31
March, 2026

A News 365Times Venture

31
Tuesday
March, 2026

A News 365Times Venture

அமெரிக்கா : காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர் முகமது நிஜாமுதின் – இனவெறி காரணமா?

Date:

தெலங்கானா மாநிலம், மஹபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது நிஜாமுதீன் (29). இவர் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றிவந்தார்.

இந்த நிலையில், அவரை காவல்துறை சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக அமெரிக்க காவல்துறை அளித்திருக்கும் தகவலில்,“கடந்த 3-ம் தேதி சண்டா கிளாரா பகுதியிலிருந்து எங்களுகு கத்திக் குத்து சம்பவம் நடந்திருப்பதாக புகார் வந்தது.

அதன் அடிப்படையில், சம்பவ இடத்துக்குச் சென்றோம். அங்கு நிஜாமுதீன் கையில் கத்தியுடன், தன் அறைத் தோழரைத் தாக்கிவிட்டு நின்றிருந்தார். அவரை கத்தியைக் கீழே போட்டு சரணடையக் கூறினோம்.

அமெரிக்கா

ஆனால், அவர் எங்களையே தாக்க வந்தார். அதனால், துப்பாக்கிச்சூடு நடத்தினோம். அதில் படுகாயமடைந்தார், அதே நேரத்தில் காயமடைந்த அவரது அறைத் தோழன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் சம்பவ இடத்திலிருந்து இரண்டு கத்திகள் மீட்கப்பட்டன” எனத் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், கொல்லப்பட்ட நிஜாமுதீனின் லிங்க்ட் இன் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது. அந்தப் பதிவில், “EPAM Systems வழியாக Google-லில் பணிபுரிந்ததேன்.

அங்குதான் ஏற்றுக்கொள்ளவே முடியாதளவு இன வேறுபாடு, விரோதம், பழிவாங்குதல் என மோசமான துன்புறுத்தலை எதிர்கொண்டேன்.

அதோடு, நிறுவனமும் என்னிடம் சம்பள மோசடிச் செய்தது. எனக்கு நியாயமான ஊதியம் வழங்கவில்லை. இனவெறி நபர் மற்றும் குழுவின் உதவியுடன் அவர்கள் தங்கள் துன்புறுத்தல், பாகுபாடு, அச்சுறுத்தும் நடத்தையைத் தொடர்ந்தனர்.

சமீபத்தில், நிலைமை மோசமாகிவிட்டது. எனது உணவு விஷமாக மாற்றப்பட்டது. இப்போது அநீதிக்கு எதிராகப் போராடியதற்காக எனது தற்போதைய குடியிருப்பிலிருந்தும் வெளியேற்றப்படுகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

காவல்துறை
காவல்துறை

நிஜாமுதீன் அமெரிக்க குடிமக்களான இரண்டு அறை தோழர்களுடன் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நிஜாமுதீனின் பதிவைத் தொடர்ந்து, நிஜாமுதீனின் குடும்பத்தினர், அமெரிக்காவில் நிஜாமுதீன் இன பாகுபாட்டை எதிர்கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், நிஜாமுதீனின் உடலை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

 ಕಾಂಗ್ರೆಸ್ ಟಿಕೆಟ್ ಕೊಡಲಿಲ್ಲ ಅಂತ ಮುಸ್ಲೀಮರು ಬಿಜೆಪಿಗೆ ಮತ ಹಾಕಲ್ಲ-ಸಚಿವ ರಾಮಲಿಂಗರೆಡ್ಡಿ

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,30,2026 (www.justkannada.in):  ದಾವಣಗೆರೆ ದಕ್ಷಿಣ ವಿಧಾನಸಭಾ ಉಪಚುನಾವಣೆಯಲ್ಲಿ ಮುಸ್ಲೀಮರ ಮತ...

ദുബായ് തീരത്ത് കുവൈത്ത് എണ്ണ കപ്പലിന് നേരെ ഇറാന്റെ ഡ്രോണ്‍ ആക്രമണം; ക്രൂഡ് ഓയില്‍ വില കൂടി

ദുബായ്: ദുബായ് തീരത്ത് വെച്ച് കുവൈത്തിന്റെ എണ്ണ കപ്പല്‍ ആക്രമിക്കപ്പെട്ടു. നങ്കൂരമിടുന്നതിനിടെയാണ്...

`கேரளத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி வரவேண்டும் என மோடி விரும்புகிறார்' – பிரசாரத்தில் பாய்ந்த ராகுல்

கேரளத்தில் ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற...

Iran-US: భారత్‌కు వస్తున్న ఇరాన్ విమానంపై అమెరికా దాడి

పశ్చిమాసియా యుద్ధం రోజురోజుకు తీవ్రమవుతోంది. ఇరు పక్షాలు ఒకరిపై మరొకరు భీకర...