13
March, 2026

A News 365Times Venture

13
Friday
March, 2026

A News 365Times Venture

"கூட்டணி பேரம் பேசுவதற்காக கட்சி நடத்தவில்லை; அதிமுகவோடு சேரலாம், ஆனால்" – திருமா சொல்வதென்ன?

Date:

தமிழக அரசியல் களத்தில் இப்போதைக்குக் கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன.

அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவிட்டனர். அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் பாஜக கூட்டணியில் தலைமை அதிகாரத்தைக் கைப்பற்ற திட்டங்கள் தீட்டுவதாக சர்ச்சைகள் வெடித்த வண்ணமிருக்கின்றன.

விசிக தலைவர் திருமாவளவன்

இதற்கிடையில் கூட்டணி குறித்து, `பேசவேண்டிய நேரத்தில் மீசையை முறுக்கிப் பேசுவேன்’ என்று திருமாவளவன் பேசியிருந்தார்.

இந்நிலையில் மதுரையில் பேசிய திருமாவளவன், “அரசியலில் நிதானம், பொறுமை, தெளிவு தேவை. கொள்கை அடிப்படையில் நம் பகைவர்கள் யார் என்பதை தீர்மானிக்கத் துணிவு தேவை. கூட்டணி குறித்து தெளிவாக இருக்கிறோம். பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது. இதைத் தெளிவாகத் தெரிவித்துவிட்டோம்.

திருமாவளவன்
திருமாவளவன்

அதிமுகவோடு சேரலாம் பிரச்னையில்லை. ஆனால் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் அது முடியாது. பாஜக, பாமக இருக்கும் அணியில் ஒருபோதும் நாங்கள் சேரமாட்டோம்.

இப்படி எல்லா கதவுகளையும் மூடிவிட்டால் எப்படி கூட்டணி பேரம் பேசுவது என்று எல்லோரும் கேட்கிறார்கள். கூட்டணி பேரம் பேசுவதற்காக நாங்கள் கட்சி நடத்தவில்லை” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഇന്ധനക്ഷാമമില്ല, എല്‍.പി.ജി ഉത്പാദനം 28% വര്‍ധിപ്പിച്ചു; വ്യാജപ്രചരണം വേണ്ട: ഹര്‍ദീപ് സിങ്

ന്യൂദല്‍ഹി: ഇന്ത്യയിലെ ഊര്‍ജ ഇറക്കുമതി സുരക്ഷിതമായി തുടരുകയാണെന്ന് പെട്രോളിയം മന്ത്രി ഹര്‍ദീപ്...

சென்னை ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துகள் அழிப்பு போராட்டத்தில் மே 17 இயக்கத்தினர்!

தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. அந்தவகையில்...

Lifetime Achievement Award: ‘ది వాల్’ రాహుల్ ద్రావిడ్ కు అరుదైన గౌరవం..

Lifetime Achievement Award: భారత మాజీ క్రికెటర్, మాజీ టీమిండియా కోచ్,...