29
March, 2026

A News 365Times Venture

29
Sunday
March, 2026

A News 365Times Venture

கனரக வாகன ஓட்டுநர்கள் கவனத்திற்கு; நெரிசலை தவிர்க்க தாம்பரத்தில் போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்

Date:

பொதுமக்களின் பாதுகாப்பையும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதையும் கருத்தில் கொண்டு, நாளை முதல் காலை 6.00 மணியிலிருந்து பிற்பகல் 1.00 மணி வரை சென்னை தாம்பரம் பகுதியில் கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தாம்பரத்தில் முக்கிய சாலைகளான ஜி.எஸ்.டி. சாலை – தாம்பரம், குரோம்பேட், பல்லாவரம் – பம்மல் – குன்றத்தூர் சாலை – திருநீர்மலை சாலை – 200 அடி ரேடியல் ரோடு (200-ft Radial Road) – தாம்பரம் – வேளச்சேரி சாலை – மற்றும் காந்தி ரோடு – முடிச்சூர் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.

போக்குவரத்து நெரிசல்

கனரக வாகனங்கள் திருப்பி விடப்படும் இடங்கள்:

குன்றத்தூர் – சென்னை

குன்றத்தூரிலிருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் – அனகாபுத்தூர் பைப்பாஸ் சர்வீஸ் சாலை அருகே எரிக்கரை சந்திப்பு மற்றும் திருநீர்மலை சாலை – எரிக்கரை சாலை சந்திப்பில் இருந்து மதுரவாயல் பைப்பாஸ் சர்வீஸ் சாலை நோக்கி செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஓரகடம் – சென்னை

ஓரகடத்திலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் – முடிச்சூர் சாலை மற்றும் வெளிச்சுற்றுச் சாலை (Outer ring road) சந்திப்பில் இருந்து வெளிச்சுற்றுச்சாலை நோக்கி செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் – சென்னை

காஞ்சிபுரத்திலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் – முடிச்சூர் சாலை மற்றும் வெளிச்சுற்றுச்சாலை (Outer ring road) சந்திப்பிலிருந்து வெளிச்சுற்றுச்சாலை வழியாக செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம் – சென்னை

தாம்பரத்திலிருந்து சென்னை நோக்கி நோக்கி வரும் கனரக வாகனங்கள் – தாம்பரம் ‘fly over (Southern Side)’ பழைய சோதனைச்சாவடி வாயில் மற்றும் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பு, தாம்பரம் fly fly over-மேல் பகுதியிலிருந்து மேடவாக்கம் மார்க்கமாக வேளச்சேரி செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம்

மதுரவாயில் – சென்னை

மதுரவாயலிலிருந்து சென்னை நோக்கிவரும் கனரக வாகனங்கள் – மதுரவாயல் பைப்பாஸ் ஆம்புலன்ஸ் பாயிண்ட் மற்றும் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பை தொடர்ந்து, இரும்புலியூர் சந்திப்பில் இருந்து பெருங்களத்தூர் நோக்கி செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு – சென்னை

செங்கல்பட்டிலிருந்து சென்னை கனரக நோக்கிவரும் வாகனங்கள் – சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கியும், வண்டலூர் வெளிச்சுற்றுச்சாலை (Outer ring Road) வழியாக படப்பை நோக்கியும், வண்டலூர் பழைய பாலம் வழியாக வாலஜாபாத் சாலை நோக்கியும் செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, வாகன ஓட்டிகள் சீரான போக்குவரத்திற்காக, OMR மற்றும் ECR சாலைகளைப் பயன்படுத்தி, தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறையுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Story Board : ఇరాన్ ఉచ్చులో ట్రంప్..! యుద్ధం మొదలుపెట్టి.. ఎగ్జిట్ దొరకక అమెరికా అయోమయం

ఎవరైనా యుద్ధానికి ముందు వ్యూహరచన చేస్తారు. యుద్ధం మొదలయ్యాక కూడా అవసరమైతే...

ʼಮುಖ್ಯಮಂತ್ರಿ ಪದಕʼ ಪ್ರಕಟ: ಮೈಸೂರಿನ ನಾಲ್ವರು ಸೇರಿ ರಾಜ್ಯದ 153 ಪೊಲೀಸರಿಗೆ ಗೌರವ

  ಬೆಂಗಳೂರು, ಮಾ.೨೮,೨೦೨೬ : 2025ನೇ ಸಾಲಿನ ಮುಖ್ಯಮಂತ್ರಿ ಪದಕ (CM...

ആശങ്ക കുറയുന്നു; രണ്ട് ഇന്ത്യന്‍ എല്‍.പി.ജി കപ്പലുകള്‍ ഹോര്‍മുസ് കടലിടുക്ക് കടന്നു

ന്യൂദല്‍ഹി: ഹോര്‍മുസ് കടലിടുക്കിലൂടെയുള്ള ഗതാഗതം പൂര്‍ണമായും നിരോധിച്ചെന്ന റിപ്പോര്‍ട്ടുകള്‍ ആശങ്കയാകുന്നതിനിടെ രണ്ട്...

"இதற்குப் பெயர்தான் சீட் பங்கீடா?" – கடிந்துக்கொண்ட பி.எல்.சந்தோஷ் ; கப்சிப் நயினார்

அ.தி.மு.க தலைமையிலான தே.ஜ கூட்டணியில், பா.ஜ.க-வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி...