23
February, 2026

A News 365Times Venture

23
Monday
February, 2026

A News 365Times Venture

மதிமுக: "தனிச்சின்னம், ராஜ்ய சபா சீட்…” – திமுக உடனான பேச்சுவார்த்தைக்குப் பின் அர்ஜுனராஜ்

Date:

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பேரணி, பிரசாரம், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தேர்தல் வாக்குறுதி எனக் கட்சிகள் தீவிர களப்பணியில் இறங்கி இருக்கும் சூழலில், திமுக தனது தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை கூட்டணிக் கட்சிகளுடன் தொடங்கி இருக்கிறது.

ஸ்டாலின்

இன்று (பிப்.23) தொகுதிப் பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர். பாலு தலைமையிலான திமுக குழு மதிமுகவுடன் பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கிறது.

முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் மதிமுக அவைத் தலைவர் அர்ஜுனராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அப்போது, “இன்றைய பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. எங்களுடைய வேண்டுகோள்களையும், கோரிக்கைகளையும் திமுக குழுவிடம் சமர்ப்பித்திருக்கிறோம்.

இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தையின் முடிவுகளை அறிவிப்போம்.

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான். அது முடிவில்லாதது. அதனால் இந்தக் கூட்டணி தொடரும்.

மதிமுக அர்ஜுனராஜ்
மதிமுக அர்ஜுனராஜ்

ராஜ்ய சபை சீட் தொடர்பாக கோரிக்கை வைத்திருக்கிறோம். மதிமுக இந்த முறை தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் 6 தொகுதிகளில் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಹೆಚ್.ಸಿ ಮಹದೇವಪ್ಪ ಸಿಎಂ ಆದ್ರೆ ನನಗೆ ಖುಷಿ- ಸಚಿವ ಕೆ.ವೆಂಕಟೇಶ್

ಮೈಸೂರು,ಫೆಬ್ರವರಿ,23,2026 (www.justkannada.in):  ಸಚಿವ ಹೆಚ್.ಸಿ ಮಹದೇವಪ್ಪ ಸಿಎಂ ಆದರೆ ನನಗೆ...

മോദിയെ അധിക്ഷേപിക്കുന്നവര്‍ക്ക് പുതപ്പില്ല; മുസ്‌ലിം സ്ത്രീകള്‍ക്ക് പുതപ്പ് നല്‍കാന്‍ വിസമ്മതിച്ച് ബി.ജെ.പി നേതാവ്

രാജസ്ഥാന്‍: ദരിദ്രര്‍ക്കായി പുതപ്പ് വിതരണം ചെയ്യുന്ന പരിപാടിയില്‍ മുസ് ലിം സ്ത്രീകളോട്...

PM Modi: ఈసారి సేవ చేసే అవకాశం బీజేపీకి ఇవ్వండి.. బెంగాలీయులకు మోడీ పిలుపు

ఈసారి బీజేపీ ప్రభుత్వానికి సేవ చేసే అవకాశం ఇవ్వాలని పశ్చిమ బెంగాల్‌...

ശബരിമല സ്വര്‍ണ കൊടിമര പുനപ്രതിഷ്ഠ കേസ്; സുരേഷ് ഗോപിയുടെ മൊഴിയെടുത്തു

തിരുവനന്തപുരം: ശബരിമല സ്വര്‍ണ കൊടിമരത്തിന്റെ പുനപ്രതിഷ്ഠ കേസില്‍ സുരേഷ് ഗോപി എം.പിയുടെ...