5
March, 2026

A News 365Times Venture

5
Thursday
March, 2026

A News 365Times Venture

ADMK: `அதிமுக பலவீனமா இருக்கு, அதை சரிசெய்யத்தான் நான் இருக்கேன்' – சசிகலா பேசியது என்ன ?

Date:

சசிகலா தனது 71-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (திங்கள்கிழமை), சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

“திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு. ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு என்று செயல்படுகிறது. இதை மக்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

தூய்மைப் பணியாளர் விவகாரம் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. தூய்மைப் பணியாளர் விவகாரத்தில், கடந்த 2016 தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் உரிய வழிவகை காண ஜெயலலிதா திட்டமிட்டு இருந்தார். அது குறித்து எனக்கு முழுமையாக தெரியும்.

சசிகலா

ஆனால் அதன் பிறகு அவர் மறைந்து விட்டதால் பல மாற்றங்கள் ஏற்பட்டன. திமுக அரசுக்கு எத்தனை துறைகள் உள்ளன, எத்தனை செயலர்கள் உள்ளனர், அவர்களை எப்படி வேலை வாங்க வேண்டும் என்று எதுவுமே தெரியவில்லை.

தெரியாமல் வந்து ஆட்சியில் அமர்ந்து மக்களை பிழிந்து எடுக்கின்றனர்” என்று திமுகவை விமர்சித்து பேசியிருந்தார்.

தொடர்ந்து அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ அன்வர் ராஜா, எம்.பி மைத்ரேயன் விலகியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், ” அதிமுக இப்போது வரை பலவீனமாகவே இருக்கிறது. அதை சரிசெய்வது தான் என் வேலை. அதை செய்யாவிட்டால் மக்களுக்கு அதிக சிரமம் ஆகிவிடும்.

சசிகலா
சசிகலா

அதிமுகவில் நிலவும் சிக்கலை புதிதாக வந்த யாராலும் தீர்க்க முடியாது. அனுபவம் வாய்ந்தவர்களால் மட்டுமே தீர்க்க முடியும். ஜெயலலிதா ஒரு நாளும் ரோடு ஷோ சென்று கை கொடுத்துக் கொண்டு சென்றதே கிடையாது. அது முதல்வரின் வேலை இல்லை.

2026-ல் நிச்சயம் ஜெயலலிதா ஆட்சி வரும். அந்த திறமை எங்களிடம் இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಬೆಂಗಳೂರು ಸೇರಿ ರಾಜ್ಯದ ಹಲವೆಡೆ ಲೋಕಾಯುಕ್ತ ದಾಳಿ, ಪರಿಶೀಲನೆ

ಬೆಂಗಳೂರು, ಮಾರ್ಚ್​, 5,2026 (www.justkannada.in):  ಬೆಳ್ಳಂಬೆಳಿಗ್ಗೆ ಅಧಿಕಾರಿಗಳಿಗೆ ಲೋಕಾಯುಕ್ತ ಅಧಿಕಾರಿಗಳು...

ഇസ്രഈലിന്റെ പാവയായ ട്രംപിൽ നിന്നും അമേരിക്കയെ തിരിച്ചുപിടിക്കാൻ ആഹ്വാനം ചെയ്ത് ഇറാഖ് നേതാവ്

ബാഗ്‌ദാദ്‌: ഇസ്രഈലിന്റെ കയ്യിലെ പാവയായ അമേരിക്കൻ പ്രസിഡന്റ് ഡൊണാൾഡ് ട്രംപിൽ നിന്നും...

“ஃபினிஷ்' அந்த கை சைகையை நான் திட்டமிட்டு செய்யவில்லை.!' – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

திமுக - காங்கிரஸ் கூட்டணியின் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை நேற்று (மார்ச்.5)...

Sonu Sood: రంగంలోకి హీరో సోనూసూద్.. దుబాయ్‌లో చిక్కుకున్న వారికి ఉచిత వసతి!

పశ్చిమాసియాలో నెలకొన్న యుద్ధ పరిస్థితుల కారణంగా అంతర్జాతీయ విమాన సర్వీసులు రద్దయిన...