30
March, 2026

A News 365Times Venture

30
Monday
March, 2026

A News 365Times Venture

அமித் ஷா பேட்டி : மோடியிடம் பிடித்த குணம், விடுமுறை எடுக்காதவர், வரலாறு காணாத பிரதமர்

Date:

மோடியும், அமித் ஷாவும் பாஜகவின் இரட்டைப் பெரும் தூண்கள். பிரதமராக மோடி வலம் வர, கட்சியின் தேசியப் பிரச்னையிலிருந்து, உள்ளூர் உட்கட்சிப் பிரச்சனை வரை பஞ்சாயத்து பண்ணி அடுத்தடுத்த வெற்றிக்காக கூட்டணியைக் காப்பாற்ற வியூகங்கள் வகுத்து வருபவர் அமித்ஷா.

கடந்த பத்து ஆண்டுகளில் இந்த இரண்டு பேரின் பெயர் அடிபடாமல் எந்தவொரு அரசியல் நகர்வும் இருந்ததாக இல்லை.

இந்நிலையில் NDTVக்கு அளித்த பிரத்யேக நேர்காணல் ஒன்றில் மோடியின் சிறந்த தலைமைப் பண்புகள் பற்றி பகிர்ந்துகொண்டிருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

மோடி, அமித் ஷா, பா.ஜ.க Amit Shah, modi

`ஒளிவு மறைவு இருக்காது’

மோடி குறித்துப் பேசியிருக்கும் அமித்ஷா, “மோடியைவிடவும் மிகவும் பொறுமையான, எதையும் கவனமாகக் காது கொடுத்துக் கேட்கும் பண்புகொண்ட நபரை நான் பார்த்ததே இல்லை.

மோடியின் இந்தக் குணத்தை எப்போதும் வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

எந்தவொரு மீட்டிங்கிலும் எல்லோருடைய கருத்தையும் கேட்டுவிட்டு, கடைசியில்தான் பேசுவார். அவரிடம் எந்தவொரு ஒளிவும் மறைவும் இருக்காது.”

நாடாளுமன்றத்தில் எல்லோருக்கும் பேசுவதற்கு அனுமதி கொடுப்பார். எதிர்க்கட்சியினர் வைக்கும் விமர்சனங்களை, குற்றச்சாட்டுகளை ஸ்டாண்டிங் கமிட்டிக்கு அனுப்பி விசாரித்து பரிசீலனை செய்வார். எல்லாத் துறைகளின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்பார்.

மோடி, அமித் ஷா, பா.ஜ.க Amit Shah, modi
மோடி, அமித் ஷா

கடந்த 24 வருடங்களில் விடுமுறையே எடுக்காத ஒரு நபர் உண்டென்றால் அது பிரதமர் மோடிதான். அந்தமாதிரியான அர்ப்பணிப்பு குணம் சும்மா வராது, மக்களுக்காக தன்னை அர்ப்பணித்தால்தான் வரும்.

இதுவரை இருந்த பிரதமர்களில் மிகவும் பிரபலமானவர் பிரதமர் மோடி என்று இந்தியாவும், உலகமும் பாராட்டுகிறது. பிரதமர் மற்றும் முதலமைச்சராக நீண்ட காலம் பதவி வகித்தவரும் பிரதமர் மோடிதான்.

`முதுகெலும்பு கொடுத்த தலைவர்’

வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்து பார்த்தால், இந்தியாவின் மிகப்பெரிய சாதனைகள், வளர்ச்சிகள் அனைத்தும் மோடியின் ஆட்சி காலத்தில்தான் நடந்திருக்கும். இதுவரை வரலாறு கண்டிராத ஒரே பிரதமர் மோடிதான் என்று உறுதியாகச் சொல்வேன்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் முதுகெலும்பற்றதாக இருந்தன. அதற்கு முதுகெலும்பு கொடுத்த தலைவர் மோடி” என்று மோடி குறித்து பெருமிதத்துடன் பாராட்டிப் பேசியிருக்கிறார் அமித் ஷா.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಯತ್ನಾಳ್ ಮರಳಿ ಬಿಜೆಪಿ ಸೇರಲು ಉಪಚುನಾವಣೆ ಒಳ್ಳೆಯ ಅವಕಾಶ- ಸಚಿವ ಎಂ.ಬಿ ಪಾಟೀಲ್

ವಿಜಯಪುರ,ಮಾರ್ಚ್,30,2026 (www.justkannada.in):  ಬಿಜೆಪಿ ಪಕ್ಷದಿಂದ ಉಚ್ಛಾಟಿತರಾಗಿರುವ ಶಾಸಕ ಬಸನಗೌಡ ಪಾಟೀಲ್...

മനുഷ്യരുടെ എല്ലാ വോട്ടും വേണം, മതവര്‍ഗീയതയോട് യോജിപ്പില്ല; എസ്.ഡി.പി.ഐ വോട്ട് സ്വീകരിക്കുമോ എന്ന ചോദ്യത്തില്‍ ബിനോയ് വിശ്വം

കൊച്ചി: എല്ലാ മനുഷ്യരുടെയും വോട്ടുകള്‍ സ്വീകരിക്കുമെന്നും എന്നാല്‍ മതവര്‍ഗീയ സംവിധാനങ്ങളോട് ആശയപരമായി...

தேர்தல்: 'தனித்தொகுதி' Vs 'பொதுத்தொகுதி' – என்ன கணக்கு… எப்படி உருவானது?!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகளுக்கு இடையிலான...

Weight Loss Drugs: రూ.450తోనే బరువు తగ్గొచ్చు..! వైద్యుల వార్నింగ్..

Weight Loss Drugs: భారతదేశంలో బరువు తగ్గించే సెమాగ్లుటైడ్ మందు ఇప్పుడు...