12
March, 2026

A News 365Times Venture

12
Thursday
March, 2026

A News 365Times Venture

முருக பக்தர்கள் மாநாடு: 10,000 வாகனங்களில் 2.5 லட்சம் பேர்? மேடையில் முருகன் சிலைகள் – நேரடி விசிட்

Date:

மதுரை பாண்டி கோவில் அருகிலுள்ள அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முருக பக்தர்கள் மாநாடு இன்று நடைபெறவிருக்கிறது.

இம்மாநாட்டுக்காக அறுபடை முருகன் கோவில்களைப் போன்ற செட் ஒன்று மாநாட்டுத் திடலில் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த செட்டைக் காண மக்கள் அதிகளவில் கூடி வருகின்றனர்.

மாநாட்டுக்கு முந்தைய சில நாட்களிலேயே இந்த செட்டைக் காண ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியிருந்தனர். ஆளுநர் ஆர்.என்.ரவி, பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் பலரும் இந்த செட்டில் வழிபட்டுச் சென்றிருந்தனர்.

மாநாடு இன்று மாலை நடைபெறவிருப்பதைத் தொடர்ந்து காலை முதலே மக்கள் மாநாட்டுத் திடலை நோக்கி வர ஆரம்பித்திருக்கின்றனர்.

மாநாட்டுத் திடல்

டோல் கேட்டிலும் முக்கியமான பாய்ண்டுகளிலும் செக்போஸ்ட் அமைத்து காவல்துறையினர் மாநாட்டுக்கு ஆட்களை அழைத்துச் செல்லும் வாகனங்களின் விவரங்கள் குறித்துக் குறிப்பு எடுத்துக் கொண்டனர்.

வாகனத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள், எந்தப் பகுதியினர், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள், யார் பொறுப்பில் இங்கே அழைத்துவரப்படுகிறார்கள் என அத்தனை தகவல்களையும் குறித்துக் கொண்டனர்.

நேற்று வரை மாநாட்டுத் திடலின் வாயிலில் அறுபடை கோவில் செட் அமைக்கப்பட்டு, முருகர் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தது.

ஆனால், மாநாட்டு நாளான இன்று அங்கிருந்த சிலைகள் மாநாடு நடக்கும் முக்கிய மேடைக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது.

மாநாட்டுத் திடலை நோக்கி வரும் மக்கள் மாநாட்டில் பங்கேற்பதை விட இந்த அறுபடை முருகர் செட்டை வழிபடவே அதிக விருப்பம் காட்டி வருகின்றனர்.

வாயிலில் இருக்கும் அந்த அறுபடை செட்டில் முருகர் சிலைகள் இல்லையென்றாலும், வெறும் செட்டையே வந்து வணங்கிச் செல்கின்றனர்.

அதேமாதிரி, மேடையில் வைக்கப்பட்டிருக்கும் முருகர் சிலைகளையும் அப்படியே சென்று பார்த்துவிட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க சார்பில் மாநாட்டுக்கு 5 லட்சம் பேர் வருவார்கள் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், 10,000 வாகனங்களில் இரண்டரை லட்சம் பேர் வருவார்கள் என இந்து முன்னணி சார்பில் தங்களுக்குக் கூறப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தகவல் சொல்கின்றனர்.

மாநாட்டுத் திடலில் மக்கள் அமர்வதற்கு பூபாலன், உத்தமசீலன் என முருகர் பெயரில் பாக்ஸ் பாக்ஸாக இருக்கைகள் அமைத்து ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಗ್ಯಾಸ್ ಸಿಲಿಂಡರ್ ಸಮಸ್ಯೆ: ಕೇಂದ್ರದ ವಿರುದ್ದ ಗುಡುಗಿದ ಮಲ್ಲಿಕಾರ್ಜುನ ಖರ್ಗೆ

ನವದೆಹಲಿ,ಮಾರ್ಚ್,12,2026 (www.justkannada.in): ಮಧ್ಯಪ್ರಾಚ್ಯದಲ್ಲಿ ಯುದ್ದ ಹಿನ್ನೆಲೆಯಲ್ಲಿ ಗ್ಯಾಸ್ ಸಿಲಿಂಡರ್ ಪೂರೈಕೆಯಾಗದೆ...

ഇറാനെ ആക്രമിക്കാനായി ഇറാഖിനെ താവളമാക്കാന്‍ ആരെയും അനുവദിക്കില്ല: ഇറാഖ് പ്രധാനമന്ത്രി

ബാഗ്ദാദ്: ഇറാനെതിരായ ആക്രമണങ്ങള്‍ക്ക് യു.എസ് ഇറാഖിന്റെ വ്യോമാതിര്‍ത്തിയടക്കം ഉപയോഗിക്കുന്നതിനെ എതിര്‍ത്ത് ഇറാഖ്...

Supreme Court: పార్టీ ఫిరాయింపుల కేసులో సుప్రీంకోర్టు సంచలన తీర్పు..

Supreme Court: 10 మంది పార్టీ ఫిరాయింపు కేసు ఎదుర్కొన్న ఎమ్మెల్యేలకు...