19
February, 2026

A News 365Times Venture

19
Thursday
February, 2026

A News 365Times Venture

"அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்பதில் தவறு கிடையாது!" – சொல்கிறார் தொல்.திருமாவளவன்

Date:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அரியலூரில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்க செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகை தந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“திருச்சி – தஞ்சை சாலையில் துவாக்குடியில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள், கட்சி சார்பற்ற அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றனர். இதற்கென்று ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றமும் அந்த சாலையில் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என கூறி உள்ளது. ஆனாலும், பணி கிடப்பில் உள்ளது. இது, ஏமாற்றத்தை தருகிறது.

thirumavalavan

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு சர்வீஸ் சாலை அமைப்பதற்கு இடத்தை கையகப்படுத்தி தரவேண்டும் என்பது உயர் நீதிமன்றத்தின் ஆணை. அதன் அடிப்படையில் தமிழக அரசு இந்திய ஒன்றிய அரசும் சர்வீஸ் சாலை அமைப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தேர்தலுக்காக நடத்தப்படுகிறது போராட்டம் என சுருக்கி பார்க்க தேவையில்லை. உள்நோக்கம் எதுவுமில்லை. காங்கிரஸ் கூட்டணியில் தான் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. காங்கிரஸ், தி.மு.க கூட்டணியில் உள்ளது. எந்த குழப்பம் இல்லை. தி.மு.க கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது.

மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கான கோரிக்கை அல்ல. ஒட்டுமொத்தமாக மக்களின் கோரிக்கை. இந்தியா முழுவதும் போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது. புள்ளி விவரங்கள் இந்த உண்மையை தெரிவிக்கின்றது. தமிழகத்தில் மதுக்கடைகளை அடுத்தடுத்து படிப்படியாக குறைத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். அந்த நிலைப்பாட்டில் இன்றும் உள்ளோம். அது தொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லை என்பது கவலை அளிக்கிறது.

மறுபடியும் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இந்த கோரிக்கையை நினைவூட்டுகிறேன். இளைய தலைமுறை பாதுகாக்க வேண்டும், தமிழ் சமூகத்தை பாதுகாக்க வேண்டும். எனவே, மது மற்றும் போதை பொருள் கட்டுப்படுத்துவதற்கு முற்றாக ஒழிப்பதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு முன்வர வேண்டும்.

thirumavalavan

கூட்டணி உருவாக்குவதில், பாதுகாப்பதிலும் அக்கறையோடு இருக்கிறோம். இதில் கேள்விக்கு இடம் இல்லை. காங்கிரஸ் அதிகம் கேட்பது பேச்சுவார்த்தையில் முடிவாகும். கேட்பதால் கூட்டணி உடையாது. உழைக்கிறோம், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று என்று கேட்பதில் தவறு கிடையாது. தமிழக அரசியலுக்கு அது பொருந்தாது என முதல்வர் தெரிவித்திருக்கிறார். எப்படி பொருந்தி வராது என்பதை விளக்க வேண்டும். எங்களைப் போல காங்கிரஸ் நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று கிடையாது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்களது கோரிக்கைகளை பேச்சுவார்த்தையில் வைப்போம். இந்த கூட்டணி உருவாக்குவதில் எங்கள் பங்கு இருக்கிறது.தி.மு.க கூட்டணியில் பிரச்னை இல்லை” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ನಂದಿನಿ ಉತ್ಪನ್ನ ಬಗ್ಗೆ ಅಪಪ್ರಚಾರ  ಮಾಡಿದರೇ ಅಗತ್ಯ ಕ್ರಮ: ಬಮೂಲ್ ಅಧ್ಯಕ್ಷ ಡಿ.ಕೆ.ಸುರೇಶ್‌

ಬೆಂಗಳೂರು,ಫೆಬ್ರವರಿ,18,2026 (www.justkannada.in):  ನಂದಿನಿ ಉತ್ಪನ್ನ ಬಳಸಿದರೆ ಕ್ಯಾನ್ಸರ್‌ ಬರುತ್ತದೆ ಎಂಬ...

നുണകള്‍ക്കെതിരെ സത്യം ജയിക്കണം; ഈ വിഷസൃഷ്ടികള്‍ക്ക് എങ്ങനെയാണ് പ്രദര്‍ശനാനുമതി ലഭിക്കുന്നത്? കേരള സ്റ്റോറിക്കെതിരെ മുഖ്യമന്ത്രി

തിരുവനന്തപുരം: കേരളത്തെ ഭീകരവാദ കേന്ദ്രമായി ചിത്രികരിച്ച സംഘപരിവാര്‍ പ്രൊപ്പഗണ്ട ചിത്രം ‘ദി...

Heritage Foods Legal Notice to Botsa: బొత్స సత్యనారాయణకు హెరిటేజ్‌ లీగల్‌ నోటీసులు..

Heritage Foods Legal Notice to Botsa: వైఎస్‌ఆర్‌ కాంగ్రెస్‌ పార్టీ...

ಅಖಿಲ ಭಾರತೀಯ ಅಂಚೆ ಸಾಂಸ್ಕೃತಿಕ ಸಮ್ಮೇಳನ: 2ನೇ ದಿನದ ಸ್ಪರ್ಧೆಯಲ್ಲಿ ಕರ್ನಾಟಕ ಅಂಚೆ ವೃತ್ತ ಮೊದಲ ಸ್ಥಾನ.

ಮೈಸೂರು,ಫೆಬ್ರವರಿ,18,2026 (www.justkannada.in):  ಸಾಂಸ್ಕೃತಿಕ ಮೈಸೂರಿನಲ್ಲಿ 38ನೇ ಅಖಿಲ ಭಾರತೀಯ ಅಂಚೆ...