21
February, 2026

A News 365Times Venture

21
Saturday
February, 2026

A News 365Times Venture

Brand Bengaluru: சர்வதேச SWAN அமைப்பில் இந்தியாவின் ஒரே பிரதிநிதி; வாழ்த்திய முதல்வர் சித்தராமையா!

Date:

SWAN (Smart Water Networks Forum) என்ற அமைப்பு உலகெங்கிலும் உள்ள குடிநீர், கழிவுநீர் மற்றும் மழைநீர் அமைப்புகளை “ஸ்மார்ட்” (Smart) ஆக மாற்றும் ஒரு சர்வதேச லாப நோக்கற்ற அமைப்பாகும். இதன் தலைமையகம் லண்டனில் உள்ளது. இந்த அமைப்பின் முக்கிய நோக்கம், பாரம்பரிய நீர் மேலாண்மை முறைகளை மாற்றி, தரவு (Data) மற்றும் நவீனத் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நீரைச் சிக்கனமாகவும் திறம்படவும் கையாள்வதாகும்.

இந்த அமைப்பில் அரசு நீர் வாரியங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் உறுப்பினராக இணையமுடியும். அதன் அடிப்படையில், 5-வது மூத்த நீர் பயன்பாட்டு ஆலோசனைக் குழுவில் பெங்களூரு நீர் வாரியத் தலைவர் டாக்டர் ராம் பிரசாத் மனோகர் உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்.

டாக்டர் ராம் பிரசாத் மனோகர்

பெங்களூரு நகரின் குடிநீர் மேலாண்மையில் டாக்டர் ராம் பிரசாத் மனோகர் புகுத்திய செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு சார்ந்த (Data-driven) நவீனத் தொழில்நுட்ப முயற்சிகளுக்காக இந்த உலகளாவிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சர்வதேசக் குழுவில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, போர்ச்சுகல், பிரேசில், இந்தியா என 6 நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் மட்டுமே இருக்கின்றனர். மேலும், இந்த அமைப்பின் உயர்மட்டக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரே இந்திய அதிகாரி என்ற சிறப்பையும் டாக்டர் ராம் பிரசாத் மனோகர் பெற்றிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் வழிகாட்டுதலுக்கும், ‘பிராண்ட் பெங்களூரு’ (Brand Bengaluru) தொலைநோக்குத் திட்டத்திற்கும் எனது நன்றி. மேலும், பெங்களூருவின் தொழில்நுட்பக் குழுவின் கடின உழைப்பிற்கே இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற ராம் பிரசாத் மனோகருக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, “ஸ்மார்ட் வாட்டர் நெட்வொர்க்ஸ் ஃபோரம் (SWAN) அமைப்பின் 5-வது மூத்த நீர் பயன்பாட்டு ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள BWSSB தலைவர் டாக்டர் ராம் பிரசாத் மனோகர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

சித்தராமையா, டி.கே.சிவக்குமார்
சித்தராமையா, டி.கே.சிவக்குமார்

ஆஸ்திரேலியா, கனடா, போர்ச்சுகல், பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து, இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ள இத்தருணம், கர்நாடக மாநிலத்திற்குப் பெருமிதமான ஒன்றாகும்.

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு அடிப்படையிலான நீர் மேலாண்மையில் பெங்களூருவின் முன்னோடி முயற்சிகளுக்கும், நிலையான நகர்ப்புற நிர்வாகத்திற்கும் கிடைத்துள்ள அங்கீகாரம் இது. உலகளாவிய நீர் மேலாண்மைப் புதுமைகளில் அவர் சிறப்பான பங்களிப்பை வழங்கி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” எனக் குறிப்பிட்டு வாழ்த்தியிருக்கிறார்.

துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், “ஸ்மார்ட் வாட்டர் நெட்வொர்க்ஸ் ஃபோரம் (SWAN) அமைப்பின் சர்வதேச மூத்த நீர் பயன்பாட்டு ஆலோசனைக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெங்களூரு நீர் வாரியத் (BWSSB) தலைவர் டாக்டர் ராம் பிரசாத் மனோகர் @PrasathIas அவர்களுக்கு வாழ்த்துகள்.

தொழில்நுட்பம், வெளிப்படைத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றுடன் நமது நீர் மேலாண்மை முறைகளை நவீனப்படுத்தி வரும் ‘பிராண்ட் பெங்களூரு’ (Brand Bengaluru) திட்டத்திற்கு இது ஒரு பெருமிதமான தருணம். ‘ஸ்மார்ட்’ நீர் மேலாண்மையின் உலகளாவிய சிறந்த நடைமுறைகளில் இப்போது நமது நகரமும் தனது பங்களிப்பை வழங்குகிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ತುರಗನೂರು ವಿಸ್ತರಣೆ ಶಾಖಾ ನಾಲೆಗಳ ಅಭಿವೃದ್ಧಿಯಿಂದ 1800 ಎಕರೆಗೆ ನೀರು: ಸಚಿವ ಡಾ: ಹೆಚ್.ಸಿ ಮಹದೇವಪ್ಪ

ಮೈಸೂರು,ಫೆಬ್ರವರಿ,21,2026 (www.justkannada.in):  ತುರಗನೂರು ಶಾಖಾ ನಾಲೆಯು ವಿಶ್ವೇಶ್ವರಯ್ಯ ನಾಲೆಯ ಅಂತಿಮ‌...

എപ്‌സ്റ്റീന്‍ ഫയല്‍സില്‍ സെലന്‍സ്‌കിയുടെ പേര് 50ലേറെ തവണ പരാമര്‍ശിച്ചെന്ന് ഉക്രൈന്‍ നേതാവ്

കീവ്: ഉക്രൈന്‍ പ്രസിഡന്റ് വ്‌ളോദിമിര്‍ സെലന്‍സ്‌കിയുടെ പേര് എപ്സ്റ്റീന്‍ ഫയല്‍സില്‍ അമ്പതിലേറെ...

How to Store Carrot: ఇలా చేస్తే చాలు.. వారాలు గడిచినా క్యారెట్లు ఫ్రెష్‌గా ఉంటుంది..!

How to Store Carrot: క్యారెట్లు అందరికీ ఇష్టమే.. వివిధ రకాల...

ಎಸ್ ಎಸ್ ಎಲ್ ಸಿಯಲ್ಲಿ ಕಡಿಮೆ ಫಲಿತಾಂಶ ಪಡೆದ ಶಾಲೆಗಳಿಗೆ ಜಿ.ಪಂ ಸಿಇಓ ಭೇಟಿ

ಮಂಡ್ಯ,ಫೆಬ್ರವರಿ,21,2026 (www.justkannada.in): ಪಾಂಡವಪುರ ತಾಲ್ಲೂಕಿನ ಜಕ್ಕನಹಳ್ಳಿ ಗ್ರಾಮ ಪಂಚಾಯಿತಿ ವ್ಯಾಪ್ತಿಯ...