12
March, 2026

A News 365Times Venture

12
Thursday
March, 2026

A News 365Times Venture

Qatar: 'ட்ரம்புக்கு ஜெட் வழங்கியது லஞ்சமா?' – விமர்சனங்கள் குறித்து கத்தார் பிரதமர் விளக்கம்!

Date:

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கத்தார் சென்றிருந்தார். அங்கு கத்தாரின் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியைச் சந்தித்துப் பேசினார். அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஜெட் அன்பளிப்பாக வழங்கவிருப்பதாகத் தெரிவித்தார். தொடர்ந்து, “நட்பு நாடுகளுக்கு இடையே நடக்கும் இது போன்ற அன்பளிப்பெல்லாம் ஒரு சாதாரண விஷயம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் இரு நாடுகளிலும் பேசுபொருளானது. இது குறித்து விளக்கமளித்த ட்ரம்ப், “இப்படிப்பட்ட பரிசை முட்டாள் தான் நிராகரிப்பான். இந்த விமானம் அமெரிக்க பாதுகாப்பு துறைக்கு வழங்கப்படுகிறது” என்றார்.

ட்ரம்ப் – கத்தார் பிரதமர்

இந்த விமானம் வழங்கப்படுவதன் மூலம் கத்தார் அமெரிக்காவுக்கு லஞ்சம் கொடுக்கிறது… அமெரிக்காவிடம் செல்வாக்கு பெற முயற்சிக்கிறது என்றெல்லாம் பேசப்பட்டது.

இதற்கு விளக்கமளித்திருக்கும் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி, “மக்கள் ஏன் ஒருவருக்கு கொடுக்கும் பரிசை லஞ்சமாகவோ அல்லது ட்ரம்ப் நிர்வாகத்துடன் கத்தார் செல்வாக்கை செலுத்துவதற்கான ஒரு வழியாகவோ கருதினர் என்பது தெரியவில்லை.

ஆனால் அமெரிக்காவில் உள்ள மக்களும் அங்குள்ள அரசியல்வாதிகளும்கூட, கத்தாரை ஒரு நண்பராக, நம்பகமான கூட்டாளியாகப் பார்க்கிறார்கள். தேவைப்படும் போதெல்லாம் நாமும் அமெரிக்காவிற்கு ஆதரவாக இருக்கிறோம் என்றே நான் நம்புகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Ring Roads In Telangana: తెలంగాణ జిల్లాలకు మహర్దశ.. ప్రతీ జిల్లాకో రింగు రోడ్డు..

తెలంగాణ రాష్ట్రవ్యాప్తంగా రవాణా వ్యవస్థను సమూలంగా ప్రక్షాళన చేస్తూ.. ప్రతి జిల్లా...

ಶಾಸಕ ಭೈರತಿ ಬಸವರಾಜುಗೆ ಷರತ್ತುಬದ್ಧ ಜಾಮೀನು ಮಂಜೂರು

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,12,2026 (www.justkannada.in): ರೌಡಿಶೀಟರ್ ಬಿಕ್ಲು ಶಿವ ಕೊಲೆ ಪ್ರಕರಣದಲ್ಲಿ ಬಿಜೆಪಿ...

മിനാബിലെ പ്രൈമറി സ്‌കൂളിൽ നടന്ന ആക്രമണം മാപ്പർഹിക്കാത്ത യുദ്ധക്കുറ്റം; ഉത്തരവാദികൾ ശിക്ഷിക്കപ്പെടാതെ പോകില്ല: ഇറാൻ

ഇസ്താംബുൾ: ഇറാനിലെ മിനാബിൽ പെൺകുട്ടികളുടെ സ്കൂളിന് നേരെ അമേരിക്കയും ഇസ്രഈലും നടത്തിയ...

'தேமுதிகவுக்காக எதுக்கு தியாகம் பண்ணணும்?' – எரிச்சலில் கூட்டணி கட்சிகள்; அறிவாலயத்தின் ப்ளான் என்ன?

கூட்டணி கட்சிகளிடம், தொகுதிகளை குறைத்துக் கொள்ள சொல்லி வலியறுத்திக் கொண்டிருக்கிறது அறிவாலயம்....