14
February, 2026

A News 365Times Venture

14
Saturday
February, 2026

A News 365Times Venture

இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம்: 'அமெரிக்காவிடம் இந்தியா சரண்டரா?' – எதிர்ப்புகளின் தொகுப்பு

Date:

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு வரவேற்பு இருந்தாலும், சில எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.

இந்த எதிர்ப்புகளை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி‌ உள்ளிட்ட பலர் பதிவு செய்துள்ளனர்.

அந்த எதிர்ப்புகளின் தொகுப்பு இதோ…

> இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்க விவசாய மற்றும் பால் பொருள்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன… வரிகளும் குறைக்கப்பட்டுள்ளன.

இதனால், அமெரிக்காவின் விவசாயப் பொருள்கள் மற்றும் பால் பொருள்களின் இறக்குமதி இங்கே அதிகரிக்கும்.

ட்ரம்ப் – மோடி

இது 72 கோடி விவசாய மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நலனைப் பாதிக்கும்.

இந்திய விவசாயப் பொருள்களின் மீது அமெரிக்கா பெருமளவு எந்தச் சலுகையும் வழங்கவில்லை.

இதனால், அமெரிக்கப் பொருள்களுடன் இந்திய உற்பத்திகளால் போட்டியிட முடியாமல் போகலாம்.

> ‘ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கமாட்டோம்’ என்கிற உத்தரவாதத்தில் தான் இந்த ஒப்பந்தம் முடிவாகி உள்ளது.

இது சரண்டர்‌ இல்லையா… இது இந்தியாவின் இறையாண்மையைப் பாதிக்கிறது அல்லவா? அமெரிக்காவின் கட்டளையைப் பின்பற்றுகிறதா இந்தியா?

> இந்தியா பல அமெரிக்கப் பொருள்களின் வரியை ஜீரோ சதவிகிதமாக்குகிறது. ஆனால், இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்கா 18 சதவிகிதம் வரி வசூலிக்கிறது. இது சமத்தைக் கெடுக்கிறது.

> பல அமெரிக்க பொருள்களுக்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இருப்பதன்‌ மூலம் இந்தியாவின் சிறு, குறு, நடுத்தர‌த் தொழில்கள் பாதிக்கப்படும்.

> இந்த ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்காதது வெளிப்படைத் தன்மையைப் பாதிக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಹೃದಯಾಘಾತದಿಂದ ಹಿರಿಯ ನಿರ್ದೇಶಕ ಜೋ ಸೈಮನ್ ನಿಧನ

ಬೆಂಗಳೂರು,ಫೆಬ್ರವರಿ,13,2026 (www.justkannada.in): ಹಿರಿಯ ನಿರ್ದೇಶ ಜೋ ಸೈಮನ್ ಹೃದಯಾಘಾತದಿಂದ ನಿಧನರಾಗಿದ್ದಾರೆ...

ഇത് ഇരട്ടനീതി, വരേണ്യതാബോധത്തിലൂന്നിയ വിധേയത്വം; കാലാവധി കഴിഞ്ഞിട്ടും ഇളക്കം തട്ടാതെ അക്കാദമി തലപ്പത്ത് സച്ചിദാനന്ദന്‍; വിമര്‍ശിച്ച് പ്രേംകുമാര്‍

തിരുവനന്തപുരം: സംസ്ഥാന ചലച്ചിത്ര അക്കാദമിയുടെയും ചലച്ചിത്ര അക്കാദമിയുടെയും കാര്യത്തില്‍ സര്‍ക്കാരിന് ഇരട്ടനീയതിയെന്ന...

MLA Kunamneni : కేటీఆర్ ఫోన్ చేసి సీపీఐకు బేషరతుగా మద్దతు ఇస్తామన్నారు

Kunamneni Sambasiva Rao : కొత్తగూడెం మున్సిపల్ కార్పొరేషన్ మేయర్ ఎన్నిక...