1
April, 2026

A News 365Times Venture

1
Wednesday
April, 2026

A News 365Times Venture

திருவள்ளுவர் முதல் UPI வரை: இந்திய – மலேசியா ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்|Quick Points

Date:

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா… தற்போது மலேசியா என அடுத்தடுத்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறது இந்தியா.

ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா கையெழுத்திட்டது வர்த்தக ஒப்பந்தம். ஆனால், மலேசியா உடன் கையெழுத்திட்டுள்ளது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.

நேற்று மலேசியா சென்றிருந்தார் இந்திய‌ பிரதமர் மோடி. இந்தப் பயணத்தில் தான் இந்தியா – மலேசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.

இந்திய பிரதமர் மோடி – மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்

இந்த ‘IMPACT’ (India-Malaysia Partnership for Advancing Collective Transformation) ஒப்பந்தங்களின் முக்கிய அம்சங்கள் இதோ…

> மலேசியாவில் புதிய‌ இந்திய தூதரகம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இது இரு நாடுகளின் உறவையும் வலுப்படுத்தும்.

> இரு நாடுகளின் பிணைக்கப்பட்ட பாரம்பரியத்தைப் போற்றும் வகையில், மலேசியாவில் ‘திருவள்ளுவர் மையம்’ அமைக்கப்படும்.

> இந்தியாவின் UPI-யும், மலேசியாவின் PayNet-உம் ஒருங்கிணைக்கப்படுகிறது.

இதன்‌ மூலம் இரு நாடுகளுக்கு இடையே எளிதான பணி பரிவர்த்தனை நடக்கும். மேலும், அதற்கு ஆகும் செலவுகளும் குறையும்.

இது இந்தியாவில் பணிபுரியும் மலேசியர்களுக்கும், மலேசியாவில் பணிபுரியும் இந்தியர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

> விநியோகச் சங்கிலி மற்றும் பணியாளர் மேம்பாட்டில் கவனம் செலுத்தி, செமி கண்டக்டர் துறையில் இரு‌ நாடுகளும் ஒத்துழைப்பை மேம்படுத்தும்.

> கடல் பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு, உளவுத்துறைப் பகிர்வு ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.

> மலேசியாவில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த சமூக பாதுகாப்பு ஒப்பந்தம்.

இந்திய பிரதமர் மோடி - மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்
இந்திய பிரதமர் மோடி – மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்

> இந்தியாவில் படிக்க மலேசியா மாணவர்களுக்கு ஊக்கமளிக்க ‘திருவள்ளுவர் ஊக்கத்தொகை’ வழங்கப்படும்.

> இந்த ஆண்டின் டிசம்பர் 31-ம் தேதி வரை, இந்தியர்கள் மலேசியாவிற்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

> வனவிலங்கு பாதுகாப்பிற்காக இந்தியா முன்னெடுத்துள்ள International Big Cat Alliance (IBCA)-ல் மலேசியா சேரும்.

> சுகாதாரம், மருத்துவம், பேரிடர், ஊழலுக்கு எதிராக போராடுவதில் போன்றவற்றிலும் இரு நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಇಂದು ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ, ಏ.5ಕ್ಕೆ ಜಮೀರ್ ಪ್ರಚಾರಕ್ಕೆ ಬರಲಿದ್ದಾರೆ – ಸಚಿವ ಎಸ್.ಎಸ್ ಮಲ್ಲಿಕಾರ್ಜುನ್

ದಾವಣಗೆರೆ,ಏಪ್ರಿಲ್,1,2026 (www.justkannada.in):  ದಾವಣಗೆರೆ ದಕ್ಷಿಣ ಕ್ಷೇತ್ರದ ಉಪಚುನಾವಣಾ ಕಣ ರಂಗೇರಿದ್ದು...

ലൈംഗികാതിക്രമ കേസില്‍ രഞ്ജിത് 14 ദിവസം റിമാന്‍ഡില്‍; കള്ളക്കേസെന്ന് പ്രതിഭാഗം; ഒതുക്കി തീര്‍ക്കാന്‍ ശ്രമിച്ചെന്ന് പരാതിക്കാരി

കൊച്ചി: യുവനടിയുടെ ലൈംഗികാതിക്രമ പരാതിയില്‍ സംവിധായകനും ചലച്ചിത്ര അക്കാദമി മുന്‍ ചെയര്‍മാനുമായ...

16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு: ரூ.11,718.24 கோடி நிதி ஒதுக்கீடு; ‘டிஜிட்டல்’ முறையில் தொடக்கம்!

இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெறும்...

Sai Rajesh :మెగాస్టార్ సినిమాలకు మణిశర్మ ప్లస్ పాయింట్..

టాలీవుడ్ సెన్సేషనల్ డైరెక్టర్ సాయి రాజేష్ తనలోని అసలైన ‘మెగా’ ఫ్యాన్‌ను...