18
March, 2026

A News 365Times Venture

18
Wednesday
March, 2026

A News 365Times Venture

`திமுக பின்னால் ஒளிந்து ராஜ்சபா பதவி.. நம்பிய வாக்காளர்களுக்கு துரோகம்' – கமல் மீது வானதி விமர்சனம்

Date:

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கமல்ஹாசன் 2019, 2021 ஆகிய இரண்டு தேர்தல்களில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்து, ராஜ்ய சபா எம்பி பதவிக்காக திமுக-வுடன் கைக்கோத்துள்ளார்.

வானதி சீனிவாசன்

பொதுவாக சினிமா படப்பிடிப்பில் தான் கேமரா முன்பு ஒரு வசனம் பேசிவிட்டு பிறகு அதை மறந்துவிடுவார்கள். ஆனால், கமல் அரசியல் வாழ்க்கையிலும் வசனங்களை பேசிவிட்டு அதை மறக்கிறார்.

நாடாளுமன்றத்துக்குள் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று சுய நலத்துக்காக, தன்னை நம்பிய வாக்காளர்களுக்கு கமல் துரோகம் செய்துள்ளார். அவரால் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற முடியவில்லை. எனவே திமுக பின்னால் ஒளிந்து கொண்டு ராஜ்ய சபா எம்பி பதவியை பெற்றுள்ளார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

மதுரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரோடுஷோ நடத்தி மக்களை சந்தித்துள்ளார். அவர் பார்வையிட சென்ற இடங்களில் குப்பைகள் நிறைந்த கால்வாய் மீது துணிகளை மூடி மறைத்த சம்பவம் நடந்துள்ளது.

இது மிகவும் தவறானது. கோவையிலும் இதேபோல பல இடங்களில் குப்பைகளை மறைக்கிறார்கள். அரசின் தொடர் நடவடிக்கைகள் காரணமாக வட மாநிலங்களில் தீவிரவாதிகள் மற்றும் மாவோயிஸ்ட்கள் மனம் திருந்தி வருகிறார்கள். இந்த நடவடிக்கையால் அங்கு தீவிரவாதம் குறைந்துள்ளது.

தீவிரவாதம்

தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இங்குள்ள முன்னணி அரசியல் தலைவர்கள் பேசுவது சரியல்ல. தமிழ்நாட்டுக்காக மத்திய அரசு பல ஆயிரம் கோடி மதிப்பிலான ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಅಪರ ಸರ್ಕಾರಿ ವಕೀಲರ ಹುದ್ದೆ ಭರ್ತಿಗೆ ಅರ್ಜಿ ಅಹ್ವಾನ..

ಮಂಡ್ಯ,ಮಾರ್ಚ್,17,2026 (www.justkannada.in):  ಮಂಡ್ಯ ಜಿಲೆಯ ಮದ್ದೂರು ತಾಲ್ಲೂಕಿನ ಹಿರಿಯ ಶ್ರೇಣಿ...

വിജയം പുരുഷമുഖങ്ങള്‍ക്ക്; ഇത്തവണയും ഉറപ്പുള്ള സീറ്റുകള്‍ വനിതകള്‍ക്ക് നല്‍കാതെ ലീഗ്

കോഴിക്കോട്: നിയമസഭാ തെരഞ്ഞെടുപ്പിനുള്ള സ്ഥാനാര്‍ത്ഥി പട്ടിക പ്രസിദ്ധീകരിച്ചതിന് പിന്നാലെ വിമര്‍ശനത്തിനിരയായി മുസ്‌ലിം...

'ரஜினிக்கு 18% வாக்கு வங்கி இருந்தது; அதனால்தான் திமுக சூழ்ச்சி செய்தது! – ஆதவ் விளக்கம்!

தவெக சார்பில் சென்னை கொளத்தூர் தொகுதியில் இன்று கொள்கை விளக்க பொதுக்கூட்டம்...

Off The Record: కూటమిలో ఉన్న నమ్మకం లేదా..? రాజమండ్రిలో బీజేపీ మాస్టర్ ప్లాన్..!

Off The Record: ప్రజా సమస్యల పరిష్కారం కోసం ఓవైపు ఏపీ...