13
March, 2026

A News 365Times Venture

13
Friday
March, 2026

A News 365Times Venture

India – America: “பயங்கரவாதத்துக்கு எதிராக இருக்கும் பாகிஸ்தானின் நட்பும் தேவை'' – அமெரிக்க தளபதி

Date:

இந்தியாவின் பயங்கரவாதத்துக்கு எதிரான பிரசாரத்துக்கும், நடவடிக்கைக்கும் அமெரிக்கா துணை நிற்கும் என அமெரிக்க தளபதி ஜெனரல் மைக்கேல் குரில்லா தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அமெரிக்க நேரப்படி செவ்வாய்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடந்த வாரம் இந்திய நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்து உரையாற்றினோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவிற்கு அமெரிக்கா வலுவான ஆதரவை உறுதிப்படுத்தினோம்.

Michael Kurilla

அதே நேரம், இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் நட்புறவுக் கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கிறது. ஆகஸ்ட் 26, 2021 அன்று அபே கேட்டில் தற்கொலைத் தாக்குதல் நடந்தது. 13 அமெரிக்க உறுப்பினர்களும், 160 பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பின்னணியில் இருந்த ISKP (Islamic State-Khorasan Province) அமைப்பின் முகமது ஷரிபுல்லாவை கைது செய்து நாடு கடத்துவதற்கு எங்கள் பாகிஸ்தான் கூட்டாளிகளின் நடவடிக்கைகள்தான் காரணம்.

இது உலகளவில் பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் பாகிஸ்தானின் பங்களிப்பை எடுத்துக்காட்டுகிறது.

எனவே பயங்கரவாதத்துக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தானுடனும் இந்தியாவுடனும் நட்புறவு பாராட்ட வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு இருக்கிறது. இந்தியாவுடன் நட்பாக இருந்தால் பாகிஸ்தானுடன் நாம் நட்பு கொள்ள முடியாது என்பதை நான் நம்பவில்லை.

Michael Kurilla
Michael Kurilla

எனவே, இரு நாடுகளுடனான உறவின் நன்மைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்ய முன்வந்த அவரது திட்டங்கள் குறித்து என்னால் பேச முடியாது. என்றாலும், உலகம் அவரது இயல்பை அறிந்திருக்கிறது. ஆனால் இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைத்தால் அது நல்லவிஷயம்தான்.” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

IndiGo: ఇరాన్ వార్ ఎఫెక్ట్.. పెరిగిన ఇండిగో టికెట్ ధరలు..

IndiGo: మధ్యప్రాచ్యంలోని ఇరాన్ యుద్ధ ప్రభావం దేశ విమానయాన రంగంపై పడింది....

ಗ್ಯಾರಂಟಿ ಯೋಜನೆ ಹಿಂಪಡೆಯಿರಿ ಎಂದು ಬಿಜೆಪಿ ನಿರ್ಣಯ ಮಂಡಿಸಲಿ- ಡಿಸಿಎಂ ಡಿಕೆ ಶಿವಕುಮಾರ್ ಸವಾಲು

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,13,2026 (www.justkannada.in): ಗ್ಯಾರಂಟಿ ಯೋಜನೆಗಳನ್ನು ಮರುಪರಿಶೀಲನೆ ಮಾಡಿ ಅಥವಾ ಹಿಂಪಡೆಯಿರಿ...

ഭീകര സംഘടനകൾക്ക് ഇൻഷുറൻസ് പോളിസികൾ നൽകാൻ ഉദ്ദേശിക്കുന്നില്ല: നെതന്യാഹു

ടെൽ അവീവ്: ഇറാന്റെ പുതിയ പരമോന്നത നേതാവിനെതിരെ പരോക്ഷ ഭീഷണിയുമായി ഇസ്രഈൽ...

ஈரான் தாக்குகிறதுதான்; ஆனாலும், மோதாமல் 'சைலன்ட்டாக' இருக்கும் வளைகுடா நாடுகள் – என்ன காரணம்?

ஈரான் மீது போர் தொடுத்தது என்னவோ அமெரிக்காவும், இஸ்ரேலும் தான். ஆனால்,...