16
February, 2026

A News 365Times Venture

16
Monday
February, 2026

A News 365Times Venture

தவெக கொங்கு மண்டல கூட்டம்: செங்கோட்டையன் ஆப்சென்ட்; டென்ஷனான அருண்ராஜ்!

Date:

தவெக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஒவ்வொரு மண்டலமாக பயணித்து மக்களின் கருத்துகளை கேட்டு வருகிறார்கள். அந்த வகையில் மேற்கு மண்டல மக்களின் கருத்து கேட்பு கூட்டம் கோவை கணியூர் பகுதியில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டலத்தின் தவெக முக்கிய முகமான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

செங்கோட்டையன் படம்
செங்கோட்டையன் படம்

மேலும் இந்நிகழ்வுக்காக தவெக சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் செங்கோட்டையன்  படமும் இடம்பெறவில்லை.

இந்தக் கூட்டத்தில் தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம், “தவெக சார்பில் தேர்தலுக்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. செங்கோட்டையன் தவெக பிரசார குழுவில் முக்கிய உறுப்பினராக இருக்கிறார்.

செங்கோட்டையன்,
செங்கோட்டையன்

இது தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள குழு. இப்படி தேவையில்லாமல் பிரச்னை செய்வீர்கள் என்று தெரியும். ஆனால் அப்படி எந்த பிரச்னையும் இல்லை” என்றார்.

மற்றொரு நிர்வாகியான ஜேசிடி பிரபாகர் செய்தியாளர்களிடம், “தவெகவின் அனைத்து நிர்வாகிகளையும் பல்வேறு குழுக்களில் பயன்படுத்த தலைவர் நினைக்கிறார். அனைவருக்கும் சம வாய்ப்பும், உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

அருண்ராஜ்

மேலும் பொதுக் கூட்டங்களுக்கு புதிய விதிகளை கொண்டு வந்து தவெக  பொதுக் கூட்டங்கள் மற்றும் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை முட்டுக்கட்டை போடுவதாகவும் அருண்ராஜ் குற்றம்சாட்டினார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഗസയില്‍ വംശഹത്യ തുടരുമ്പോഴും മോദി നെതന്യാഹുവിനൊപ്പം; ഇസ്രഈല്‍ സന്ദര്‍ശനത്തിനെതിരെ നഗരങ്ങളില്‍ പ്രതിഷേധം; 23 പേര്‍ കസ്റ്റഡിയില്‍

പൂനെ: പ്രധാനമന്ത്രി നരേന്ദ്ര മോദിയുടെ വരാനിരിക്കുന്ന ഇസ്രഈല്‍ സന്ദര്‍ശനത്തെ അപലപിച്ച് രാജ്യത്തെ...

”மகளிர் உரிமைத் தொகைக்கு முட்டுக்கட்டை போட நினைத்ததை முதல்வர் தகர்த்து விட்டார்” – உதயநிதி ஸ்டாலின்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து...

ಆರ್ಥಿಕವಾಗಿ, ಸಾಮಾಜಿಕವಾಗಿ ಶಕ್ತಿ ತುಂಬುವ ಕಾರ್ಯಕ್ರಮ ಮುಂದುವರೆಸುತ್ತೇವೆ- ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ

ಹಾವೇರಿ, ಫೆಬ್ರವರಿ,14,2026 (www.justkannada.in): ಸಮಾವೇಶ ಮಾಡುತ್ತಿರುವುದು ಸಾವಿರ ದಿನಾಚರಣೆ  ಮೈಲಿಗಲ್ಲು...