14
March, 2026

A News 365Times Venture

14
Saturday
March, 2026

A News 365Times Venture

`காவல்துறையை நிர்வகிக்க வக்கற்ற பொம்மை முதல்வர்!' – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

Date:

“உதவி ஆய்வாளர் ராஜராமன் கொலை வழக்கில் குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமிழக அரசை வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” சென்னை எழும்பூரில் கடந்த ஜூலை 18 அன்று தாக்குதலுக்கு ஆளாகிய ஆயுதப்படை எஸ்.ஐ. ராஜாராமன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சம்பவத்தன்று நள்ளிரவில் மர்ம நபர்களால் எஸ்.ஐ. ராஜாராமன் அவர்கள் தாக்கப்பட்டதாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க்ரைம்

ஆனால், புனைவு FIR-களுக்கு பெயர்போன திமுக அரசு, அஜித்குமார் வழக்கு போலவே இந்த வழக்கிற்கு என்ன கதை எழுதியுள்ளது என தெரியவில்லை. ஆனால், ஒரு காவல்துறை உதவி ஆய்வாளர் தாக்குதலுக்கு ஆளாகி, உயிரிழந்துள்ளது என்பது திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதை மீண்டும் மெய்ப்பிக்கிறது.

காவல்துறையினர் தாக்கப்படுவது, ராஜினாமா செய்வது, காவல்துறை சீர்கேடுகள் குறித்து பொதுவெளியிலேயே தெரிவிப்பது என தொடர்ந்து வரும் செய்திகள் உணர்த்துவது ஒன்றைத் தான்- காவல்துறையை நிர்வகிக்க வக்கற்ற முதல்வராக இருக்கிறார் பொம்மை முதல்வர் ஸ்டாலின்!

எஸ்.ஐ. ராஜாராமன் கொலை வழக்கில் நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಮಾ.28ಕ್ಕೆ ಒಳಮೀಸಲಾತಿ ಬಗ್ಗೆ ಸಭೆ: ಅಂದು ಸಮಸ್ಯೆ ಬಗೆಹರಿಯುತ್ತೆ- ಗೃಹ ಸಚಿವ ಪರಮೇಶ್ವರ್

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,14,2026 (www.justkannada.in): ಮಾರ್ಚ್ 28ಕ್ಕೆ ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ ಒಳಮೀಸಲಾತಿ ಬಗ್ಗೆ...

ഹോട്ടലുകള്‍ കല്‍ക്കരിയിലേക്കും വീടുകള്‍ക്ക് പി.എന്‍ജിയിലേക്കും മാറണം; എല്‍.പി.ജി ക്ഷാമം പരിഹരിക്കാന്‍ സര്‍ക്കാരിന്റെ പുതിയ നിര്‍ദേശം

ന്യൂദല്‍ഹി: ഇറാനെതിരായ ഇസ്രഈല്‍-അമേരിക്ക യുദ്ധത്തിന്റെ അനന്തരഫലമായി ഇന്ധന ക്ഷാമം രൂക്ഷമാവുന്ന സാഹചര്യത്തില്‍...

Mahmudullah: భారత్ చేతిలో ఆ ఓటమి ఇప్పటికీ మర్చిపోలేము.. ఆటగాళ్లందరం బోరున ఏడ్చేశాం.!

Mahmudullah: 2016 టీ20 వరల్డ్‌కప్‌ లో భారత్‌ తో జరిగిన మ్యాచ్‌...