27
February, 2026

A News 365Times Venture

27
Friday
February, 2026

A News 365Times Venture

`இனி எனது உழைப்பு முழுவதும் உதயசூரியன் சின்னத்துக்கே.!' – திமுக-வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம்

Date:

தமிழக அரசியலில் நிலவி வந்த பல மாத கால யூகங்களுக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க-வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை முறைப்படி தி.மு.க-வில் இணைத்துக் கொண்டார். அவருடன் அவரது ஆதரவாளர்களும், முக்கிய நிர்வாகிகளும் தி.மு.க-வில் இணைந்தனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கிய ஓ.பி.எஸ், மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட அதிகாரப் மோதலால், அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டார். ‘அ.தி.மு.க தொண்டர்கள் மீட்புக் குழு’ என்ற பெயரில் அவர் நடத்திய தர்மயுத்தம் மற்றும் சட்டப் போராட்டங்கள் கைகூடாத நிலையில், தனது அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தி.மு.க-வில் இணையும் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்த ஓ.பி.எஸ்-ஸை, தி.மு.க அமைச்சர்கள், நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, அவருக்குப் பொன்னாடை அணிவித்து தி.மு.க-வின் உறுப்பினர் படிவத்தைப் பெற்றுக்கொண்டார்.

ஓ.பி.எஸ்-ஸை வரவேற்றுப் பேசிய ஸ்டாலின், “திராவிட இயக்கக் கொள்கைகளை வலுப்படுத்தவும், தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கவும் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

பன்னீர் செல்வம்

தி.மு.க-வில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், “அ.தி.மு.க இன்று ஒரு சிலரின் பிடியில் சிக்கிச் சிதைந்துவிட்டது. தொண்டர்களின் உணர்வுகளுக்கு அங்கே மதிப்பில்லை. தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்தவே இந்த முடிவை எடுத்துள்ளேன். இனி எனது உழைப்பு முழுவதும் உதயசூரியன் சின்னத்திற்கே. எனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் முறைப்படி சபாநாயகரிடம் ராஜினாமா செய்துள்ளேன்.” எனறார்.

ஓ.பி.எஸ்-ஸின் இந்த மாற்றம் தென் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முக்குலத்தோர் சமூக வாக்கு வங்கியில் இது மாற்றத்தை உண்டாக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதேசமயம், இபிஎஸ் தலைமையிலான அ.தி.மு.க-வினர், “ஓ.பி.எஸ்-ஸின் துரோகம் இன்று அம்பலமாகிவிட்டது. அவர் எப்போதும் தி.மு.க-வின் பி டீமாகவே செயல்பட்டார்” என விமர்சித்து வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களே உள்ள நிலையில், ஓ.பி.எஸ்-ஸின் இந்த நகர்வு தேர்தல் களத்தை அனல் பறக்கச் செய்துள்ளது.

Loading…

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ತಮಿಳುನಾಡು ಮಾಜಿ ಸಿಎಂ ಜಯಲಲಿತಾ ಮೆಚ್ಚಿನ ಶಿಷ್ಯ ಪನ್ನೀರ್ ಸೆಲ್ವಂ ಡಿಎಂಕೆಗೆ ಸೇರ್ಪಡೆ

ಚೆನ್ನೈ,ಫೆಬ್ರವರಿ,27,2026 (www.justkannada.in): ತಮಿಳುನಾಡಿನ ರಾಜಕೀಯದಲ್ಲಿ ಮಹತ್ವದ ಬೆಳವಣಿಗೆ ನಡೆದಿದ್ದು  ಉಚ್ಚಾಟಿತ...

വായിൽ മൂത്രമൊഴിക്കും; ചായക്കടക്കാരനെ ഭീഷണിപ്പെടുത്തി യു.പി റെയിൽവേ പൊലീസ്

ലക്നൗ: വായിൽ മൂത്രമൊഴിക്കുമെന്ന് ഭീഷണിപ്പെടുത്തിയും തല്ലിയും ഉത്തർ പ്രദേശ് റെയിൽവേ പൊലീസ്....

JrNTR-Neel : ఫ్యాన్స్‌కు బ్యాడ్ న్యూస్.. ‘డ్రాగన్’ అప్‌డేట్..

మ్యాన్ ఆఫ్ మాసెస్ ఎన్టీఆర్, మాస్ డైరెక్టర్ ప్రశాంత్ నీల్ కాంబినేషన్‌లో...

ಮೊದಲ ಬಾರಿಗೆ ಗೆದ್ದವರು ಸಚಿವ ಸ್ಥಾನ ಕೇಳುವುದರಲ್ಲಿ ತಪ್ಪೇನು? ಶಾಸಕ ಹರೀಶ್ ಗೌಡ

ಮೈಸೂರು,ಫೆಬ್ರವರಿ,26,2026 (www.justkannada.in):  ಮೊದಲ ಬಾರಿ ಗೆದ್ದವರು ಸಿಎಂ ಆಗುತ್ತಾರೆ, ಸಚಿವರು...