27
March, 2026

A News 365Times Venture

27
Friday
March, 2026

A News 365Times Venture

"பாகிஸ்தானை சீர்குலைக்க தீவிரவாதத்தை ஆயுதமாக இந்தியா பயன்படுத்துகிறது"- பாகிஸ்தான் ராணுவ தளபதி

Date:

கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும் மோதல்களில், இரு தரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில், கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்த கிரிக்கெட் வீரர்கள்…

இந்நிலையில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்வாவின் அபோட்டாபாத்தில் உள்ள பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் நேற்று(அக்.18) நடைபெற்ற ராணுவ வீரர்களின் பட்டமளிப்பு விழாவில் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி சையது அசிம் முனீர் உரையாற்றி இருக்கிறார்.

அப்போது இந்தியாவுடனான சமீபத்திய ராணுவ மோதலை குறிப்பிட்டு பேசிய அவர், ” அணுசக்தி மயமாக்கப்பட்ட சூழலில் போருக்கு இடமில்லை என்று இந்தியாவின் ராணுவத் தலைமைக்கு நான் அறிவுறுத்துகிறேன், உறுதியாக எச்சரிக்கிறேன்.

எங்களை ஒருபோதும் மிரட்ட முடியாது. சொல்லாட்சிகளால் வற்புறுத்த முடியாது.

இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா – பாகிஸ்தான்

பாகிஸ்தானை சீர்குலைக்க தீவிரவாதத்தை ஒரு ஆயுதமாக இந்தியா பயன்படுத்துகிறது. ஒரு சில தீவிரவாதிகளால் பாகிஸ்தானுக்கு தீங்கு விளைவிக்க முடியாது.

ஆப்கானிஸ்தான் மண்ணைப் பயன்படுத்தும் அனைத்து தீவிரவாதிகளும் ஒழிக்கப்படுவார்கள்.

காஷ்மீர் பிரச்னையை சர்வதேச விதிமுறைகளின்படி தீர்க்க வேண்டும். பாகிஸ்தான் அமைதியை விரும்பும் நாடாகும்” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಸಾದಿಕ್ ಪೈಲ್ವಾನ್ ಹುಟ್ಟು ಕಾಂಗ್ರೆಸ್ಸಿಗ: ಕಣದಿಂದ ಹಿಂದೆ ಸರಿದಿದ್ದಾರೆ-ಡಿಸಿಎಂ ಡಿಕೆ ಶಿವಕುಮಾರ್

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,27,2026 (www.justkannada.in): ದಾವಣಗೆರೆ ದಕ್ಷಿಣ ಉಪಚುನಾವಣೆ ಹಿನ್ನೆಲೆಯಲ್ಲಿ ಕಾಂಗ್ರೆಸ್ ವಿರುದ್ದ...

ഹോര്‍മുസ് കടലിടുക്ക് അടച്ചു; അമേരിക്കയുടെയും സഖ്യകക്ഷികളുടെയും തുറമുഖങ്ങളിലേക്കുള്ള കപ്പല്‍ ഗതാഗതം നിരോധിച്ചു: ഐ.ആര്‍.ജി.സി

ടെഹ്‌റാന്‍: ഹോര്‍മുസ് കടലിടുക്ക് വഴിയുള്ള യു.എസിന്റെയും സഖ്യകക്ഷികളുടെയും തുറമുഖങ്ങളിലേക്കും തിരിച്ചുമുള്ള കപ്പലുകളുടെ...

பெரம்பூரில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு? நிர்வாகிகள் அவசர ஆலோசனை! – நிலவரம் என்ன?

தவெக தலைவர் விஜய் நாளை அவர் போட்டியிடவிருக்கும் பெரம்பூர் தொகுதியிலிருந்து பிரசாரத்தை...

Israel -Iran War: ఇజ్రాయిల్ “కిల్ లిస్ట్” నుంచి ఇరాన్ మంత్రి, స్పీకర్ పేర్లు తొలగింపు.. ఎందుకు.?

Israel -Iran War: పశ్చిమాసియా ఉద్రిక్తతలు, యూఎస్-ఇజ్రాయిల్-ఇరాన్ మధ్య ఉద్రిక్తతలు ప్రపంచాన్ని...