15
February, 2026

A News 365Times Venture

15
Sunday
February, 2026

A News 365Times Venture

'அவர்' மீது எங்களுக்கு எவ்வளவு கோபம், எவ்வளவு ஆசை, எவ்வளவு வியப்பு இருக்கிறது தெரியுமா? – சு.வெ

Date:

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில், பெருந்தமிழர் விருது பெற்ற எஸ்.வி.ராஜதுறை குறித்து சு.வெங்கடேசன் எம்.பி பேசுகையில், “விகடனுடைய ‘பெருந்தமிழர்’ விருது பெறுகிற தோழர் எஸ்.வி.ஆர்., நம் சமகாலத்தின் ஒரு பேரறிஞர். இயக்குநர் ராம் கூறியதைப்போல, நாங்கள் எல்லோரும் அவருடைய மாணவர்கள். மாணவர்கள் என்றால் பின்தொடர்பவர்கள் அல்ல; விவாதிப்பவர்கள், உரையாடுபவர்கள், முட்டி மோதுபவர்கள்.

சு.வெங்கடேசன்

அவருடைய ‘அந்நியமாதல்’ புத்தகம் 20 வருடங்களாக எங்களைச் சுற்றிவருகிறது. அவர்மீது எங்களுக்கு எவ்வளவு கோபம், எவ்வளவு ஆசை, எவ்வளவு வியப்பு இருக்கிறது தெரியுமா… ஒரு பேரறிஞருக்கு மகிழ்ச்சி என்பது விருது அல்ல; அவர் இயங்கிக்கொண்டிருப்பதுதான் மகிழ்ச்சி. இன்றைக்கு வரை இயங்கிக்கொண்டிருக்கிற ஒரு பேரறிஞர் எஸ்.வி.ஆர்.

மேலும், தமிழ் அறிவுச் சூழலில் ஒரு தசாப்தத்தின் வரலாற்றைத் தன் எழுத்துகளால் செதுக்கியவர். அதிகாரத்துக்கு எதிராகத் தொடர்ந்து ஒலிக்கும் அவரது குரல், இன்றைய இளைஞர்களுக்கு மிகப்பெரிய வழிகாட்டி” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಮೈಸೂರು ಪೊಲೀಸರ ಕಾರ್ಯಾಚರಣೆ: 4 ಲಕ್ಷ ಮೌಲ್ಯದ ಮಾದಕ ವಸ್ತು ವಶ: ಆರೋಪಿ ಬಂಧನ

ಮೈಸೂರು,ಫೆಬ್ರವರಿ,14,2026 (www.justkannada.in): ಮೈಸೂರು ನಗರದಲ್ಲಿ ಅಕ್ರಮ ಮಾದಕ ವಸ್ತು ಮಾರಾಟ...

റഷ്യയില്‍ നിന്നും എണ്ണ വാങ്ങുന്നത് നിര്‍ത്തുമെന്ന് ഇന്ത്യ ഉറപ്പ് നല്‍കി; യു.എസ് സ്റ്റേറ്റ് സെക്രട്ടറി

വാഷിങ്ടണ്‍: ഇന്ത്യ-യു.എസ് വ്യാപാര കരാറിന്റെ പശ്ചാത്തലത്തില്‍ റഷ്യയില്‍ നിന്നും എണ്ണ വാങ്ങുന്നത്...

“தோப்புக்கரணம் போடு என்றால், நான்-ஸ்டாப்பாக பல்டி அடிப்பார் பழனிசாமி’’ – ஸ்டாலின் கடும் தாக்கு

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மண்டலவாடியில், தி.மு.க வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 47 சட்டமன்றத்...

Off The Record: పబ్లిసిటీ పీక్స్లో ఉన్న వాళ్ల ర్యాంకింగ్స్ వీక్గా ఉన్నాయా..?

Off The Record: ఉమ్మడి విశాఖ జిల్లాలో పొలిటికల్ డైనమిక్స్ ఎప్పుడూ...