14
March, 2026

A News 365Times Venture

14
Saturday
March, 2026

A News 365Times Venture

Manipur: மணிப்பூரில் மீண்டும் வெடிக்கும் போராட்டங்கள்; இணைய சேவைகள் முடக்கம் – என்ன நடக்கிறது?

Date:

இந்திய வரலாற்றின் கருப்பு பக்கங்களில் சிகப்பு எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய வரலாறு மணிப்பூருடையது. மே 3, 2023-ம் ஆண்டு இரு சமூக மக்களுக்கிடையே கலவரம் தொடங்கி இன்றுடன் சரியாக இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டது.

பெரும்பான்மை மெய்தி இனத்தினருக்கும் சிறுபான்மை குக்கி பழங்குடி சமூகத்தினருக்கும் இடையே நடந்த மோதல் நாட்டையே உலுக்கியது. இந்த இரண்டு ஆண்டுகளாகவே மணிப்பூர் விஷயம் வதந்திகள் தொடங்கி மக்களவை விவாதம், அரசியல் தலைவர்களின் கள்ள மெளனம் என புகைந்துகொண்டேதான் இருந்தது. கடந்த பிப்ரவரியில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு தற்போது ஜனாதிபதி ஆட்சி அங்கு நடந்து வருகிறது.

மணிப்பூர்

இந்நிலையில் மணிப்பூரில் மெய்தி இன அமைப்பான அரம்பாய் தெங்கோல் (AT) தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக செய்தி பரவியதைத் தொடர்ந்து அங்குப் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்து நேற்று (ஜூன் 7ம் தேதி) இரவு தலைநகர் இம்பாலில் போராட்டங்கள் தீவிரமடைந்தன.

இருப்பினும் கைது செய்யப்பட்ட தலைவரின் பெயர் மற்றும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதுமில்லை.

இதைத்தொடர்ந்து தங்கள் தலைவரை விடுவிக்கக் கோரி குவாகிடெல் மற்றும் உரிபோக்கில் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சாலை மறியல், பிரதான சாலைகளில் டயர்களை வைத்து தீயிட்டுக் கொளுத்துவது, கோஷங்களைப் போடுவது என போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

Representational image

இதற்கிடையே பல்வேறு வதந்திகளும் பரவி வருகிறது. இந்தப் பதற்றமான சூழலில் வதந்திகள் பரவி மோசமான நிலை ஏற்படுவதைத் தடுக்க, இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தௌபல், பிஷ்ணுபூர் மற்றும் காக்சிங் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இணைய சேவைகளை ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

பலத்தப் பாதுகாப்பில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், பாதுகாப்பில் இருக்கும் காவல் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடைபெறுவதால் பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்பு படையினர் இறங்கியுள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் பல்வேறு பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ದೇಶದಲ್ಲಿ LPG ಗ್ಯಾಸ್, ಪೆಟ್ರೋಲ್ ಡಿಸೇಲ್ ಗೆ ಅಭಾವವಿಲ್ಲ- ಪೆಟ್ರೋಲಿಯಂ ಸಚಿವಾಲಯ ಸ್ಪಷ್ಟನೆ

ನವದೆಹಲಿ,ಮಾರ್ಚ್,13,2026 (www.justkannada.in): ದೇಶದಲ್ಲಿ LPG ಗ್ಯಾಸ್ ಸಿಲಿಂಡರ್, ಪೆಟ್ರೋಲ್ ಡಿಸೇಲ್...

ഒറ്റ രാത്രി കൊണ്ടല്ല, പൊങ്കാല ശുചീകരണം നടന്നത് മൂന്നുദിവസം കൊണ്ട്; വി.വി. രാജേഷിന്റെ വാദം തള്ളി കളക്ടര്‍

തിരുവനന്തപുരം: ആറ്റുകാല്‍ പൊങ്കാല ദിനത്തില്‍ തന്നെ തിരുവനന്തപുരം നഗരം പൂര്‍ണമായും ശുചിയാക്കിയെന്ന...

ஆதவ் டேபிள் ஃபேன்; ஆனந்த் எலெக்ட்ரிக் குக்கர்! – போட்டி போட்டு பரிசுப் பொருட்களை இறக்கும் தவெக-வினர்

தவெகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜய் உறுதி செய்திருக்கும் நிலையில், சென்னைக்குள்...

LPG Crisis: భారత్‌కు గుడ్‌ న్యూస్.. హార్ముజ్ నుంచి బయలుదేరిన LPG నౌకలు..

LPG Crisis: భారత్‌కు గుడ్ న్యూస్. దేశవ్యాప్తంగా ఇంధన సంక్షోభం ముంచుకొస్తున్న...