15
February, 2026

A News 365Times Venture

15
Sunday
February, 2026

A News 365Times Venture

'நடிகை குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது வருத்தம்' – வானதி சீனிவாசன்

Date:

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மகளிர் உரிமைத் தொகையை பாஜக தடுக்க பார்க்கிறது என்று திமுகவினர் முட்டாள்தனமான பேசுகிறார்கள். இத்தனை ஆண்டுகள் நாங்கள் அதைத் தடுத்தோமா.

வானதி சீனிவாசன்

திமுகவினர் மக்களின் காதில் பூ சுற்ற முயற்சி செய்கிறார்கள். முதலமைச்சர் மகளிரின் பாதுகாவலர் போன்று ஒரு டிராமா செய்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக கோடை காலம் வந்து கொண்டு தான் இருக்கிறது.

அப்போது குடிப்பதற்கு தண்ணீர் கூட தராதவர்கள், தற்போது கோடைகால சிறப்பு நிதியாக ரூ. 2,000 கொடுக்கிறார்கள். பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம், ரயில் நிலையம் எங்குமே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

மகளிர் உரிமைத் தொகை
மகளிர் உரிமைத் தொகை

வெளியில் சென்ற பெண்கள் எப்போது வீடு திரும்புவார்கள் என்று குடும்ப உறவுகள் பதற்றமாக இருக்கிறார்கள். ரூ.5,000 கொடுத்தால் அனைத்தையும் மறப்பார்கள் என்று நினைக்கிறார்கள். மக்கள் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்.

நயினார் நாகேந்திரன் பொதுவாக மிகவும் அமைதியானர். பண்பாக பேசக்கூடியவர். சட்டசபையில் கூட மிகவும் நாகரிகமாக பேசுவார். எதற்காக நடிகை பற்றி அப்படி பேசினார் என தெரியவில்லை. அவர் பேசியது எனக்கு வருத்தமாக உள்ளது. என்னுடைய கருத்தை அவரிடம் கூறுவேன். 

நயினார் நாகேந்திரன்

அதே நேரத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியில் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை எல்லாம் கட்சியில் வைத்துக் கொண்டு, இந்த விஷயத்தை பெரிதுபடுத்துகிறார்கள்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಮೈಸೂರು ಮಾನಸಗಂಗೋತ್ರಿ ಕ್ಯಾಂಪಸ್‌ನಲ್ಲಿ” Gen Z”  ಥೀಮ್ ಪೋಸ್ಟ್ ಆಫೀಸ್ ಯೋಜನೆ

  ಮೈಸೂರು, ಫೆ.೧೪,೨೦೨೬:  ಮೈಸೂರು ವಿಶ್ವವಿದ್ಯಾಲಯದ ಮಾನಸಗಂಗೋತ್ರಿ ಕ್ಯಾಂಪಸ್‌ನಲ್ಲಿ ಶೀಘ್ರದಲ್ಲೇ ‘Gen...

പ്രേംകുമാറിനെ മാറ്റിയത് കാലാവധി കഴിഞ്ഞതിനാല്‍, ആരെയും മാറ്റിനിര്‍ത്തുന്ന നയം സര്‍ക്കാരിനില്ല; വിവാദങ്ങളില്‍ മന്ത്രി സജി ചെറിയാന്‍

തിരുവനന്തപുരം: കാലാവധി പൂര്‍ത്തിയായതിനാലാണ് ചലച്ചിത്ര അക്കാദമി ഭാരവാഹി സ്ഥാനത്ത് നിന്നും പ്രേംകുമാറിനെ...

Advocate Swapna Murder Case: పక్కా స్కెచ్‌తో చెల్లిని అంతమొందించిన అన్న!

Advocate Swapna Murder Case: రంగారెడ్డి జిల్లాలో అడ్వకేట్ స్వప్న మర్డర్...

ಮೈಸೂರು ಪೊಲೀಸರ ಕಾರ್ಯಾಚರಣೆ: 4 ಲಕ್ಷ ಮೌಲ್ಯದ ಮಾದಕ ವಸ್ತು ವಶ: ಆರೋಪಿ ಬಂಧನ

ಮೈಸೂರು,ಫೆಬ್ರವರಿ,14,2026 (www.justkannada.in): ಮೈಸೂರು ನಗರದಲ್ಲಿ ಅಕ್ರಮ ಮಾದಕ ವಸ್ತು ಮಾರಾಟ...