13
March, 2026

A News 365Times Venture

13
Friday
March, 2026

A News 365Times Venture

விருதுநகர்: `ஒரே மாவட்டத்துக்கு இரண்டு தலைமை அரசு மருத்துவமனைகள் இங்குதான்..!' – மா.சுப்பிரமணியன்

Date:

விருதுநகர் மாவட்டம், கன்னிசேரிபுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன்.ஆகியோர் முன்னிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரூ.5.95 கோடி செலவில் விருதுநகர், திருச்சுழி, சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் இராஜபாளையம் ஆகிய தொகுதிகளில் கட்டப்பட்டுள்ள 14 புதிய மருத்துவக் கட்டடங்களை திறந்து வைத்து 20 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பெட்டகம் வழங்குதல்

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கடந்த 4 ஆண்டுகளில் விருதுநகர் மாவட்டத்தில் 415 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு மருத்துவக் கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் ரூ.127 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு தலைமை மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன. தமிழகத்திலேயே விருதுநகர் மாவட்டத்தில் மட்டும்தான் ராஜபாளையம் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய இரண்டு இடங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உரை

அடிக்கடி பட்டாசு வெடிவிபத்து நடக்கும் பகுதியான சிவகாசியில் முதலமைச்சரின் ஆணைப்படி ரூ.32.54 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட உயர் தீக்காய சிகிச்சைப்பிரிவு கட்டும் பணி தொடங்கி விரைவில் நிறைவு பெறவுள்ளது. மருத்துவத் துறை வளர்ச்சிக்கு தேவையான நிதியை இந்த மாவட்டத்தின் அமைச்சரான நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தந்து வருகிறார். அவர் நிதி தரத் தர கட்டடங்கள் தொடர்ச்சியாக கட்டப்பட்டு கொண்டிருக்கிறது. ஏற்கெனவே சொன்னதைப் போல 150 கோடி ரூபாய் அளவிலான கட்டட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாதத்திற்கு ஒருமுறை 20 கட்டடங்களை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.” என தெரிவித்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ನನ್ನನ್ನು ಬೆಳೆಸಿದಂತೆ ಯತೀಂದ್ರರನ್ನು ರಾಜಕೀಯವಾಗಿ ಬೆಳೆಸಿ-ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ

ಮೈಸೂರು,ಮಾರ್ಚ್13,2026 (www.justkannada.in):  ರಾಜಕೀಯವಾಗಿ ನನ್ನನ್ನು ಬೆಳೆಸಿದಂತೆ ಪುತ್ರ ಯತೀಂದ್ರರನ್ನು ಬೆಳೆಸುವಂತೆ...

കടന്നുവന്ന കനല്‍വഴികള്‍ മറ്റുള്ളവര്‍ മറന്നാലും ഞാന്‍ മറക്കില്ല; എന്റെ ചോരവീണ മണ്ണില്‍ തലയുയര്‍ത്തിത്തന്നെ നില്‍ക്കും: കെ. സുധാകരന്‍

കണ്ണൂര്‍: നിയമസഭാ സ്ഥാനാര്‍ത്ഥി നിര്‍ണയത്തിലെ അതൃപ്തി പരസ്യമാക്കി കോണ്‍ഗ്രസ് നേതാവ് കെ.സുധാകരന്‍....

பண்ணையாளர்கள் அறிமுகப்படுத்திய பரிசுகள்… வளைக்கப்பட்ட வாக்காளர்கள்! | நினைவுச் சுவடுகள் 09

பரிசுகளால் வளைக்கப்பட்ட வாக்காளர்கள்நினைவுச் சுவடுகள்தமிழ்நாட்டு அரசியலில் தேர்தல்கள் என்றால் பொதுக்கூட்டம், மாநாடு,...

Heroes Body Transformation: సినిమాల కోసం బాడీ ట్రాన్స్‌ఫర్మేషన్.. యంగ్ హీరోల సరికొత్త లుక్స్ వైరల్..!

Heroes Body Transformation: ప్రస్తుతం టాలీవుడ్‌లో మేకోవర్ సీజన్ నడుస్తోంది. కొత్త...