12
March, 2026

A News 365Times Venture

12
Thursday
March, 2026

A News 365Times Venture

Shashi Tharoor: மோடியைப் புகழ்ந்து கட்டுரை; "பாஜக-வில் இணைகிறேனா?" – சசி தரூர் விளக்கம்

Date:

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா அளித்த பதிலடி தொடர்பாக விளக்கமளிக்கும் நோக்கில் இந்தியா அரசு தூதுக்குழு ஒன்றை உலக நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளச் செய்திருக்கிறது.

இந்தக் குழுவுக்குக் காங்கிரஸ் எம்.பி., சசி தரூரைத் தலைமையாக நியமித்திருந்தது. அதே நேரம், “பாகிஸ்தன் – இந்தியா விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு உள்ளிட்ட விவகாரங்களால், இந்தியாவின் ராஜ தந்திர நடவடிக்கைகள் சிதைந்து வருகிறது. இந்தியா உலகளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது” எனக் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

ராகுல் காந்தி – மோடி

இந்த நிலையில், எம்.பி சசி தரூர் எழுதிய கட்டுரையால் அவர் பா.ஜ.க-வில் இணையவிருப்பதாகத் தகவல் வெளியானது.

சசி தரூர் எழுதிய கட்டுரை

நேற்று சசி தரூர் எழுதிய கட்டுரை தி இந்துவில் வெளியானது. அதில், “பிரதமர் மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு, ஈடுபாடு, விருப்பம் ஆகியவை உலக அரங்கில் இந்தியாவிற்கு முக்கிய சொத்தாக உள்ளன.

‘ஆபரேஷன் சிந்தூர்’-ஐ தொடர்ந்து வந்த ராஜதந்திர நடவடிக்கைகள், தேசிய உறுதிப்பாட்டையும், உலக நாடுகளுடனான இந்தியாவின் ஆரோக்கியமான தொடர்பையும் உருவாக்கும் தருணமாக இதைக் கருதுகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கட்டுரை குறித்து பா.ஜ.க-வின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, “பிரதமர் மோடியின் சுறுசுறுப்பு மற்றும் உலகளாவிய தொடர்பு இந்தியாவிற்கு ராஜதந்திர நன்மை என்பதை சசி தரூர் ஒப்புக்கொள்கிறார்” எனத் தெரிவித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து சசி தரூர் பா.ஜ.க-வில் சேரவிருப்பதாகத் தகவல் வெளியாகிப் பரபரப்பானது.

இந்நிலையில், நேற்று (ஜூன் 23) ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், இதற்குப் பதிலளித்த எம்.பி சசிதரூர், “அனைத்துக் கட்சிகளின் ஒற்றுமையையும், மக்கள் தொடர்புப் பணியின் வெற்றியையும்தான் அந்தக் கட்டுரையில் விவரித்திருக்கிறேன்.

சசி தரூர்
சசி தரூர்

பிரதமர் மோடி மற்ற நாடுகளுடன் தொடர்புகொள்வதில் சுறுசுறுப்புடன் செயல்பட்டு ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார் என்று நான் சொன்னேன். 11 ஆண்டுகளுக்கு முன்பு நான் நாடாளுமன்றத்தின் வெளியுறவுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டபோது, ‘பா.ஜ.க-வின் வெளியுறவுக் கொள்கை அல்லது காங்கிரஸின் வெளியுறவுக் கொள்கை என்று எதுவும் இல்லை.

இந்திய வெளியுறவுக் கொள்கை மட்டுமே உள்ளது’ எனக் கூறினேன். எனவே, அந்தக் கட்டுரை நான் பா.ஜ.க-வில் சேர்வதற்கான அறிகுறியல்ல. அது தேசிய ஒற்றுமைக்கான அறிக்கை” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಒಳಮೀಸಲಾತಿ ಜಾರಿಗೆ ಬದ್ದ: ಒತ್ತಡ ಹಾಕುವ ಅವಶ್ಯಕತೆ ಇಲ್ಲ-ಗೃಹ ಸಚಿವ ಪರಮೇಶ್ವರ್

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,11,2026 (www.justkannada.in): ಒಳ ಮೀಸಲಾತಿ ಗೊಂದಲದಿಂದಾಗಿ ನೇಮಕಾತಿಗಳಿಗೆ ತಡೆ ಬಿದ್ದಿದ್ದು...

ബത്തേരിയിലെ ശുചീകരണ തൊഴിലാളികളെ പിരിച്ചുവിടാന്‍ യു.ഡി.എഫ് ഭരണസമിതി; പ്രതിഷേധം

ബത്തേരി: സുല്‍ത്താന്‍ ബത്തേരിയിലെ ശുചീകരണ തൊഴിലാളികളെ പിരിച്ചുവിടാന്‍ യു.ഡി.എഫ് ഭരണസമിതിയുടെ നീക്കം....

`மக்கள் திமுக அரசை தூக்கி எறிய விரும்புகிறார்கள்; NDA மட்டுமே…' – திருச்சியில் பிரதமர் மோடி உரை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் பரபரக்கிறது. தொடர்ந்து முக்கிய அரசியல் கட்சித்...

Interest Rates Hike: ఆ బ్యాంక్‌లో లోన్ తీసుకున్న వారికి బిగ్‌షాక్..పెరగనున్న వడ్డీ రేట్లు..

సొంత ఇల్లు కట్టుకోవాలన్నా లేదా వ్యాపారాన్ని విస్తరించాలన్నా చాలామంది బ్యాంక్ రుణాలపైనే...