27
February, 2026

A News 365Times Venture

27
Friday
February, 2026

A News 365Times Venture

ஆரணி: வன்னியர் இட ஒதுக்கீடு கோரி பட்டதாரி இளைஞர் தற்கொலை – திமுக அரசு மீது அன்புமணி கடும் தாக்கு!

Date:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தன். இவரின் மனைவி பூங்கொடி. இவர்களுக்கு சதிஷ்குமார், விஜயகுமார் என இரு மகன்கள். இதில், மூத்த மகன் சதிஷ்குமார் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, கட்டட மேஸ்திரி வேலைச் செய்து வந்தார். இளைய மகன் விஜயகுமாரும் வேலூர் அரசு கல்லூரியில் பி.ஏ பொருளாதாரம் படிப்பை கடந்த 2018-ம் ஆண்டில் முடித்துவிட்டு, அரசுப் பணிக்குத் தயாராகி, 7 ஆண்டுகளாக போட்டித் தேர்வுகளை எழுதிவந்தார். ஆனாலும், அரசுப் பணி அவருக்குக் கிடைக்கவில்லை. இதனால், மன உளைச்சலில் இருந்துவந்த விஜயகுமார் நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பட்டதாரி இளைஞர் விஜயகுமார்

`வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காதது தான், தற்கொலைக்குக் காரணம். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என்று தனது டைரியில் 20 பக்கங்களில் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார் விஜயகுமார். தூக்கில் சடலமாக தொங்கிக்கொண்டிருந்த விஜயகுமாரின் கையிலும் ஒரு கடிதம் இருந்தது. அதிலும், `வன்னியர் இட ஒதுக்கீடு வேண்டும்’ என்று ஸ்கெட்ச்சில் தனது கைப்பட எழுதியிருக்கிறார். கண்ணமங்கலம் போலீஸார், இளைஞர் விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், “சமூகநீதி கிடைக்காமல் ஓர் இளைஞர் தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. வேதனையில் மூழ்கிய அவரின் குடும்பத்தினரை ஆறுதல்படுத்த முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன்’’ என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவரின் அறிக்கையில், “தி.மு.க ஆட்சியில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதால், பல ஆண்டுகளாக போராடியும் அரசு வேலை கிடைக்காததால் ஏற்பட்ட விரக்தியில் மற்றும் மன உளைச்சலால் பட்டதாரி இளைஞர் விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு 1,405 நாள்களாகியும் வன்னியர் இட ஒதுக்கீடு வழங்காமல், தி.மு.க செய்த துரோகம் தான் ஒரு ஏழை பட்டதாரியை பலி வாங்கியிருக்கிறது.

விஜயகுமார் கைப்பட எழுதிய கடிதம்

தி.மு.க-வின் இந்த துரோகத்தை வன்னிய சமுதாயம் மன்னிக்காது. பட்டதாரி இளைஞரின் தற்கொலைக்கு தி.மு.க அரசு பொறுப்பேற்க வேண்டும். விஜயகுமாரின் ஆன்மாவும், தி.மு.க அரசின் துரோகத்தால் பாதிக்கப்பட்ட வன்னிய மக்களின் மனங்களும் தி.மு.க-வை மன்னிக்காது. அவர்களின் சாபம் வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வை வீழ்த்தப்போவது உறுதி. சமூக நிலையிலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பிலும் காலம் காலமாக மிக மிகப் பின்தங்கிய நிலையிலுள்ள வன்னிய மக்களுக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு இணையான உள் இடஒதுக்கீட்டை வென்றெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. எனவே, வன்னிய சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தற்கொலை போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று காட்டமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಮುಂದಿನ ಸಿಎಂ; NDA ತೀರ್ಮಾನವೇ ಅಂತಿಮ- R. ಅಶೋಕ್.

ಮೈಸೂರು,ಫೆಬ್ರವರಿ,27,2026 (www.justkannada.in):  ಕುಮಾರಸ್ವಾಮಿ‌ ಮುಂದಿನ ಮುಖ್ಯಮಂತ್ರಿ  ಎಂದು ಜೆಡಿಎಸ್ ಯುವ...

ജാതി വിവേചനവും ദുരഭിമാനക്കൊലയും തടയാന്‍ രണ്ട് പുതിയ ബില്ലുകളുമായി കര്‍ണാടക സര്‍ക്കാര്‍

കര്‍ണാടക: വിദ്യാഭ്യാസ സ്ഥാപനങ്ങളിലെ ജാതി വിവേചനവും സാമൂഹിക അനീതികളും തടയാന്‍ ലക്ഷ്യമിട്ടുള്ള...

'சட்டமன்றத் தேர்தலை தள்ளிப்போடுங்கள்.!' – தேர்தல் ஆணையத்துக்கு சீமான் கோரிக்கை!

தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு முன்பாக சட்டமன்றத் தேர்தலுக்காக வேட்பாளர்களை அறிவித்திருக்கும் நாம் தமிழர்...

Botsa Satyanarayana: ఎమ్మెల్సీ బొత్స సత్యనారాయణకు బ్రెయిన్ స్ట్రోక్..

వైఎస్సార్సీపీ నేత, మాజీ మంత్రి బొత్స సత్యనారాయణ తీవ్ర అస్వస్థతకు గురయ్యారు....