30
March, 2026

A News 365Times Venture

30
Monday
March, 2026

A News 365Times Venture

கரூர் மரணங்கள் : அன்புமணி, செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கிய உழவர் சந்தை திடல் – விஜய்க்கு மறுத்தது ஏன்?

Date:

த.வெ.க. சார்பில் உழவர் சந்தை திடலில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தார்கள். அந்த இடத்தில் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்திருக்கவில்லை.

உழவர் சந்தை பகுதியில் விசாரித்ததில், அன்புமணியின் கூட்டத்துக்கு இந்த உழவர் சந்தை திடலில்தான் அனுமதி கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

உழவர் சந்தை திடல்

அதேமாதிரி, முப்பெரும் விழாவிற்கு முன்பாக செந்தில் பாலாஜியும் இதே இடத்தில் கூட்டம் ஒன்றை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

லைட்ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் அரசியல் கட்சிகளின் கூட்டம் பெரிதாக நடந்ததில்லை என்றும் இங்கிருக்கும் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுகவினர் மாலை போட மட்டும் வருவார்கள் என்றும் கூறுகின்றனர்.

லைட்ஹவுஸ் ரவுண்டானா பகுதி நகரின் முக்கிய பகுதியாக இருக்கிறது. இந்த ரவுண்டானாவை கடந்துதான் அமராவதி பாலம் வழியாக திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல் பகுதிகளுக்கு பேருந்துகள் செல்கின்றன.

லைட் ஹவுஸ் ரவுண்டானா
லைட் ஹவுஸ் ரவுண்டானா

போக்குவரத்து இயக்கம் அதிகமாக இருக்கும் பகுதி என்பதால், அரசியல் கட்சிகளின் கூட்டம் உழவர் சந்தை பகுதிகளிலேயே அதிகம் நடக்கும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

நாங்கள் கேட்ட உழவர் சந்தை அல்லது லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் கூட்டம் கூட்டியிருந்தால் சேதாரம் ஏற்பட்டிருக்காது என தவெக தரப்பில் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಇರಾನ್ ಭಾರತದ ಮಿತ್ರರಾಷ್ಟ್ರವಾಗಿದ್ದಕ್ಕೆ ನಮ್ಮ ಹಡಗುಗಳನ್ನು ಮಾತ್ರ ಬಿಡುತ್ತಿದ್ದಾರೆ-ಸಚಿವ ಎಂ.ಬಿ ಪಾಟೀಲ್

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,28,2026 (www.justkannada.in): ಇರಾನ್ ಭಾರತದ ಮಿತ್ರ ರಾಷ್ಟ್ರ. ಹೀಗಾಗಿ ನಮ್ಮ...

സത്യത്തെ വധിക്കുക എന്നതാണ് ഇസ്രഈലിന്റെ ലക്ഷ്യം; ലബനീസ് മാധ്യമ പ്രവർത്തകരുടെ കൊലയിൽ അപലപിച്ച് അരാഗ്ചി

ടെഹ്‌റാൻ: ലബനീസ് മാധ്യമ പ്രവർത്തകരുടെ കൊലപാതകത്തിൽ അപലപിച്ച് ഇറാൻ വിദേശകാര്യ മന്ത്രി...

திமுக தேர்தல் அறிக்கை: 'TV, Fridgeக்கு ரூ. 8000 மதிப்பிலான கூப்பன், 10 லட்சம் வீடுகள்'- முழு லிஸ்ட்

திமுக வருகிற சட்டமன்றத் தேர்தலில் 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. நேற்று, போட்டியிடப்...

KKR vs MI : ముంబై ఇండియన్స్ చారిత్రాత్మక విజయం.. 14 ఏళ్ల నిరీక్షణకు తెర.!

KKR vs MI : ముంబై ఇండియన్స్ జట్టు ఐపీఎల్ చరిత్రలో...