14
February, 2026

A News 365Times Venture

14
Saturday
February, 2026

A News 365Times Venture

PM RAHAT: 'இதற்கு' ரூ.1.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை; மத்திய அரசின் புதிய திட்டம்|How to

Date:

நேற்று புது டெல்லியில் புதிய பிரதமர் அலுவலகமான ‘சேவா தீர்த்’ இந்திய பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.

அந்தப் புதிய பிரதமர் அலுவலகத்தில் மோடி போட்ட நான்கு கையெழுத்துகளில் ஒன்று – PM RAHAT (Road Accident Victims Hospitalisation and Assured Treatment) திட்டம்.

PM RAHAT எதற்கு?

இந்த மத்திய அரசின் திட்டத்தின் கீழ், சாலை விபத்துகளுக்கு ரூ.1.5 லட்சம் வரையில் கட்டணமில்லா சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

இது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு கீழ் வரும் திட்டம் ஆகும்.

விபத்து

யாருக்கு?

இந்தத் திட்டத்தின் கீழ், இந்திய குடிமக்கள் அனைவருமே பயன்பெறலாம். பாதிக்கப்பட்டவருக்கு நிதிப் பின்னணி என்னவாக இருந்தாலும், அனைவரும் பயனடைய வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைவது எப்படி?

> விபத்து நடந்த 24 மணிநேரத்திற்குள் ஆயுஷ்மான் பாரத் PM-JAY நெட்வொர்க்கின் கீழ் இருக்கும் ஏதேனும் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

> எந்த மருத்துவமனை இந்த நெட்வொர்க்கின் கீழ் வரும் என்பதை தெரிந்துகொள்ள 112 என்கிற தொலைபேசி எண்ணுக்குப் போன்கால் செய்யலாம்.

> விபத்து குறித்து முதல் 24 மணிநேரத்தில் போலீஸாரிடம் புகாரளித்திருக்க வேண்டும்.

> பெரும்பாலும், அனுமதிக்கப்படும் மருத்துவமனையே போலீஸாரிடம் இந்த மாதிரியான விபத்துகளைத் தெரிவித்துவிடும்.

> மருத்துவமனை நிர்வாகமே குறிப்பிட்ட விபத்தை மத்திய போக்குவரத்துத் துறையில் e-DAR ( Electronic Detailed Accident Report)-ல் பதிவு செய்துவிடும்.

மருத்துவமனையில் கட்டணமில்லா சிகிச்சை பெற பாதிக்கப்பட்டவர் என்ன ஆவணங்கள் தர வேண்டும்?

> அடையாள அட்டை

> எஃப்.ஐ.ஆர்

> காயம் சம்பந்தமான ஆவணங்கள்

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Minister Atchannaidu: ప్రకృతి వ్యవసాయంలో ఏపీ రోల్ మోడల్‌..

Minister Atchannaidu: మూడోసారి వ్యవసాయ బడ్జెట్ ప్రవేశ పెట్టడం సంతోషంగా ఉందని...

ಅಮೆರಿಕಾದಲ್ಲಿ ಕರ್ನಾಟಕದ ವಿದ್ಯಾರ್ಥಿ ನಾಪತ್ತೆ

ಬೆಂಗಳೂರು,ಫೆಬ್ರವರಿ,14,2026 (www.justkannada.in): ಅಮೆರಿಕಾದಲ್ಲಿ ಕರ್ನಾಟಕದ ವಿದ್ಯಾರ್ಥಿ ನಾಪತ್ತೆಯಾಗಿರುವ ಘಟನೆ ನಡೆದಿದೆ. ಸಾಕೇತ್...

സിറ്റിങ് ജഡ്ജിമാര്‍ക്കെതിരെ പത്ത് വര്‍ഷത്തിനിടെ 8,000ത്തിലധികം പരാതികള്‍: കേന്ദ്രം ലോക്‌സഭയില്‍

ന്യൂദല്‍ഹി: രാജ്യത്തെ സിറ്റിങ് ജഡ്ജിമാര്‍ക്കെതിരെ പത്ത് വര്‍ഷത്തിനിടെ 8,000ത്തിലധികം പരാതികള്‍ ലഭിച്ചതായി...