14
March, 2026

A News 365Times Venture

14
Saturday
March, 2026

A News 365Times Venture

"நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது; எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார்!" – ரகுபதி

Date:

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி,

“நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது. எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார் என்பது நாடறிந்த உண்மை. தி.மு.க ரஜினிகாந்தை மிரட்டியதாக கூறுவது அப்பட்டமான பொய். அரசியல் ஆதாயம் தேடி விஜய் கட்சியினர் சொல்லி வருகின்றனர். எங்களைப் பொறுத்தவரை அவர் எங்களது நண்பர். 1996-ல் திராவிட மாடல் ஆட்சி வர வேண்டும் என்பதற்காக குரல் கொடுத்த நபர் ரஜினிகாந்த். அவரைப் பற்றி எந்த குறையும் தி.மு.க சொல்லாது. சமையலுக்கு எரிவாயுவையே கொடுக்க முடியாத பிரதமர் மோடி நாட்டை காப்பாற்ற போகிறாரா?. அமெரிக்காவுக்கு அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார். அமெரிக்காவினுடைய அடிமைகளாக நம்மளையெல்லாம் வைத்திருக்கிறார். அதுதான் அவர் இந்த 11 ஆண்டு காலத்தில் செய்திருக்கிற மிகப்பெரிய சாதனை என்று சொல்ல முடியும். சட்டம் ஒழுங்கு பிரச்னையை சொல்வதை தவிர வேற வேலையே கிடையாது. அவங்களுக்கு சட்டம் ஒழுங்கு நல்லா இருக்கு. இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான். எல்லா பேப்பர்லயும் பாருங்க. ஒவ்வொரு மாநிலத்திலும் என்னென்ன கலாட்டாக்கள் நடக்குது, என்னென்ன பிரச்னைகள் நடக்குது, என்ன அடிதடி சண்டைகள் நடக்குது, என்ன கலவரங்கள் நடக்குது என்பதெல்லாம் தினசரி பேப்பர்கள்ல வருகிறது. தமிழ்நாட்டுல அதில் ஒரு பங்கு வந்தா பெரிய விஷயம். எனவே, தமிழ்நாட்டில் தான் இன்றைக்கு சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது. மானாமதுரை வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. நாங்கள் யார் தவறு செய்தாலும் யாரையுமே எங்களுடைய முதலமைச்சர் காப்பாற்ற மாட்டார். சி.பி.சி.ஐ.டி விசாரணையில் உண்மை தெரியும். லாக்-அப் மரணங்களைப் பற்றி அ.தி.மு.க பேசவே முடியாது. அ.தி.மு.க ஆட்சியில் தினசரி எத்தனை நடந்துச்சுன்னு யாருக்குமே தெரியாது. அந்த அளவுக்கு லாக்-அப் மரணங்கள் எல்லாம் நடந்திருக்கு. அதனால் லாக்-அப் மரணங்கள் அ.தி.மு.க ஆட்சியில் கிடையாது, தி.மு.க ஆட்சியில்தான் 27 அப்படின்னு சொன்னா அதை விட அப்பட்டமான பொய் வேற எதுவும் இருக்க முடியாது. எங்களைப் பொறுத்தவரை லாக்-அப் மரணம்னா அதுக்கு விசாரிச்சு உரிய தண்டனை நடவடிக்கை எடுக்கப் போறோம், தண்டனை கொடுக்கப் போறோம். நாங்க யாரையும் அடித்துக் கொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்குக் கிடையாது. அவங்களுக்குத்தான் அதெல்லாம். அங்கொன்றும் இங்கொன்றும் ஒரு சில சம்பவங்கள் நடப்பது உண்டு. ஆனால், இந்தியா என்று எடுத்துக்கொணண்டால் இங்கே இருக்கக்கூடிய மாநிலங்களிலேயே சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கக்கூடிய மாநிலம், பாதுகாப்பாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான். அதுக்காக எந்தச் சம்பவமுமே நடக்கலைன்னு சொல்ல முடியாது. எஃப்.ஐ.ஆர் போட்டுக்கிட்டுத்தான் இருக்கோம். ஆனால், இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் இன்றைக்குச் சிறப்பான மாநிலம், பாதுகாப்பான மாநிலம். சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்றும் தட்டுப்பாடு இருந்தால் நானே தருகிறேன் என்றும் நயினார் கூறியுளள்ளது பற்றி கேட்க்கிறீர்கள். ஒருவேளை அவர் பதுக்கி வைத்திருப்பாரோ என்னவோ தெரியவில்லை. என்.டி.ஏ கூட்டணியை பார்த்து எங்களுக்கு என்ன பயம்?. அவர்கள் தான் பயந்து ஒவ்வொருவர் காலில் விழுந்து எங்களுடன் கூட்டணிக்கு வாருங்கள் என்று கெஞ்சி வருகின்றனர். எங்களுக்கு பயமில்லை. 2026 -ல் நாங்கள்தான் வெற்றியடைய போகிறோம். அது, தெரிந்து விட்டது. அது அவர்களுக்கும் தெரிந்து விட்டது. அதனால் தான் இன்னும் இழுத்துக் கொண்டு இருக்கின்றனர்.

ragupathi

தொகுதி உடன்பாட்டை கூட அவர்களால் செய்ய முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். என்.டி.ஏ கூட்டணியில் எத்தனை கட்சிகள் கூட்டணியில் சேர்ந்தாலும் இன்றைய தி.மு.க கூட்டணியை தமிழ்நாட்டில் அவர்களால் எதுவும் செய்ய முடியாது. கரூரில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் பார்த்ததை தவிர செந்தில் பாலாஜி என்ன தவறை செய்தார்?. செந்தில் பாலாஜிக்கு சி.பி.ஐ சம்மன் கொடுத்துள்ளது. தி.மு.க-வை மிரட்டி பார்க்கின்ற செயலாக எடுத்துக் கொள்ளலாம். அதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். செந்தில் பாலாஜி இதையெல்லாம் பலமுறை சந்தித்தவர். அவர் தைரியசாலி. மிகவும் தைரியமாக அவர் எதிர்கொள்வார். என்.டி.ஏ கூட்டணிக்கு விஜயை கொண்டு வரத்தான் சி.பி.ஐ சம்மன் அனுப்பி இருப்பதாக கூறப்படுவது பற்றி கேட்கிறீர்கள். அது, மோடிக்கும், அமித்ஷாவுக்கும் உண்டான வெளிச்சம். எங்களுக்குத் தெரியாது, அந்த வெளிச்சம்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

യു.എസ് -ഇസ്രഈല്‍ ആക്രമണത്തില്‍ മൊജ്തബ ഖാംനഇക്ക് സാരമായി പരിക്കേറ്റു; അവകാശവാദവുമായി യു.എസ് പ്രതിരോധ സെക്രട്ടറി

വാഷിങ്ടണ്‍: ഇറാന്റെ പുതിയ പരമോന്നത നേതാവ് മൊജ്തബ ഖാംനഇക്ക് യു.എസ് -ഇസ്രഈല്‍ ആക്രമണത്തില്‍...

Sachin Tendulkar: సచిన్ రిటైర్మెంట్ వెనుక ఇంత కథ ఉందా.. డ్రెస్సింగ్ రూంలోనే ప్లాన్..?

క్రికెట్ ప్రపంచంలో ‘దేవుడు’గా పిలవబడే సచిన్ టెండూల్కర్ పేరు వినగానే పరుగుల...

ಭೀಕರ ಅಪಘಾತದಲ್ಲಿ ಮೂವರು ಸಾವು.

ಮಂಗಳೂರು, ಮಾರ್ಚ್,13,2026 (www.justkannada.in): ಕೆಎಸ್ ಆರ್ ಟಿಸಿ ರಾಜಹಂಸ ಬಸ್...