11
March, 2026

A News 365Times Venture

11
Wednesday
March, 2026

A News 365Times Venture

இந்தியா வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் மீது தாக்குதல்: ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் போரால் பதற்றம்!

Date:

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து போர் தொடுத்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நீடிக்கிறது. 10 நாள்களைக் கடந்து போர் தொடர்ந்துவரும் நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையில், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஹார்மூஸ் ஜலசந்தி வழியே சரக்கு கப்பல்கள் பயணிக்க வேண்டிய சூழலில், ஈரான் ஹார்முஸ் பகுதியை மூடுவதாக அறித்தது. தற்போது ஏற்பட்டிருக்கும் எரிவாயு உள்ளிட்ட எண்ணெய் பொருள்களின் தட்டுப்பாடுக்கு இதுவும் ஒரு காரணம்.

தாக்கப்பட்ட கப்பல்

இதற்கிடையில், ஹார்மூஸ் பகுதியை மூடுவதாகவும், அந்தப் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஈரான் அறிவித்திருந்தது. இந்த நிலையில், இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஒரு துறைமுகத்திலிருந்து தாய்லாந்து கொடியுடன் புறப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்று ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே தாக்கப்பட்டதாக ராயல் தாய் கடற்படை தெரிவித்துள்ளது.

தாய்லாந்து நிறுவனமான பிரீசியஸ் ஷிப்பிங் பிஎல்சிக்குச் சொந்தமான மயூரி நரீ என்ற சரக்கு கப்பல், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள கலீஃபா துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, இந்தியாவில் உள்ள கண்ட்லா துறைமுகத்திற்கு வந்துகொண்டிருந்தது. அப்போது ​​ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்கும்போது அந்தக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கப்பலில் பயணித்த 20 மாலுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் மூன்று பேரின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை.

தாக்கப்பட்ட கப்பல்
தாக்கப்பட்ட கப்பல்

ராயல் தாய் கடற்படை வெளியிட்ட அறிக்கையில், “தாக்குதலுக்கான கப்பல் குறித்த குறிப்பிட்ட விவரங்கள் மற்றும் காரணம் தற்போது விசாரணையில் உள்ளது. ஓமானி கடற்படை 20 மாலுமிகளை மீட்டுள்ளனர். மீதமுள்ள மூன்று பணியாளர்களை மீட்பதற்கான முயற்சிகள் தற்போது நடந்து வருகிறது. நேற்று வளைகுடாவில் மூன்று வணிகக் கப்பல்கள் தாக்கப்பட்டதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் தெரிவித்தது. இந்த தாக்குதலுக்கு பின்னணியில் ஈரான் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ ಅವರ ನಾಳಿನ ಮೈಸೂರು ಪ್ರವಾಸ ರದ್ದು

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,11,2026 (www.justkannada.in): ನಾಳೆ ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ ಹಮ್ಮಿಕೊಂಡಿದ್ದ  ಮೈಸೂರು ಪ್ರವಾಸವನ್ನು...

എന്തുകൊണ്ട് കേരളത്തിന് എയിംസ് അനുവദിക്കുന്നില്ല? കേന്ദ്രത്തിനെതിരെ ഹൈക്കോടതിയുടെ രൂക്ഷ വിമർശനം

കൊച്ചി : കേരളത്തിന് എയിംസ് അനുവദിക്കാത്തതിൽ കേന്ദ്രത്തിനെതിരെ രൂക്ഷ വിമർശനവുമായി ഹൈക്കോടതി...

Afghanistan: ఇవేం బుద్ది తక్కువ పనుల్రా బాబు.. ఆఫ్ఘనిస్తాన్‌లో బాలికల విద్యపై శాశ్వత నిషేధం!

ఆఫ్ఘానిస్తాన్‌లో తాలిబన్ పాలన కొనసాగుతున్న నేపథ్యంలో, దేశ విద్యాశాఖ మంత్రి ఇటీవల...

ಅಂತರಾಷ್ಟ್ರೀಯ ವಿಮಾನ ನಿಲ್ದಾಣ: ತಮಿಳುನಾಡಿಗೆ ಬೆಣ್ಣೆ, ನಮಗೆ ಸುಣ್ಣ- ಎಂ.ಬಿ ಪಾಟೀಲ್ ಅಸಮಾಧಾನ

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,11,2026 (www.justkannada.in):  ತಮಿಳುನಾಡಿನ ಮಧುರೈ ವಿಮಾನ ನಿಲ್ದಾಣವನ್ನು ಅಂತಾರಾಷ್ಟ್ರೀಯ ನಿಲ್ದಾಣವಾಗಿ...