28
March, 2026

A News 365Times Venture

28
Saturday
March, 2026

A News 365Times Venture

பாஜக – அதிமுக கூட்டணியில் தவெக? EPS மீதான டிடிவி தினகரனின் விமர்சனத்திற்கு நயினார் நாகேந்திரன் பதில்

Date:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “ஸ்டாலின் அவர்களே நீங்கள் கூட்டணியை நம்பி இருக்கிறீர்கள். அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணியாக இருக்கும்” என்று பேசி கூட்டத்தில் தவெக கொடி அசைவதைப் பார்த்து, “இப்போவே கொடி அசைத்து பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க” என்று அதிமுக – தவெக கூட்டணி குறித்த விவாதத்தைத் திட்டமிட்டு பற்ற வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இதுகுறித்து துணை முதல்வர் உதயநிதி திண்டுக்கல்லில் பேசியபோது, “பாஜகவிற்கு இபிஎஸ் என்ற அடிமை இருக்கிறார். இப்போது இன்னொரு அடிமையைத் தேடுகிறார்கள்” என்று விமர்சித்திருந்தார்.

டிடிவி தினகரன்

இதுகுறித்து அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “த.வெ.க. தலைவர் விஜய் கூட்டணிக்கு வருவார் என்றால் பா.ஜ.க.வை எடப்பாடி பழனிசாமி கழற்றி விடுவார். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கவா விஜய் கட்சி தொடங்கியிருக்கிறார்” என்று எடப்பாடி பழனிசாமியைத் தாக்கியிருந்தார்.

இந்நிலையில் டிடிவி தினகரன் பேசியது பற்றி பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், “தினகரனுக்கு எடப்பாடி பழனிசாமி மீது என்ன வெறுப்பு என்று தெரியவில்லை. இருவருக்கும் இடையே நிறைய வெறுப்புகள் . என் மேலேயும் ஏதோ வெறுப்பு இருந்தது, என்னைப் பற்றியும் நிறைய பேசினார் தினகரன். அவர்களுடைய சொந்த பிரச்னைகளுக்காக கட்சிகளைப் பற்றி வெறுப்பாகப் பேசுவது தவறு.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

தவெக கூட்டணி பற்றியும், விஜய் எங்கள் கூட்டணிக்கு வருவது பற்றியும் பேசுறாங்க. கூட்டணி குறித்த விஷயங்கள் எல்லாமே ஜனவரி மாதத்திற்குப் பிறகுதான் உறுதியாகத் தெரியும்” என்று பேசியிருக்கிறார் நயினார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಪ್ರಚಾರದ ವೇಳೆ ಹೈಡ್ರಾಮಾ: ‘ಕೈ’ಶಾಸಕ ಪ್ರದೀಪ್ ಈಶ್ವರ್ ಗೆ ಚಪ್ಪಲಿ , ಪೊರಕೆ ಪ್ರದರ್ಶನ

ದಾವಣಗೆರೆ,ಮಾರ್ಚ್,28,2026 (www.justkannada.in):  ದಾವಣಗೆರೆ ದಕ್ಷಿಣ ವಿಧಾನಸಭಾ ಉಪಚುನಾವಣಾ ಕಣ ರಂಗೇರಿದ್ದು...

ഇറാനിലെ കരയുദ്ധം അമേരിക്കയെ ചെളിക്കുണ്ടിലാക്കും; വിയറ്റ്നാം ആവര്‍ത്തിക്കുമെന്ന മുന്നറിയിപ്പുമായി റഷ്യ

മോസ്‌കോ: ഇറാനെതിരായ ഏതൊരാക്രമണത്തിന്റെയും വിധി പരാജയമായിരിക്കുമെന്ന് അമേരിക്കയ്ക്ക് മുന്നറിയിപ്പുമായി റഷ്യന്‍ സുരക്ഷാ...

நாமக்கல்: `தொகுதி வேட்பாளரை மாற்ற வேண்டும்'- தங்கமணிக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி

நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி...

India Receives Good News Amid Conflict: యుద్ధం మధ్యలో భారత్‌కు శుభవార్త..

India Receives Good News Amid Conflict: మధ్యప్రాచ్యంలో కొనసాగుతున్న యుద్ధ...