13
March, 2026

A News 365Times Venture

13
Friday
March, 2026

A News 365Times Venture

"இப்போதுதான் உயிரே வந்தது; அவரை கேரளாவிற்கு அழைத்து வருவோம்"- கேரள நர்ஸ் நிமிஷாவின் கணவர் பேட்டி

Date:

ஏமனில் தன்னுடைய நண்பரும், தொழில் ரீதியான கூட்டாளியாகவும் இருந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கொலை வழக்கில், கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு நாளை (ஜூலை 16) நிறைவேற்றப்பட இருந்த, மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர், நிமிஷா பிரியா. தற்போது 35 வயதாகும் இவர், தொடுபுழாவைச் சேர்ந்த டாமி தாமஸ் என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. டோமி தாமஸ் தனது மகளுடன் தற்போது கேரளாவில் வசிக்கிறார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிமிஷா பிரியா

ஏமனில் நிமிஷாவின், தொழில் ரீதியான கூட்டாளியாக இருந்த தலால் அப்தோ மஹ்தி என்பவர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தன்னைக் கொடுமைப்படுத்தியதாகக் நிமிஷா தரப்பில் கூறப்படுகிறது. மஹ்தியிடமிருந்து தப்பிப்பதற்காக, 2017 ஜூலை 25-ம் தேதி அவருக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளார் நிமிஷா. மயக்க மருந்து ஓவர் டோஸ் ஆனதால் தலால் அப்துல் மஹ்தி மரணமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் 2020-ல் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தன்னை கொடுமைப்படுத்தியதால்தான் கொலை செய்ததாக நிமிஷா பிரியா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டும், அதை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்நிலையில் நிமிஷா பிரியாவுக்கு நாளை நிறைவேற்றப்பட (ஜூலை 16) இருந்த, மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. நிமிஷாவின் குடும்பத்தினர் இந்திய அரசின் மூலம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்தும் அது கைகூட வில்லை.

இந்தச் சூழலில் இந்தியாவைச் சேர்ந்த மூத்த இஸ்லாமியத் தலைவர் அபுபக்கர் முஃப்தி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியதால் தற்காலிகமாக தேதி அறிவிக்கப்படாமல் நிமிஷாவின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், மஹ்தியின் குடும்பத்தினர் பிளட் மணி எனப்படும் தொகையைப் பெற்றுக் கொண்டு நிமிஷாவை மன்னிக்க ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

அபுபக்கர் முஃப்தி

ஏமன்: கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறுத்திவைப்பு; காரணம் இதுதான்!

இதுகுறித்து பேசியிருக்கும் நிமிஷாவின் கணவர் டோமி தாமஸ், “நிமிஷாவின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது நல்ல செய்தி. எங்களுக்கெல்லாம் இப்போதுதான் உயிரே வந்தது. இன்னும் கடுமையாக முயற்சி செய்து விரைவில் நிமிஷாவை இங்கு கேரளா அழைத்துவருவோம்.” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಇಂದು ರಾಜ್ಯ ಬಿಜೆಪಿ ಕೋರ್ ಕಮಿಟಿ ಸಭೆ: ಸಂಭಾವ್ಯ ಅಭ್ಯರ್ಥಿಗಳ ಕುರಿತು ಚರ್ಚೆ

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,13,2026 (www.justkannada.in): ಇಂದು ರಾಜ್ಯ ಬಿಜೆಪಿ ಕೋರ್ ಕಮಿಟಿ ಸಭೆ...

ഇറാന്റെ വൈദ്യുതി സംവിധാനത്തെ തകര്‍ക്കുമെന്ന് ട്രംപ്; അരമണിക്കൂറിനുള്ളില്‍ മേഖലയെ മുഴുവന്‍ ഇരുട്ടിലാക്കുമെന്ന് ലാരിജാനി

ടെഹ്‌റാന്‍: ഇറാന്റെ വൈദ്യുതി സംവിധാനങ്ങളെ ആക്രമിച്ചാല്‍ അര മണിക്കൂറിനകം മേഖലയെ പൂര്‍ണമായും...

Mojtaba Khamenei: ఇరాన్ కొత్త సుప్రీం లీడర్ మోజ్తాబా పరిస్థితి విషమం.. తాజా అప్‌డేట్ ఏంటంటే!

ఇరాన్ కొత్త సుప్రీం లీడర్‌గా ఖమేనీ కుమారుడు మోజ్తాబా ఎన్నికయ్యాడు. దాదాపు...