16
March, 2026

A News 365Times Venture

16
Monday
March, 2026

A News 365Times Venture

Union Budget: 2019 டு 2026… நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த கால நேரம்! ஒரு டைம்லைன்

Date:

தொடர்ந்து ஒன்பதாவது முறையாக மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்து முடித்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இன்று அவர் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை கிட்டத்தட்ட 1 மணிநேரம் 30 நிமிடங்களில் தாக்கல் செய்து முடித்திருக்கிறார்.

இதற்கு முன்பு நிர்மலா சீதாராமன் எத்தனை நிமிடங்கள் பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.

நிர்மலா சீதாராமன் – பட்ஜெட்

2019-ம் ஆண்டு முதல்முறையாக நிதியமைச்சர் ஆனார் நிர்மலா சீதாராமன். அந்த ஆண்டு அவரின் பட்ஜெட் தாக்கல் நேரம் 2 மணிநேரம் 17 நிமிடங்கள் ஆகும்.

2020-ம் ஆண்டு 2 மணிநேரம் 42 நிமிடங்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் இவர். இதுவே இந்திய வரலாற்றில் அதிக நேரம் வாசிக்கப்பட்ட பட்ஜெட் ஆகும்.

2021-ம் ஆண்டு ஒரு மணி 50 நிமிடங்கள் பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்.

2022-ம் ஆண்டு ஒரு மணி நேரம் 32 நிமிடங்களிலும், 2023-ம் ஆண்டு 1 மணிநேரம் 27 நிமிடங்களிலும் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் இவர்.

2024-ம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை 56 நிமிடங்கள் தாக்கல் செய்தார். இதுவே இவர் மிக குறைந்த நிமிடங்கள் வாசித்த பட்ஜெட் ஆகும்.

அதே ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தது. அதன் பின், அந்த ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, நிர்மலா சீதாராமன் பட்ஜெட் வாசித்த நேரம் 1 மணிநேரம் 25 நிமிடங்கள்.

2025-ம் ஆண்டு 1 மணிநேரம் 14 நிமிடங்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

2026 നിയമസഭാ തെരഞ്ഞെടുപ്പ് നിര്‍ണായകം; കേരളത്തില്‍ എല്‍.ഡി.എഫ് വീണ്ടും അധികാരത്തില്‍ വരും: ഡി. രാജ

ചെന്നൈ: കേരളത്തില്‍ മൂന്നാം തവണയും എല്‍.ഡി.എഫ് അധികാരത്തില്‍ വരുമെന്ന് സി.പി.ഐ ജനറല്‍...

"உயிருடன் இருந்தால் விடமாட்டோம்" – நெதன்யாகுவுக்கு ஈரான் இராணுவம் நேரடி கொலை மிரட்டல்!

கடந்த பிப்ரவரி 28 அன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான்...

Netanyahu: ‘అవును నేను చనిపోయాను’.. మరో వీడియో విడుదల చేసిన ఇజ్రాయెల్ ప్రధాని నెతన్యాహు..

ఇరాన్ దాడిలో ఇజ్రాయెల్ ప్రధాని బెంజమిన్ నెతన్యాహు చనిపోయారని సోషల్ మీడియాలో...

‘ചിറയിന്‍കീഴില്‍ കോഴിക്കോട്ടുകാരി വേണ്ട’; രമ്യ ഹരിദാസിന്റെയും സണ്ണി ജോസഫിന്റെയും കോലം കത്തിച്ച് പ്രതിഷേധം

തിരുവനന്തപുരം: ചിറയിന്‍കീഴ് കോണ്‍ഗ്രസില്‍ പൊട്ടിത്തെറി. ആലത്തൂര്‍ മുന്‍ എം.പിയായ രമ്യ ഹരിദാസിനെ...