8
March, 2026

A News 365Times Venture

8
Sunday
March, 2026

A News 365Times Venture

"திமுக கூட்டணியில் தேமுதிக-வா?" – ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து பிரேமலதா விளக்கம்

Date:

தே.மு.தி.க தலைவர் பிரேமலதா விஜயகாந்த், தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலினைச் சந்தித்து இன்று (ஜூலை 31) நலம் விசாரித்திருக்கிறார்.

ஸ்டாலினைச் சந்தித்தப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பிரேமலதா, “அவரின் உடல்நிலையை விசாரிப்பதற்காகத்தான் சென்றிருந்தோம். இன்றில் இருந்து என்னுடைய பணிகளைத் தொடங்குகிறேன் என்று சொன்னார்.

ஸ்டாலினை நலம் விசாரித்த பிரேமலதா

எங்களின் திருமணம் நடந்தது கலைஞர் தலைமையில் என்று எல்லோருக்கும் தெரியும். கேப்டனுக்கும், கலைஞருக்கும் 45 வருட நட்பு இருந்தது. அப்போது இருந்தே அண்ணன் ஸ்டாலின் அவர்களும் கேப்டன் அவர்களுடன் மிகப்பெரிய நட்பில் இருந்தார்.

கேப்டனுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாக ஃபோன் செய்து விசாரிப்பார். நேரில் வந்து சந்திப்பார். கேப்டன் குணமாக வேண்டும் என்று பல அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார்.

இப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறபோது குடும்ப நட்பு ரீதியாகத்தான் அவரை நேரில் சென்று சந்தித்தோம்” என்று கூறியிருக்கிறார்.

ஸ்டாலினை நலம் விசாரித்த பிரேமலதா
ஸ்டாலினை நலம் விசாரித்த பிரேமலதா

தொடர்ந்து, “திமுக கூட்டணியில் தேமுதிக-வா?” என்ற கேள்விக்கு, “ஊடகங்கள் இந்தச் சந்திப்பை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள். ஆனால் நாங்கள் நட்பு ரீதியாகத்தான் சந்தித்தோம்.

தற்போது நாங்கள் கூட்டணி குறித்து எல்லாம் சிந்திக்கவில்லை. கட்சி செயல்பாடுகளில்தான் கவனம் செலுத்தி வருகிறோம். கூட்டணி குறித்து நேரம் வரும்போது சொல்வோம்” என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

മമ്മൂട്ടി ഫോണില്‍ വിളിച്ചു; വിഷയം വഷളാക്കിയത് ചില മാധ്യമങ്ങളും വലത് സൈബര്‍ കേന്ദ്രങ്ങളും: കെ. റഫീഖ്

മലയാളിയുടെ പ്രിയപ്പെട്ട നടനായി എക്കാലവും നമ്മളെല്ലാം ഹൃദയത്തോട് ചേര്‍ത്ത് പിടിക്കുന്ന മമ്മൂട്ടി...

அப்பா நிதிஷ் தேசிய அரசியலுக்கு சென்றால் என்ன, பீகார் அரசியலில் என்ட்ரி கொடுத்த 'மகன்' நிஷாந்த்

முதலமைச்சராக பதவியேற்ற கிட்டத்தட்ட 4 மாதங்களில் தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்...

PM Modi: తృణమూల్ అహంకారం ముక్కలవుతుంది.. మమతా సర్కార్‌పై ప్రధాని ఫైర్..

PM Modi: అంతర్జాతీయ మహిళా దినోత్సవం సందర్భంగా ఆదివారం ఢిల్లీలో సుమారు...

MDA ವಿಶೇಷ ತಹಶೀಲ್ದಾರ್ ವಿರುದ್ಧ ಶಿಸ್ತು ಕ್ರಮ: ಸರ್ಕಾರದಿಂದ ಮತ್ತೆ ಸೂಚನೆ

  ಮೈಸೂರು, ಮಾ.೦೮,೨೦೨೬ : ಅಧಿಕಾರ ದುರುಪಯೋಗದ ಆರೋಪ ಎದುರಿಸುತ್ತಿರುವ ಮೈಸೂರು...