31
March, 2026

A News 365Times Venture

31
Tuesday
March, 2026

A News 365Times Venture

அதிமுக: "நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்" – என்ன சொல்கிரார் சசிகலா?

Date:

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து, “அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன்” என்று கறாராகப் பேசினார்.

அடுத்த நாளே கட்சியின் பொறுப்புகளிலிருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரை நீக்கினார். இந்தச் சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக இருக்கிறது. அதிமுக-வின் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வந்தனர்.

செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

இதைத்தொடர்ந்து செங்கோட்டையனின் டெல்லி பயணம், அமித் ஷா சந்திப்பெல்லாம் அடுத்தடுத்து அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான இன்று, செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் செங்கோட்டையன், “அண்ணாவின் மறப்போம் மன்னிப்போம் என்ற கருத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற எனது கருத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வம், “பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டுமென பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் சபதம் ஏற்போம். தலைவர்கள் இணையவில்லை என்றால் தொண்டர்கள் இணைந்து அதிமுகவைக் காப்பாற்றுவார்கள்” என்று கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது வி.கே. சசிகலா, “நிராகரிப்பு, பிரிவது எல்லாம் ரொம்ப ஈஸியான வேலை. ஒன்றினைவதுதான் ரொம்பவும் சிரமமானது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அனைவரையும் ஒன்றிணைத்தே நான் பழக்கப்பட்டுவிட்டேன்.

சசிகலா
சசிகலா

அதிமுக ஒன்றிணைந்தால்தான் வெற்றி என்பதுதான் எல்லோரின் எண்ணமும். அதைத்தான் நாங்கள் வெளிப்படுத்துகிறோம்.

இன்றைக்கு அண்ணா பிறந்த நாள். ‘நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்’ என அண்ணா சொன்னதுபோல ‘மறப்போம் மன்னிப்போம்’ என அதிமுக தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಜನಗಣತಿ–2027: ಸ್ವಯಂ-ಗಣತಿಯಲ್ಲಿ ಪಾಲ್ಗೊಳ್ಳಲು ಸಾರ್ವಜನಿಕರಿಗೆ ಅವಕಾಶ

ಮೈಸೂರು, ಮಾರ್ಚ್,31,2026 (www.justkannada.in): ಜನಗಣತಿ-2027 ರ ಅಂಗವಾಗಿ ಸಾರ್ವಜನಿಕರು ಸುರಕ್ಷಿತ...

கோவை தெற்கு: `50,000 வாக்கு வித்தியாசம் டார்கெட்; இது நம்முடைய மானப் பிரச்னை' – எஸ்.பி.வேலுமணி

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் அறிமுக...

Indian Rupee: ఒకప్పుడు ఈ ముస్లిం దేశాలకు రూపాయే అధికారిక కరెన్సీ.. తర్వాత ఏం అయిందంటే!

Indian Rupee: భారత దేశ చరిత్రను పరిశీలిస్తే.. దేశ వైభవం ఏంటో...