14
March, 2026

A News 365Times Venture

14
Saturday
March, 2026

A News 365Times Venture

Trump: "நான் எச்சரித்ததால்தான்…" – இந்தியா-பாக். அணு ஆயுத போரைத் தான்தான் தடுத்ததாக ட்ரம்ப் பேச்சு

Date:

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்தப் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் ஜம்மு – காஷ்மீர் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம்.

இதையடுத்து இரு நாடுகளும் தாக்குதல்களை நடத்த நாடு முழுவதும் போர் பதற்றம் ஏற்பட்டது.

Operation Sindoor – ஆபரேஷன் சிந்தூர்

இரண்டு நாடுகளுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர முயல்வதாக அமெரிக்கா தொடர்ந்து பேசி வந்தது.

இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன் சமூக ஊடகப் பக்கத்தில், “அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டன.

இதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்று கூறியிருந்தார்.

மேலும், நேர்காணல் ஒன்றில், “இரு நாடுகளுடனும் நல்ல நட்பு இருக்கிறது. இரண்டு நாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.

பழிக்குப் பழி தீர்க்கப்பட்டது. இனி இருவரும் அனைத்தையும் நிறுத்திக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்” என்று பேசியிருந்தார்.

மோடி - ட்ரம்ப்
மோடி – ட்ரம்ப்

தற்போது, “பாகிஸ்தானும் இந்தியாவும் போரை நிறுத்தவில்லையெனில் வணிகம் இல்லை என நான் விடுத்த எச்சரிக்கையால்தான், இரு நாடுகளும் உடனே சமாதான ஒப்பந்தத்திற்கு வந்தன.

இப்போது இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் அமெரிக்கா அதிகமாக வணிகம் செய்ய உள்ளது. அணு ஆயுத போர் ஏற்பட வாய்ப்பு இருந்த நிலையை அதைத் தடுத்து நிறுத்திருக்கிறது அமெரிக்கா” என்று கூறியிருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Sachin Tendulkar: సచిన్ రిటైర్మెంట్ వెనుక ఇంత కథ ఉందా.. డ్రెస్సింగ్ రూంలోనే ప్లాన్..?

క్రికెట్ ప్రపంచంలో ‘దేవుడు’గా పిలవబడే సచిన్ టెండూల్కర్ పేరు వినగానే పరుగుల...

ಭೀಕರ ಅಪಘಾತದಲ್ಲಿ ಮೂವರು ಸಾವು.

ಮಂಗಳೂರು, ಮಾರ್ಚ್,13,2026 (www.justkannada.in): ಕೆಎಸ್ ಆರ್ ಟಿಸಿ ರಾಜಹಂಸ ಬಸ್...

ഗസയിലെ വംശഹത്യ; ഐ.സി.ജെയിലെ കേസില്‍ കക്ഷി ചേര്‍ന്ന് നെതര്‍ലാന്‍ഡ്‌സും ഐസ്‌ലാന്‍ഡും

ഹേഗ്: ഗസയില്‍ ഇസ്രഈല്‍ നടത്തുന്ന വംശഹത്യ സംബന്ധിച്ച് ഹേഗിലെ അന്താരാഷ്ട്ര നീതിന്യായ...

ராஜீவ் காந்தி பதவிக்கு வேட்டு! – `டெண்டர் முதல் இன்ஸ்டா வரை…' – வெடித்துக் கிளம்பிய விவகாரம்!

தி.மு.க வின் மாணவர் அணிச் செயலாளராகச் செயல்பட்டு வந்த ராஜீவ் காந்தியை...