21
March, 2026

A News 365Times Venture

21
Saturday
March, 2026

A News 365Times Venture

'நான் ஜெயிச்சா மட்டும் போதாது…' – விஜய்-ன் அடுத்தக்கட்ட '50' வேட்பாளர்கள் இவர்கள்தான்?

Date:

தவெக சார்பில் இரண்டாம் கட்டமாக ’50’ வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று உறுதி செய்துள்ளார். ஏற்கனவே முதற்கட்டமாக ’60’ வேட்பாளர்களை உறுதி செய்திருந்த விஜய், இன்று இரண்டாம் கட்டமாக மேலும் 50 வேட்பாளர்களை பனையூருக்கு அழைத்து வாழ்த்து கூறி அனுப்பியிருக்கிறார். கூடவே, ‘நாம் ஓட்டை உடைப்பதற்காக வரவில்லை. ஆட்சியைப் பிடிப்பதற்காக வந்திருக்கிறோம்’ என வேட்பாளர்களிடம் உற்சாகமாகவும் பேசியிருக்கிறார்.

TVK Vijay | விஜய்

தவெக சார்பில் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு வாங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் ஆனந்த், ஜான், ஆதவ் போன்ற கட்சியின் முக்கியஸ்தர்கள் தீவிரமாக இறங்கியிருந்தனர்.

மார்ச் 10 ஆம் தேதி முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 60 வேட்பாளர்களை விஜய் நேரில் அழைத்து சந்தித்து வாழ்த்தி அனுப்பியிருந்தார். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண் ராஜ் உட்பட முக்கிய நிர்வாகிகளும் மாவட்டச் செயலாளர்களும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.

ராஜ்மோகன்
ராஜ்மோகன்

கடந்த சில நாட்களாக அடுத்தக்கட்ட வேட்பாளரை தேர்வு செய்யும் பணிகள் பனையூரில் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து, இன்றைக்கு இரண்டாம் கட்டமாக 50 தொகுதிகளுக்கான இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காலை முதலே அலுவலகத்தில் கூடிய வேட்பாளர்களை ஐந்து ஐந்து பேராக விஜய் அழைத்து பேசியிருந்தார். இந்தப் பட்டியலில் முக்கியமாக ஆயிரம் விளக்கு தொகுதியில் ஜே.சி.டி பிரபாகர் பெயரும் எழும்பூர் தொகுதிக்கு ராஜ் மோகனின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

விஜய்யை சந்தித்துவிட்ட வேட்பாளர்கள் கூறுகையில், “நாம் ஓட்டை பிரிப்பதற்காகவோ வெறுமென வாக்குசதவீதத்தை வாங்கவோ மட்டும் வரவில்லை. ஆட்சியை பிடிக்க வந்திருக்கிறோம். உங்களில் பலரை நானே நேரடியாக நோட் செய்து வேட்பாளர் ஆக்கியிருக்கிறேன். நான் ஜெயித்தால் மட்டும் போதாது. நீங்கள் எல்லாரும் ஜெயிக்க வேண்டும். கடைசி நேரத்தில் நமக்கு இன்னும் தீவிரமான சிக்கல்கள் வரலாம். எல்லாவற்றையும் தைரியமாக எதிர்கொள்வோம். Let’s Make History! உற்சாகமாக வேலைப் பாருங்கள்!” என விஜய் வாழ்த்தி அனுப்பியிருக்கிறார்.

ஜே.சி.டி.பிரபாகர்
ஜே.சி.டி.பிரபாகர்

விஜய் இறுதி செய்திருக்கும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்:

பொன்னேரி தொகுதி – G.அம்பிகா

சேந்தமங்கலம் – வெங்கடேஷ்

எழும்பூர் – ராஜ்மோகன்

முசிறி – கார்த்திக்

தென்காசி – ராஜ பிரகாஷ்

பாப்பிரெட்டிப்பட்டி – திலகவதி

மதுரவாயல் – ரேவந்த் சரண்

ஆயிரம் விளக்கு – JCD பிரபாகர்

வாணியம்பாடி – சையது

மேட்டுப்பாளையம் – சுனில் ஆனந்த்

கோவை – கனிமொழி

பாலக்கோடு – கோபி

பென்னாகரம் – அதியமான்

பெருந்துறை – அருணாச்சலம்

செங்கல்பட்டு – தியாகு

ஜெயங்கொண்டம் – கவிதா ராஜேந்திரன்

ஆம்பூர் – இம்தியாஷ்

சேலம் வடக்கு – செந்தில்குமார்

ஓசூர் – மஞ்சுநாத்

விருத்தாச்சலம் – விஜய்

ஈரோடு மேற்கு – ஆனந்த் மோகன்

நாமக்கல் – திலீப்

கிள்ளியூர் – சபின்

பத்மநாபபுரம் – கிருஷ்ணகுமார்

நெய்வேலி – ஆனந்த்

வால்பாறை – ஶ்ரீதரன்

வாசுதேவநல்லூர் – மனோகர்

துறைமுகம் – அசோக் (முன்னாள் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி)

திருவண்ணாமலை – உதயகுமார்

பண்ட்ருடி – மணிகண்டன்

பல்லடம் – முருகதாஸ்

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಉಪಚುನಾವಣೆ ಟಿಕೆಟ್ ಕಗ್ಗಂಟು: ಸುರ್ಜೇವಾಲಗೆ ಅಭಿಪ್ರಾಯ ತಿಳಿಸಿದ ಸಿಎಂ, ಡಿಸಿಎಂ, ಸಚಿವರು

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,20,2026 (www.justkannada.in):  ದಾವಣಗೆರೆ ದಕ್ಷಿಣ ಮತ್ತು ಬಾಗಲಕೋಟೆ ವಿಧಾನಸಭೆ ಉಪಚುನಾವಣೆಯ...

UNI വാര്‍ത്താ ഏജന്‍സിയുടെ ഓഫീസ് ബലമായി ഒഴിപ്പിച്ചു; അപലപിച്ച് ദി സ്റ്റേറ്റ്‌സ്മാന്‍ പത്രം; പ്രതിഷേധിച്ച് മാധ്യമപ്രവര്‍ത്തകര്‍

ന്യൂദല്‍ഹി: രാജ്യത്തെ ഏറ്റവും പഴക്കമേറിയ വാര്‍ത്താ ഏജന്‍സിയായ യുണൈറ്റഡ് ന്യൂസ് ഓഫ്...

Off The Record: ఉమ్మడి నల్గొండ, ఖమ్మం, వరంగల్ నేతలపై సీరియస్

Off The Record: తెలంగాణ బీజేపీ వ్యవహారాల మీద పార్టీ అధిష్టానం...

ಉಪಚುನಾವಣೆ: ತಮ್ಮ ಆಸ್ತಿ ವಿವರ ಘೋಷಿಸಿಕೊಂಡ ಬಿಜೆಪಿ ಅಭ್ಯರ್ಥಿ ವೀರಣ್ಣ ಚರಂತಿಮಠ

ಬಾಗಲಕೋಟೆ,ಮಾರ್ಚ್,20,2026 (www.justkannada.in): ಬಾಗಲಕೋಟೆ ವಿಧಾನಸಭೆ ಉಪಚುನಾವಣೆಯ ಬಿಜೆಪಿ ಅಭ್ಯರ್ಥಿಯಾಗಿ ಇಂದು...