1
March, 2026

A News 365Times Venture

1
Sunday
March, 2026

A News 365Times Venture

'இதற்கு பதில் கிடைக்காமல் போகாது' – ஈரான் பெண்கள் பள்ளியில் ஏவுகணை தாக்குதல்; 85 பேர்‌ உயிரிழப்பு

Date:

இன்று காலை முதல் ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகின்றன.

ஈரானின் பல பகுதிகளில் நடந்த தாக்குதலில், தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றிலும் ஏவுகணை தாக்கியுள்ளது.

இந்தத் தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 85 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு ஈரானின் ஹார்மோஸ்கன் மாகாணத்தில் உள்ள மினாபில் தான் இந்தப் பள்ளி அமைந்திருக்கிறது.

ஈரான் மீதான தாக்குதல்

இந்த இடம் ஈரானின் புரட்சிகர காவல்படையின் தளத்தின் தாயகம். அதனால், இஸ்ரேலும், அமெரிக்காவும் அங்கே தாக்குதல் நடத்தியுள்ளன.

அதில் தான் குழந்தைகள் உள்ளிட்டோர் இறந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலைக் கண்டித்து, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறுகையில், “இடிக்கப்பட்ட கட்டிடம் ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள பெண்களுக்கான தொடக்கப் பள்ளி.

பட்டப்பகலில் மாணவர்கள் இருக்கையில் அங்கே குண்டு வீசப்பட்டது. இந்த இடத்தில் மட்டும் டஜன் கணக்கான அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரானிய மக்களுக்கு எதிரான இந்தக் குற்றங்களுக்கு பதில் கிடைக்காமல் போகாது” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Mysore Development Authority: ನಿವೇಶನಗಳ ಆನ್ ಲೈನ್ ಹರಾಜು

    The post Mysore Development Authority: ನಿವೇಶನಗಳ ಆನ್ ಲೈನ್...

ഇസ്രഈല്‍ ആക്രമണം; ഇറാന്‍ പ്രതിരോധമന്ത്രിയും ഐ.ആര്‍.ജി.സി കമാന്‍ഡറും കൊല്ലപ്പെട്ടതായി റിപ്പോര്‍ട്ട്

ടെഹ്റാന്‍: ഇസ്രഈല്‍ ആക്രമണത്തില്‍ ഇറാന്‍ പ്രതിരോധമന്ത്രി അമിര്‍ നാസിര്‍സദെ കൊല്ലപ്പെട്ടതായി റിപ്പോര്‍ട്ട്....

US Israel War on Iran: இஸ்ரேலுடன் கைகோத்த அமெரிக்கா – ஈரானைச் சூழ்ந்த போர் மேகங்கள்; காரணம் என்ன?

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன....

ONGC Share: ఇరాన్‌- ఇజ్రాయెల్ చమురు మంటలతో.. ONGC ఇన్వెస్టర్లకు పండగ?

ONGC Share: మధ్యప్రాచ్యంలో ముదురుతున్న యుద్ధ మేఘాలు ప్రపంచ దేశాలను కలవరపెడుతున్నాయి....