாண்டுகளுக்கு முன்பு தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்த...