14
March, 2026

A News 365Times Venture

14
Saturday
March, 2026

A News 365Times Venture

Amit Shah: `திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது என்கிறார் ஸ்டாலின்; உண்மைதான்! ஆனால்..' – அமித் ஷா

Date:

மதுரை ஒத்தக்கடையில் பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரைக்கு வருகை தந்திருக்கிறார். மதுரை வந்திருக்கும் அவர் இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து மதுரை ஒத்தக்கடையில் பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம் அமித் ஷாவின் தலைமையில் இன்று (ஜூன் 8) நடைபெற்றது.

மதுரையில் அமித் ஷா

அங்கு பேசிய அவர், “மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்து இந்த உரையை தொடங்குகிறேன். இந்த மண்ணின் சொக்கநாதருக்கும், கள்ளழகர், முருகனை வணங்குகிறேன். தமிழ் நாட்டிற்கு வந்து தமிழ் மக்களை சந்தித்து தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன்.

மதுரை 3 ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த மாநகரம். இந்த மண்ணின் மைந்தன் பசும்பொன் முத்துராமலிங்க தேவரையும் வணங்குகிறேன். ஆயிரமாண்டு பழைமையான முருகன் கோயிலை சிக்கந்தர் மலை எனக் கூறுவதற்கு திமுக அரசுக்கு துணிச்சல் வந்துள்ளது. ஜூன் 22-ல் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு நமது வலிமையைக் காட்ட வேண்டும்.

`பா.ஜ.க ஆட்சி’

அமித் ஷாவால் திமுகவைத் தோற்கடிக்க முடியாது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். அது உண்மைதான். ஆனால், மக்கள் உங்களைத் தோற்கடிக்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் நாடித்துடிப்பு சொல்கிறேன், திமுகவை மக்கள் தூக்கி எறிவார்கள்.

ஆனால், மக்கள் உங்களைத் தோற்கடிக்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் நாடித்துடிப்பு சொல்கிறேன், திமுகவை மக்கள் தூக்கி எறிவார்கள். அப்பாவி மக்கள் கொல்லப்பட்டபோது வடக்கில் ஆதரவு கிடைத்தது. ஆனால், ஆப்பரேஷன் சிந்தூருக்கு தமிழ்நாட்டில் ஆதரவு இல்லை. மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவுக்கு வெற்றியை பா.ஜ.க நிரூபித்தது.

2025-ல் டெல்லியில் பா.ஜ.க எப்படி ஆட்சி அமைத்ததோ, அதேபோல் 2026-ல் தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும்.

மதுரையில் அமித் ஷா
மதுரையில் அமித் ஷா

`ஜூன் 22-ல் முருகனுக்கான மாநாடு’

முருகனுக்கான மாநாடு ஜூன் 22-ல் நடைபெறுகிறது. அதனை வெற்றிபெற நீங்கள் உதவ வேண்டும். இந்தக் கூட்டம் மாற்றத்தை உண்டாக்கும். திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும். 2026 தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சி அமைக்கும்.

நான் டெல்லியில் இருந்தாலும், தமிழ்நாடு மீதுதான் என் கவனம் இருக்கும். பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து எதிரிநாட்டிற்கு உள் சென்று அவர்களுக்கு பதிலடி கொடுத்தோம். இதுதான் மோடி அரசு.

`டாஸ்மாக் ஊழல்’

இந்தியாவில் தீவிரவாத தாக்குதலுக்கு முந்தைய அரசு பதிலடி கொடுத்தது இல்லை. ஆனால்., பாஜக அரசு, ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல், சர்ஜிகல் ஸ்ட்ரைக் ஆகியவற்றை நடத்தி இந்தியாவின் திறமையை வெளிப்படுத்தி உள்ளோம்.

மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவுக்கு வெற்றியை பாஜக நிரூபித்தது. மக்களுக்காக ஒதுக்கப்படும் திட்டத்தையும், நிதியையும் திமுக அரசு மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை. டாஸ்மாக்கில் 37 ஆயிரம் கோடி ஊழல் செய்து சட்டவிரோத ஆட்சியை தமிழகத்தில் செய்து வருகிறது.

மதுரையில் அமித் ஷா
மதுரையில் அமித் ஷா

`தேர்தல் அறிக்கை’

திமுக அரசு 100 க்கு 100 சதவிகிதம் தோல்வியை தழுவியுள்ளது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதாக கூறும் அரசு 10 சதவிகிதம் நிறைவேற்றி விட்டு 90 சதவிகிதம் நிறைவேற்றியதாக கூறி வருகிறது. தேர்தல் அறிக்கையை எடுத்து பார்த்து சொல்லுங்கள். இந்த ஆட்சியில் ஜாதிய மோதல், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை, வேலை இல்லாத இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருவது தொடர்கிறது.” எனக் கூறினார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ದೇಶದಲ್ಲಿ LPG ಗ್ಯಾಸ್, ಪೆಟ್ರೋಲ್ ಡಿಸೇಲ್ ಗೆ ಅಭಾವವಿಲ್ಲ- ಪೆಟ್ರೋಲಿಯಂ ಸಚಿವಾಲಯ ಸ್ಪಷ್ಟನೆ

ನವದೆಹಲಿ,ಮಾರ್ಚ್,13,2026 (www.justkannada.in): ದೇಶದಲ್ಲಿ LPG ಗ್ಯಾಸ್ ಸಿಲಿಂಡರ್, ಪೆಟ್ರೋಲ್ ಡಿಸೇಲ್...

ഒറ്റ രാത്രി കൊണ്ടല്ല, പൊങ്കാല ശുചീകരണം നടന്നത് മൂന്നുദിവസം കൊണ്ട്; വി.വി. രാജേഷിന്റെ വാദം തള്ളി കളക്ടര്‍

തിരുവനന്തപുരം: ആറ്റുകാല്‍ പൊങ്കാല ദിനത്തില്‍ തന്നെ തിരുവനന്തപുരം നഗരം പൂര്‍ണമായും ശുചിയാക്കിയെന്ന...

ஆதவ் டேபிள் ஃபேன்; ஆனந்த் எலெக்ட்ரிக் குக்கர்! – போட்டி போட்டு பரிசுப் பொருட்களை இறக்கும் தவெக-வினர்

தவெகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜய் உறுதி செய்திருக்கும் நிலையில், சென்னைக்குள்...

LPG Crisis: భారత్‌కు గుడ్‌ న్యూస్.. హార్ముజ్ నుంచి బయలుదేరిన LPG నౌకలు..

LPG Crisis: భారత్‌కు గుడ్ న్యూస్. దేశవ్యాప్తంగా ఇంధన సంక్షోభం ముంచుకొస్తున్న...